சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நேரா பாஜகவுக்குத்தான் ஸ்கெட்ச்! ஒரே கல்லில் "3 மாங்காய்".. சளைக்காமல் அடித்த எடப்பாடி! பார்த்தீங்களா

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு அரசியலில் எடப்பாடி பழனிசாமி கடந்த இரண்டு நாட்களாக எடுத்து வரும் மூவ்கள், வைத்து வரும் விமர்சனங்கள் கவனம் பெற்றுள்ளன. திமுகவை மீண்டும் அவர் வலுவாக எதிர்க்க தொடங்கி உள்ளார்.

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக இடையிலான உறவில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளது. பாஜக தங்களை எதிர்க்கட்சி போல முன்னிறித்தி, திமுகவை தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இதனால் அப்செட் ஆன அதிமுக தலைகள் பாஜகவை விமர்சனம் செய்தனர்.

பாஜக எதிர்க்கட்சி என்ற பிம்பத்தை உருவாக்குகிறது. அந்த பிம்பத்தை உடைக்க வேண்டும். அதிமுக ஐடி விங்தான் பாஜகவின் இந்த பிம்பத்தை உடைக்க வேண்டும், என்று அதிமுக அமைப்புச்செயலாளர் பொன்னையன் சமீபத்தில் குறிப்பிட்டார்.

மூக்கை நுழைக்க முயற்சி வேண்டாம்! இறைவன் பதிலடி கொடுப்பார்! ஆதீன விவகாரத்தில் எடப்பாடி எச்சரிக்கை! மூக்கை நுழைக்க முயற்சி வேண்டாம்! இறைவன் பதிலடி கொடுப்பார்! ஆதீன விவகாரத்தில் எடப்பாடி எச்சரிக்கை!

அதிமுக பாஜக மோதல்

அதிமுக பாஜக மோதல்

அதோடு.. கூட்டம் கூட்டுவது எல்லாம் பெரிய விஷயமா. பாஜகவிற்கு கூடுவது காக்கை கூட்டம் என்று செல்லூர் ராஜு சமீபத்தில் விமர்சனம் செய்தார். பாஜக, காங்கிரஸ் எல்லாம் தேசிய கட்சிகள். தேசிய கட்சிகளால் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க முடியாது என்றும் ஜெயக்குமார் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பாஜக தலைகள் பதிலடி கொடுத்து இருந்தனர். இதனால் பாஜக - அதிமுக இடையிலான மோதல் பெரிதானது.

பாஜக பிம்பம்

பாஜக பிம்பம்

பாஜக தன்னை எதிர்க்கட்சி போல முன்னிறுத்துவதை அதிமுக விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதிமுகவின் இடத்தை பிடிக்க பாஜக முயல்வதாக அதிமுக நிர்வாகிகள் நினைத்த நிலையில்தான் இந்த மோதல் உருவெடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் கடந்த இரண்டு நாட்களாக எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆக்டிவாக அரசை விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளார். அதாவது தான்தான் எதிர்கட்சித் தலைவர் என்று உணர்த்தும் விதமாக மீண்டும் எடப்பாடி வேகம் காட்டி வருகிறார். நேற்று முதல்நாள், தமிழ்நாடு அரசை கடுமையாக சாடிய எடப்பாடி, அனைத்திலும் முதல் இடம் என்று சொல்லிக் கொள்ளும் தமிழக அரசு.. வெற்று விளம்பரம் செய்கிறது.

எடப்பாடி பதிலடி

எடப்பாடி பதிலடி

லஞ்சத்தில் மட்டும் தான் முதலிடத்தில் உள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் திமுக ஆட்சியில் திட்டமிட்டு, ஏதோ ஒரு சதி செயல் நடைபெறுவதாகத்தான் நான் பார்க்கிறேன்.அதிமுக ஆட்சியில் இருந்த போது ஆதீன விவகாரங்களுக்குள் யாரும் நுழையவில்லை. ஆனால் இப்போது திமுக இதில் தலையிடுவது தவறு என்று எடப்பாடி கடும் விமர்சனங்களை வைத்தார். இரண்டு நாட்களாக திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

ஆதீனம் விவகாரம்

ஆதீனம் விவகாரம்

ஆதீன விவகாரங்களில் அரசு மூக்கை நுழைக்க முயற்சி செய்கிறது. ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலத்தில் நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. திமுக தற்போது ஏதோ சந்தடி சாக்கில் ஆட்சிக்கு வந்துவிட்டது என்று கடும் விமர்சனங்களை வைத்த எடப்பாடி, இன்று நேரடியாக தருமபுரம் ஆதீனத்தை எடப்பாடி சென்று சந்தித்தார். பல்லக்கு விவகாரத்தில் தருமபுரம் ஆதீனம் - ஆளும் திமுக இடையில் கசப்பு ஏற்பட்ட நிலையில் எடப்பாடி சென்று தருமபுரம் ஆதீனத்தை சென்று பார்த்து இருக்கிறார்.

 அரசு விமர்சனம்

அரசு விமர்சனம்

இந்த விவகாரத்தில் அதிமுக தொடக்கத்தில் அமைதியாக இருந்தது. பாஜக மட்டுமே இதில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது. இந்த நிலையில்தான் ஆதீனங்களுக்கு சப்போர்ட்டாக எடப்பாடி களமிறங்கி உள்ளார். எடப்பாடி பழனிசாமியின் இந்த மூவ்கள் திமுகவை மட்டும் குறி வைக்கவில்லை என்கிறார்கள் கட்சி நிர்வாகிகள். தமிழ்நாட்டில் பாஜக தன்னை எதிர்க்கட்சியாக காட்ட விரும்புகிறது. உண்மையில் எதிர்க்கட்சி அதிமுகதான். தான்தான் எதிர்கட்சித் தலைவர் என்பதை உணர்த்தும் வகையில் எடப்பாடி இப்போது பேச தொடங்கி உள்ளார்.

எடப்பாடி மூவ்

எடப்பாடி மூவ்

ஆதீனத்துடன் சந்திப்பு, தமிழ்நாடு அரசு மீதான விமர்சனம் என்று எடப்பாடி எடுத்து இருக்கும் புதிய அஸ்திரம்.. அதை கருத்தில் கொண்டுதான். அமைதியாகவே இருந்தால் பாஜக 2ம் இடம் வந்துவிடும் என்பது அவருக்கு தெரியும். அதனால் பாஜகவின் ஆதீனம் பார்முலாவை கையில் எடுத்த எடப்பாடி.. திமுகவை சீண்டி இருக்கிறார். இதில் திமுகவிற்கு குட்டு வைத்ததோடு... பாஜகவிற்கு "நாங்கதான் எதிர்க்கட்சி" என்று மறைமுகமாக மெசேஜ் அனுப்பி இருக்கிறார் எடப்பாடி.

பாஜக

பாஜக

இது தொடக்கம்தான். இனியும் எடப்பாடி இதேபோல் கண்டிப்பாக அரசுக்கு எதிராக பேசுவார். எதிர்க்கட்சியாக அவர் பல முக்கிய முன்னெடுப்புகளை எடுப்பார் என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். அதாவது ஒருத்தன் தூங்கும் போது கொசு கடிச்சா அந்த கொசு வீரன் இல்லை என்பார்கள்.. அப்படித்தான் அதிமுக தூங்கிக்கொண்டு இருந்தது.. இப்போது எழுந்துகொண்டது.. இனி "கொசு" கடிக்காது என்கிறார்கள் ராயப்பேட்டை அதிமுக வாசிகள்! அது மட்டுமின்றி கட்சிக்குள் தனக்கு இதனால் பவர் உயரும் என்று எடப்பாடி நினைக்கிறாராம்.

கட்சிக்குள்ளும் தனக்கு

கட்சிக்குள்ளும் தனக்கு

ஏற்கனவே கட்சியில் இணை ஒருங்கிணைபாளராக இருந்தாலும் எடப்பாடி சொல்வதே சட்டமாக இருக்கிறது. எடப்பாடி இப்போது திமுகவை வலிமையாக எதிர்ப்பதன் மூலமும், சந்திப்புகளை நடத்துவதன் மூலமும் கட்சிக்குள் தனது தனிப்பட்ட தலைமைக்கான வாய்ப்பு ஏற்படும் என்று அவர் நினைக்கிறாராம். மொத்தத்தில் திமுகவிற்கு ஒரு பக்கம் எதிர்ப்பு.. பாஜகவிற்கு குட்டு.. கட்சியிலும் தனக்கு மதிப்பு உயர்வு என்று ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்கும் பிளானில் எடப்பாடி இருக்கிறார் போல!

English summary
What the reason behind Edappadi Palanisamy sudden moves against DMK government? தமிழ்நாடு அரசியலில் எடப்பாடி பழனிசாமி கடந்த இரண்டு நாட்களாக எடுத்து வரும் மூவ்கள், வைத்து வரும் விமர்சனங்கள் கவனம் பெற்றுள்ளன.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X