சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

90 நாள் டைம்! எல்லாம் "புதிய ஜனாதிபதி" கையில்தான்.. ரிப்போர்ட் கேட்ட அமித் ஷா! வாட்ச் செய்யும் திமுக

Google Oneindia Tamil News

சென்னை: நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி டெல்லிக்கு அனுப்பி உள்ள நிலையில் இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.

தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி உள்ளார். குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக உள்துறை அமைச்சகத்திற்கு அவர் இந்த மசோதாவை அனுப்பி இருக்கிறார்.

முதல்முறை இந்த மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர் ஆர். என் ரவி.. இரண்டாவது முறை மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாவை நீண்ட தாமதத்திற்கு பின் அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

கட்சியை இணைச்சுடுங்க.. இல்லைனா.. ஆர்டர் போட்ட அமித் ஷா! நொந்து போன கட்சியை இணைச்சுடுங்க.. இல்லைனா.. ஆர்டர் போட்ட அமித் ஷா! நொந்து போன

 சென்றுவிட்டது

சென்றுவிட்டது

ஆளுநர் இப்படி அனுப்பும் மசோதா நேரடியாக குடியரசுத் தலைவருக்கு செல்லும் முன் உள்துறை அமைச்சகத்திற்கு செல்லும். அவர்கள்தான் இந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவார்கள். ஆனால் இதன் மூலம் உள்துறை அமைச்சகம் மசோதாவை நிராகரிக்க முடியாது. அவர்கள் குடியரசுத் தலைவருக்கு கண்டிப்பாக அனுப்ப வேண்டும். அதே சமயம் இந்த சட்டம் பற்றி உள்துறை அமைச்சகம் ஆராய முடியும்.

நடைமுறை என்ன?

நடைமுறை என்ன?

உயர் கல்வி பொதுப்பட்டியலில் இருக்கிறது. இதனால் சட்ட ரீதியாக இந்த மசோதாவில் என்ன இருக்கிறது என்பதை ஆராய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாம். இது பற்றி உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிக்கை கேட்டு இருக்கிறாராம். மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு மூலம் இந்த சட்டம் ஆராயப்பட்டு, அதிகாரிகள் மூலம் அறிக்கை தயார் செய்யப்படும். பலர் சேர்ந்து இந்த சட்டத்தில் என்ன இருக்கிறது, இது சாத்தியமா என்று ஆராய்ச்சி செய்வார்கள்.

ஆய்வு நடக்கும்

ஆய்வு நடக்கும்

இந்த சட்டத்தில் இருக்கும் ஷரத்துகள், விவரங்கள் இருக்கின்றன என்று ஆய்வு செய்யப்படும். மொத்தம் இதற்கு 90 நாட்கள் வரை அதிகபட்சம் எடுக்கப்படலாம். ஆனால் தேவைப்படும் பட்சத்தில் அதற்கு முன்பே கூட அறிக்கை உள்துறை தாக்கல் செய்ய முடியும். இந்த அறிக்கை உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்யப்படும். பின்னர் அந்த அறிக்கை ஆய்வு செய்யப்பட்ட பின் குடியரசுத் தலைவருக்கு செல்லும். 90 நாட்கள் அவகாசம் இருந்தாலும் பொதுவாக சில நாட்களிலேயே மசோதா குடியரசுத் தலைவருக்கு. சென்றுவிடும்

டைம் எடுக்கலாம்

டைம் எடுக்கலாம்

ஆனால் இந்த முறை நீட் விவகாரத்தில் கொஞ்சம் டைம் எடுத்து அறிக்கை அளிக்கப்படலாம் என்கிறார்கள். அதோடு, இந்த வருடம் ஜூலை மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.கடந்த முறை பாஜக கூட்டணி சார்பாக முன்னிறுத்தப்பட்ட ராம்நாத் கோவிந்த் பெரும்பான்மை வாக்குகளை பெற்று இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஆனார் இந்த முறை பொது வேட்பாளரை நிறுத்தி எப்படியாவது எதிர்க்கட்சிகளின் வாக்குகளை அள்ளி குடியரசுத் தலைவரை தேர்வு செய்ய பாஜக முயலும் என்கிறார்கள்.

குடியரசுத் மாறிவிடுவார்

குடியரசுத் மாறிவிடுவார்

பெரும்பாலும் நீட் மசோதா குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மூலம் தீர்ப்பு ஒப்புதல் அல்லது நிராகரிக்கப்படும் முன் தேர்தல் நடந்துவிடும். இதனால் புதிதாக பதவி ஏற்கும் ஜனாதிபதிதான் இந்த சட்டம் மீது முடிவு எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அது யாரோ.. அவர்தான் பெரும்பாலும் இந்த சட்டத்தில் முடிவு எடுப்பார். இந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளரை வெற்றிபெற செய்வதில் திமுகவின் ஆதரவு முக்கியம் என்பதால் இந்த மசோதா விவகாரத்திலும் திமுகவிற்கு சாதகமான சூழ்நிலை நிலவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
What will happen next as the governor sent the NEET exemption bill to the president?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X