"அந்த ஒன்று மட்டும் நடந்தால்.." எடப்பாடி நிலை என்னவாகும் தெரியுமா.. டிடிவி தினகரன் வார்னிங்
சென்னை: ஜெயலலிதாவின் உண்மைத்தொண்டர்கள் ஓரணியில் திரண்டால்தான் வரும் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்றும் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் எடப்பாடி நிலை என்னவாகும் என்றும் டிடிவி தினகரன் பேசியுள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத்தலைமை பிரச்சினையால் ஓபிஎஸ்- ஈபிஎஸ் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழுவுக்கு எதிராக ஓ பன்னீர் செல்வம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதிமுக மெகா கூட்டணி அமைக்கும்
இந்த வழக்கின் விசாரணை வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு மத்தியில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மெகா கூட்டணி அமைக்கும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். அதிமுக அமைக்கும் இந்த மெகா கூட்டணியில் இணைய தயார் என்றும் திமுகவை வீழ்த்த யாருடன் வேண்டும் என்றாலும் கூட்டணிக்கு தயாராக இருப்பதாக டிடிவி தினகரன் கூறியிருந்தார்.

டிடிவி தினகரனை கூட்டணியில் இணைக்க
இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரனை அதிமுகவில் கூட்டணியில் இணைப்பதற்கு 1 சதவீதம் கூட வாய்ப்பு இல்லை என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த டிடிவி தினகரன், ''அமமுக சுதந்திரமாக இயங்கும் இயக்கமாகும். அம்மாவின் தொண்டர்கள் எங்கிருந்தாலும் ஓரணியில் திரண்டு திமுகவை எதிர்க்க வேண்டும் என்று தான் சொல்லி இருக்கிறேன்.

அம்மாவின் தொண்டர் இல்லை
மெகா கூட்டணி என்று சொல்பவர்கள், திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைப்பவர்கள் எல்லோரும் இணைய வேண்டும் என்று மட்டுமே கூறினேன். எடப்பாடி பழனிசாமியின் பேட்டியின் மூலம் அவர் அம்மாவின் தொண்டர் இல்லை என்பதை புரிந்து கொள்கிறேன். ஒரு சதவீதம் கிடையாது. அரைக்கால் சதவிகிதம் கூட எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைபோம் என்று நான் எங்கும் கூறவில்லை. அதிமுக செயல்படாத கட்சியாக உள்ளது எடப்பாடி பழனிசாமி விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்" என்றார்.

கருத்து மோதல்
இந்தவிவகாரம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையேயான கருத்து மோதலுக்கு வித்திட்டுள்ளது. இந்த நிலையில், கும்பகோணத்த்தில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது டிடிவி தினகரன் கூறியதாவது: இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் எடப்பாடியின் நிலை என்னவாக இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்து இருக்கிறது.

துணிச்சல் இருந்தால் தனிக்கட்சி அமையுங்கள்
துணிச்சல் இருந்தால் எடப்பாடி பழனிசாமி தனியாக ஒரு கட்சி ஆரம்பித்து ஒரு புதிய சின்னத்தில் போட்டியிடுகின்ற நிலை வந்தால் அவரால் எதுவும் செய்ய முடியாது. அவரது சொந்த ஊரில் கூட உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் வெற்றி பெற முடியாத நிலையே உள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சையே கட்சியை விட்டு நீக்கியவர். ஜெயலலிதாவின் உண்மைத்தொண்டர்கள் ஓரணியில் திரண்டால்தான் வரும் தேர்தலில் வெற்றி பெற முடியும்.

திமுகவுடன் கூட்டணி செல்வேனா?
கால்பந்து வீராங்னை பிரியா மரணம் தொடர்பாக தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாகவே இருந்தது. பிரியாவின் குடும்பத்திற்கு இழப்பீடு, அரசு வேலை , வீடு அறிவித்தது வரவேற்புக்கு உரியது. இப்படிக் கூறுவதால் திமுகவுடன் கூட்டணி செல்வேன் என்று எதிபார்க்காதீர்கள்" என்றார்.
-
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா












Click it and Unblock the Notifications