2532.. 3 மூவ்.. அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய எடப்பாடி.. முறியடிக்க ஓபிஎஸ்ஸின் அடுத்த பிளான் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை : டெல்லி சென்று அமித்ஷாவுடன் சந்திப்பு, பொதுக்குழு உறுப்பினர்களிடம் பிரமாண பத்திரங்களைப் பெற்று தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைப்பு என அடுத்தடுத்து அதிரடி காட்டி வருகிறது எடப்பாடி பழனிசாமி தரப்பு.

எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்ற நேரத்தில் காசிக்குச் சென்றார் ஓ.பன்னீர்செல்வம். முன்னதாக குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் சென்றிருந்த நிலையில், காசி விஸ்வநாதர் கோவிலுக்கும் சென்று திரும்பியுள்ளார் ஓபிஎஸ்.

அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தலுக்கான உட்கட்சி தேர்தலை விரைவில் நடத்தும் நடவடிக்கையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு இறங்கியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி தரப்பு, பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வேட்டை, டெல்லியில் மூவ் என அதிரடி ஆக்‌ஷனில் இறங்கியுள்ளதால், ஓபிஎஸ் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில்

சுப்ரீம் கோர்ட்டில்

ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி தரப்பு வேகமாக அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அமித்ஷா மீட்டிங்

அமித்ஷா மீட்டிங்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது, முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் உடன் இருந்தனர். அதிமுகவில் மோதல் நிலவி வரும் சூழலில், எடப்பாடி பழனிசாமி சந்திப்பை மோடி, அமித்ஷா ஆகியோர் தவிர்த்து வந்த நிலையில் திடீரென நடந்த இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2532 பத்திரம்

2532 பத்திரம்

இந்நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரை சுய விருப்பத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுத்ததாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு முழுமையான ஆதரவு அளிப்பதாகவும், 2532 பொதுக்குழு உறுப்பினர்களிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பு பிரமாண பத்திரம் பெற்றுள்ளது. அவ்வாறு பெறப்பட்ட கடிதங்களின் நகல்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளது ஈபிஎஸ் டீம்.

வழக்கு + தேர்தல்

வழக்கு + தேர்தல்

பொதுக்குழு உறுப்பினர்களிடம் பெற்ற பிரமாண பத்திரங்களை உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வரும் போது கூடுதல் ஆதாரங்களாக சமர்பிக்கவும் ஈபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி அதிமுகவை கைப்பற்றுவதுடன், பொதுக்குழுவில் அறிவித்தபடி பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்தி, அந்த பதவியை அடைய வேண்டும் என்பதிலும் குறியாக உள்ளார். அதற்கும் இந்த பிரமாண பத்திரங்களைப் பயன்படுத்த ஈபிஎஸ் திட்டமிட்டுள்ளார்.

ஓபிஎஸ் திட்டம்

ஓபிஎஸ் திட்டம்

எடப்பாடி பழனிசாமி இப்படியாக பல்வேறு திட்டங்களோடு காய்நகர்த்தி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் பொதுச்செயலாளர் கனவை முறியடிக்க ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இதற்காக டெல்லியில் பாஜக தலைவர்கள் மூலம் ஓபிஎஸ் ரகசிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்திரநாத், முக்கியமான பாஜக தலைவர்கள் சிலருடன் தொடர்ந்து பேசி வருவதாகக் கூறப்படுகிறது.

பன்னீர் போட்டி

பன்னீர் போட்டி

அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான், அந்த இடத்தில் வேறு யாரும் வரக்கூடாது என்று அனைத்து மாவட்ட அதிமுக நிர்வாகிகளிடமும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மறைமுகமாக பேசி வருகிறார்கள். அதையும் மீறி, அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டால் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடவும் ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளார். இதனை ஓபிஎஸ் ஆதரவாளர்களே சில பேட்டிகளில் வெளிப்படுத்தியும் உள்ளனர்.

அரசியல் ரூட்

அரசியல் ரூட்

மேலும், தான் தேர்தல் போட்டியிட எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தால் உடனடியாக நீதிமன்றம் சென்று அனுமதி வாங்குவதற்கான பணிகளை விரைவுபடுத்தவும் ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளார். மேலும், அதிமுகவில் தனது பலத்தை அதிகரிக்க தமிழகம் முழுவதும் சென்று தொண்டர்களை நேரில் சந்தித்து பேசவும் ஓ.பன்னீர்செல்வம் திட்டம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆன்மீக பயணத்திற்குப் பிறகு அரசியல் பயணம் தான் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+