"கழுகுக்கண்".. லிங்கம் + மலை + பொன்.. அட அவருமாமே.. எடப்பாடி பழனிசாமிக்கு வந்த சிக்கல்.. அப்ப சசி?

எடப்பாடி பழனிசாமி அதிருப்தியாளர்களை சரிகட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் இன்றைய தினம் காலையில் இருந்தே பரபரப்புகள் தொற்றிவரும் நிலையில், சசி தரப்பு மட்டும் குஷியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இன்றைய தினம் அதிமுகவின் பொதுக்குழு என்றதுமே, கடந்த 2 நாட்களாக பரபரப்பு தொற்றிக் கொண்டது.. எப்படியும் இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது..

மேலும், பொதுக்குழுவில் எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகள் தீர்மானங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

 தமிழ்மகன் உசேன்

தமிழ்மகன் உசேன்

அதேபோல அதிமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுவது, அதிமுகவின் தற்காலிக அவை தலைவராக தமிழ் மகன் உசேன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் புதிய அவை தலைவரை யாரைதேர்ந்தெடுப்பது என்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்பட்டது... ஆனால், நடந்துள்ள சம்பவங்கள் எல்லாம் வேறு மாதிரியாக உள்ளன.. உட்கட்சி பிரச்சனையுடன் சேர்த்து சசிகலா விவகாரம் ஓடியுள்ளதாகவே தெரிகிறது.

 அடையாளம்

அடையாளம்

பொதுக்குழு உறுப்பினர்கள் என்ற பெயரில் சசிகலா ஆதரவாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காகவே கூட்டத்தில் பங்கேற்க உறுப்பினர்களுக்கு போட்டோவுடன் கூடிய அடையாள அட்டைகளுடன் பங்கேற்றுள்ளனர்.. சொந்த கட்சிக்குள் அடையாள அட்டையுடன் பங்கேற்றுள்ளது ஆச்சரியத்தையும், அதிமுகவின் பயத்தையும் வெளிப்படுத்தி உள்ளது.

 விரிசல் ஏன்?

விரிசல் ஏன்?

மற்றொரு பக்கம் ஆலோசனை கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே அதிமுகவின் தொண்டர்களில் ஒரு தரப்பினர் ஒற்றை தலைமை குறித்த முழக்கத்தை பகிரங்கமாகவே எழுப்பிவிட்டனர்.. இதை பார்த்த ஓபிஎஸ் தரப்பினரும் தங்கள் பங்குக்கு முழக்கத்தை முன்னெடுத்துள்ளனர்.. இதனால் அதிமுகவின் விரிசல் இன்றைய தினம் மேலும் அதிகமாக தொடங்கி உள்ளது... இந்த பிளவுகளையும், விரிசல்களையும்தான் சசிகலா தரப்பு கண்கொத்தி பாம்பாகவே கவனித்து கொண்டுள்ளதாம்.

 சீனியர்கள்

சீனியர்கள்

முக்கியமான சீனியர்களின் நடவடிக்கைகள் எப்படி உள்ளன, அதிலும் அதிருப்தியாளர்களின் செயல்பாடுகள், பேச்சுக்கள் எப்படி உள்ளன? இந்த கூட்டத்தை அவர்கள் அணுகும் விதம் எப்படி இருக்கின்றன என்பதும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறதாம்.. பொன்னையன் அப்செட்டில் இருக்கிறார்.. செம்மலை அப்செட்டில் இருக்கிறார்.. வைத்திலிங்கம் அப்செட்டில் இருக்கிறார்.. இவர்கள் எல்லாம் சசிகலா பக்கம் எந்நேரமும் தாவக்கூடும் என்ற பேச்சு சமீப நாட்களாகவே உள்ள நிலையில், இவர்கள் என்ன முடிவு எடுக்க போகிறார்கள் என்பதே சசி தரப்பின் கவனிப்பாக உள்ளதாம்.

 மைத்ரேயன்

மைத்ரேயன்


இன்று காலையில், அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் பங்கேற்காமல் மைத்ரேயன் வெளியேறிவிட்டாராம்.. கூட்ட அரங்கிற்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் மைத்ரேயன் வெளியேறினார் என்று கூறப்படுகிறது.. ஏற்கனவே மைத்ரேயன், யாராலும் கண்டுகொள்ளாமல் தனித்து விடப்பட்டதாகவும், அதிருப்தியில் உள்ளதாகவும் சொல்லப்பட்டு வந்தது..

 கழுகு பார்வை

கழுகு பார்வை

இன்றைய தினம் இவர்ஏன் செல்போனுடன் சென்றார்? செல்போன் கொண்டு செல்லக்கூடாது என்று விதி இருக்குமானால், இவர் மட்டும் ஏன் விதிமுறைகளை மீற வேண்டும்? மிக மிக முக்கியமானதாக கருதப்படும் இந்த கூட்டத்தை, ஒரு சீனியர் கலந்து கொள்ளாமல் சென்றது ஏன்? என்ற கேள்விகளும் வட்டமடிக்க ஆரம்பித்துள்ளன.. அதேபோல, ஒற்றை தலைமை விவகாரம் இந்த கூட்டத்திலும் வெடித்துள்ளதால், மேலும் சிலர் தங்கள் பக்கம் வரக்கூடும் என்று சசிகலா தரப்பில் அதிகமாக நம்பப்படுகிறதாம்.. எதுவானாலும் இன்று மாலைக்குள் ஓரளவு தெரிந்து விடும் என்கிறார்கள்.. பார்ப்போம்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+