சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சரத்குமார், பச்சமுத்துவுடன் கூட்டணி வைத்ததே தோல்விக்கு காரணம்..அடித்து சொல்லும் மக்கள் நீதி மய்யம்!

Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்து போட்டியிட்டதுதான் அதன் தோல்விக்கு காரணம் என அக்கட்சியின் துணைத் தலைவர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் தனித்தே போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம். கட்சி தொடங்கிய ஓராண்டிலேயே அசுர வளர்ச்சி அடைந்ததால் அக்கட்சி மீது இந்த சட்டசபைத் தேர்தலில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

மு.க ஸ்டாலின் முதல்வராக போடப்போகும் முதல் கையெழுத்து எதற்குத் தெரியுமா இல்லத்தரசிகளே மு.க ஸ்டாலின் முதல்வராக போடப்போகும் முதல் கையெழுத்து எதற்குத் தெரியுமா இல்லத்தரசிகளே

இந்த நிலையில் இக்கட்சி 133 தொகுதிகளில் போட்டியிட்டது. மீதமுள்ள 101 இடங்களில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும் பச்சமுத்துவின் ஐஜேகேவும் போட்டியிட்டது. இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் யாரும் வெல்லவில்லை.

கமல் கட்சி

கமல் கட்சி

வாக்கு சதவீதம் அடிப்படையில் முதலில் திமுக, அதிமுக, நாம் தமிழர், அமமுக, மக்கள் நீதி மய்யம் என 5ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்த படுதோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து நேற்றைய தினம் ஆழ்வார்பேடே்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கமல் ஆலோசனை நடத்தினார்.

நிறைய ஊர்கள்

நிறைய ஊர்கள்

அப்போது துணைத் தலைவர் பொன்ராஜ் பேசுகையில் சட்டசபைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் நிச்சயம் 3 ஆவது இடத்தை பிடித்திருக்கும். தேர்தல் பரப்புரையில் கமல்ஹாசன் நிறைய ஊர்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை.

தோல்வி

தோல்வி

பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்ததே தோல்விக்கு முக்கிய காரணம். தனித்து போட்டியிட்டிருந்தால் பெரும்பாலான தொகுதிகளில் வென்றிருக்கலாம். 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கான போதிய பொருளாதார வசதி இல்லை. கட்சியின் தொண்டர்களை கடன்காரர்களாக மாற்ற கூடாது என்பதால் கூட்டணி அமைத்தோம். ஆனால் அது இந்த முறை கை கொடுக்கவில்லை.

10 மடங்கு

10 மடங்கு

தற்போது பெற்ற 12 லட்சம வாக்குகளை காட்டிலும் 10 மடங்கு பெற இப்போதே பணியாற்ற தொடங்குவோம் என்றார் பொன்ராஜ். கூட்டணி வைத்து போட்டியிட்டதை பெரும்பாலான நிர்வாகிகளும் சுட்டிக் காட்டினர். கூட்டணி வைத்த இருவருமே அதிமுக, திமுகவுடன் ஏற்கெனவே கூட்டணியில் இருந்ததால் அதுவும் தமக்கு மைனஸ் ஆகிவிட்டதாக நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

English summary
Makkal Needhi Maiam Party's Deputy President Ponraj says that what is the reason behind MNM's failure.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X