அறையில் அடைத்து ஆபாச படம்.. சென்னை முதல் கூர்க் டூர் வரை நடந்தது என்ன?.. ஐஐடி மாணவி கண்ணீர் புகார்
சென்னை: சென்னையிலிருந்து கூர்க் வரை நடந்தது என்ன என்பது குறித்து ஐஐடி மாணவி போலீஸாரிடம் தனது புகாரில் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
2017ஆம் ஆண்டு முதல் சென்னை ஐஐடியில் தன்னுடன் பயின்று வந்த கிங்ஷீக்தேவ் சர்மா, சுபதீப் பானர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ ஆகியோர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக மேற்கு வங்கத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தனது துறை பேராசிரியரிடம் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில் மனவேதனையில் இருந்த அந்த பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையத்தில் மாணவர்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

9 மாதங்களாகியும்
எனினும் கடந்த 9 மாதங்களாகியும் மாணவியின் புகார் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து மாணவியின் பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்தது.

மகளிர் சங்கம்
இதையடுத்து கடந்த 22 ஆம் தேதி பாதிக்கப்பட்ட மாணவி மாதர் சங்கத்தினரும் மகளிர் ஆணையத் தலைவரை சந்தித்து புகார் அளித்தார். இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து குற்றம்சாட்ட பேராசிரியர், மாணவர்களை தேடி தனிப்படை போலீஸார் மேற்கு வங்கம் விரைந்தனர்.

நடந்தது என்ன
இந்த நிலையில் இந்த வழக்கில் முன்னாள் மாணவர் கிங்ஷீக்தேவ் சர்மா கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 4 ஆண்டுகளாக நடந்தது என்ன என்பது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது புகாரில் கூறுகையில் "கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்தது முதல் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை மன ரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தல் நடந்தது.

ஒரே மாநிலம்
ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர என்பதால் கிங்ஷீக் எனக்கு முதலில் அறிமுகமானார். பின்னர் என்னுடன் பழகிய அவர், எனக்கு தெரியாமலேயே புகைப்படம் எடுத்து அதை முகநூலில் பதிவு செய்தார். அந்த புகைப்படத்திற்கு பிறகு எனது வாழ்க்கையே நரகமாகிவிட்டது. கர்நாடகா மாநிலம் கூர்க்கிற்கு சென்ற போது ஒரு அறையில் வைத்து என்னை புகைப்படம் எடுத்த கிங்ஷீக், மிரட்டியே என்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார்.

ஆராய்ச்சி படிப்பு
இதுகுறித்து எச்ஓடியிடமும் ஆராய்ச்சி படிப்புக்கான கைடிடமும் தெரிவித்தும் குற்றத்தை தடுக்க முன் வராமல குற்றம் செய்தவர்களுக்கு துணை போனதால் நான் தற்கொலைக்கு முயன்றேன் என கண்ணீர் மல்க தெரிவித்தார். இந்த வழக்கில் மாணவியை வன்கொடுமை செய்தவர்கள், குற்றத்திற்கு துணை போனவர்கள் என மேலும் 7 பேரை பிடிக்க தனிப்படை போலீஸார் முயற்சித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications