Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதான் சிஎஸ்கே பிளானா? இதுக்குத்தான் அன்னைக்கு அப்படி சொன்னாரோ.. உற்சாகத்தில் டிரெஸ்ஸிங் ரூம்.. ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2022 ஐபிஎல் போட்டிக்கு பின்பாக சி.எஸ்.கே அணியின் கேப்டன் தோனி என்ன செய்ய வாய்ப்புள்ளது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

2022 ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரையிலான போட்டிகளில் மும்பை, சி.எஸ்.கே அணிகள் மோசமாக ஆடி ஏமாற்றம் அளித்துள்ளன.

முக்கியமாக சி.எஸ்.கே அணி 10 போட்டியில் ஆடி 3 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது.

கேப்டன்

கேப்டன்

இந்த சீசனின் தொடக்கத்தில் சி.எஸ்.கே அணியின் கேப்டனாக ஜடேஜா இருந்தார். ஆனால் அவரால் கேப்டனாக சிறப்பாக முடிவு எடுக்க முடியவில்லை. கேப்டனாக பல்வேறு தவறுகளை செய்தார். அவர் எடுத்த பல முடிவுகள் அணிக்கு எதிராக திரும்பின. இதனால் ஜடேஜாவின் கேப்டன்சி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

தோனி கேப்டன்

தோனி கேப்டன்

இந்த நிலையில் சி.எஸ்.கே கேப்டனாக தோனி மீண்டும் பொறுப்பேற்றார். ஜடேஜா தானாக பதவி விலகிய நிலையில் தோனி மீண்டும் கேப்டன் ஆனார். தோனி கேப்டன் ஆன முதல் போட்டியில் சி.எஸ்.கே வென்றாலும் அடுத்த போட்டியில் மீண்டும் சி.எஸ்.கே தோல்வி அடைந்தது. இந்த நிலையில்தான் சி.எஸ்.கே கேப்டன் தோனி முக்கியமான சில விஷயங்களை பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.

 என்ன சொன்னார்

என்ன சொன்னார்

அதன்படி, என்னை நீங்கள் மஞ்சள் ஜெர்சியில் பார்க்கும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அது எந்த மஞ்சள் ஜெர்சி என்று சொல்ல முடியாது. அது எந்த மஞ்சள் ஜெர்சியாகவும் இருக்கலாம் என்று குறிப்பிட்டார். இந்த நிலையில்தான் தோனியின் பிளான் என்ன என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக சி.எஸ்.கேவின் முன்னாள் வீரர் வாட்சன் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

 வாட்சன்

வாட்சன்

அதில், தோனிக்கு பொதுவாக கேப்டன்சி மீது விருப்பம். அதே அளவிற்கு அவருக்கு கோச்சிங் மீதும் விருப்பம். இதை அவர் என்னிடம் பல முறை கூறி இருக்கிறார். தோனி மீண்டும் மஞ்சள் உடை போடுவேன் என்று கூறியது இதை சுட்டிக்காட்டி இருக்கலாம். அடுத்த வருடம் சி.எஸ்.கே கோச் ஆக தோனி முயற்சிக்கலாம் என்று வாட்சன் குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

    Next IPL-ல் Raina? Domestic Cricket-க்கு Return ஆகலாம் | OneIndia Tamil
     சி.எஸ்.கே வட்டாரம்

    சி.எஸ்.கே வட்டாரம்

    இந்த நிலையில் சி.எஸ்.கே வட்டாரத்தில் விசாரித்ததில், தோனி கோச் ஆவது பற்றி இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. அவருக்கு அணியின் இயக்குனர் ஆகும் விருப்பமும் உள்ளது.அதை வைத்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று கூறினர். இதனால் அவர் எப்போதும் போல சி.எஸ்.கே டிரெஸ்ஸிங் ரூமில் இருப்பார் . கவலைப்பட வேண்டாம் என்று கூறியுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+