இந்தி தெரியாது போடாவும்..கொத்தில்லா ஹோகோவும்! இந்தி எதிர்ப்பு 2.0! புரிந்து கொள்ளுமா ’டெல்லி’!
சென்னை : மேட்டூரை அடுத்த தாளையூரில் திமுக கட்சி அலுவலகம் முன்பு இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஒன்றிய விவசாய அமைப்பாளர் தங்கவேல் உடலில் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டாம் இரண்டாம் முறையாக தொடங்கியது எப்படி?
இந்தி தெரியாத நீங்கள் இந்தியரா?... விமான நிலையத்தில், திமுக எம்.பி கனிமொழியிடம் தொழிற் பாதுகாப்புப் படை அலுவலர் ஒருவர் எழுப்பிய கேள்வி இது. இதனை ட்விட்டரில் அவர் வெளியிட மீண்டும் தமிழகத்தி பற்றியது எதிர்ப்புத் தீ.
இதேபோன்ற அனுபவம் தனக்கும் ஏற்பட்டதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்தபின் இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து இந்தி திணிப்பும், இந்தி எதிர்ப்பும் தமிழக அரசியலில் 2.0 என களம் கண்டது.

இந்தி எதிர்ப்பு 2.20
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக, i am தமிழ் பேசும் indian, இந்தி தெரியாது போடா என டி ஷர்ட் அணிந்து காட்சியளித்தார். அவர் பற்ற வைத்த நெருப்பு, ட்விட்டரில் எரிமலையாய் வெடிக்க, இந்தி தெரியாது போடா, உலகம் முழுவதும் ட்ரெண்டானது. இந்த சூழலில்தான், எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்தி திவாஸ் எனப்படும் இந்தி தினம் கொண்டாட்டப்பட்டது.

அமித் ஷா
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட அமித் ஷா, பல நூற்றாண்டுகளாக இந்தி மொழிதான் இந்தியாவை ஒருங்கிணைப்பதாகக் குறிப்பிட்டார். எப்போதும்போல் இதற்கு தமிழகத்தில் இருந்து எதிர்ப்புக் குரல் கிளம்பும் என எதிர்ப்பார்த்த நேரத்தில், கன்னடர்கள் இந்த முறை களத்தில் குதித்துள்ளனர். கன்னட ரக்ஷன வேதிகே, கன்னட நவநிர்மாண் சேனா உள்ளிட்ட கன்னட அமைப்பினர், ரயில் நிலையங்கள், அரசு அலுவலகங்களில் இருந்த இந்தி மொழியை கடுங்கோபத்துடன் அழித்தனர். மைசூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், அங்கு கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்த இந்தி எழுத்துக்களை உடைத்து நொறுக்கினர்.

இந்தி கொத்தில்லா ஹோகோ
யுவன் ஷங்கர் ராஜா பாணியில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், தனஞ்சய் ஆகியோர் தங்களது டி ஷர்ட் மூலம், இந்தி திணிப்புக்கு எதிரான கருத்தை பதிவு செய்தனர். இந்தி கொத்தில்லா ஹோகோ! இந்தி தெரியாது போடா என்பதுதான் இந்தி கொத்தில்லா ஹோகோவின் விளக்கம். இந்த வாக்கியத்தை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து எதிர்ப்பை பதிவு செய்தனர் கன்னடர்கள். இது ஒருபுறமிருக்க, ஆச்சரியமளிக்கும் வகையில் வட இந்திய மாநிலமான பஞ்சாபிலும் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் வெடித்தது. அம்மாநிலத்தில் உள்ள இந்திப் பெயர் பலகைகளை, பஞ்சாபியர்கள் கருப்பு மை கொண்டு அழித்த வீடியோ சமூக வலைத்தலங்களில் வைரலாகி சலசலப்பை ஏற்படுத்தியது.

ஒரே தகுதி
இந்திய அரசியலமைப்புச் சட்டம், அனைத்து மொழிகளுக்கும் ஒரே தகுதியை வழங்கியுள்ளதால், ஒருபோதும் இந்தி தேசிய மொழியாக முடியாது. 22 மாநில மொழிகள், அங்கீகரிக்கப்பட்ட அலுவல் மொழிகளாக உள்ளன. மொழிகளுக்கு முதன்மைத்துவம் வழங்கியே இந்தியாவில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இந்தியாவுக்கு எப்படி இறையாண்மை உள்ளதோ, அப்படித்தான் மொழிவாரி மாநிலங்கள் ஒவ்வொன்றுக்கும் இறையாண்மை உள்ளது என்கின்றனர் தாய்மொழி உணர்வாளர்கள்.

புரிந்து கொள்ள வேண்டும்
ஒவ்வொரு மொழியும் தனக்கென தனி பன்பாடு, கலை, பொது ஒழுக்கங்களைக் கொண்டுள்ளது. இவற்றை அழிக்க முயல்வது, இந்திய இறையாண்மையை அழிப்பதற்கு ஒப்பானது என்பதை மத்திய ஆட்சியாளர்கள் எப்போது உணர்வார்கள் என்பதே தமிழகம் முதன்மையாக மொழிவாரி மாநிலங்களின் அரை நூற்றாண்டுக் கேள்வியாக உள்ளது. இந்நிலையில் தான் தமிழகத்தில் இந்தி திணிப்பும் இந்தி எதிர்ப்பும் மீண்டும் கிளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கான ஒரு இன்னுயிரும் ஈயப்பட்டிருக்கிறது. தற்கொலை என்றுமே தீர்வாகாது. அதே நேரத்தில் மக்களின் உணர்வுகளையும் அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும். காரணம் மொழி என்பதை தாண்டி தாய்மொழி என்பது அவரவர் உணர்வு.












Click it and Unblock the Notifications