• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"வரேன் இருங்க".. அங்கேயே போக போறாராமே.. பறக்கும் யூகங்களால் ஒரே பரபரப்பு.. கலக்கத்தில் எடப்பாடி டீம்?

ஓபிஎஸ் விரைவில் டெல்லிக்கு செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் தினம் தினம் ஒரு தகவல் வட்டமடித்து வரும் நிலையில், டெல்லிக்கு ஓபிஎஸ் சுற்றுப்பயணம் செல்ல போவதாக ஒரு செய்தி இணையத்தில் கிளம்பி உள்ளது.

ஜி - 20 மாநாடு தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், அதன் கூட்டங்கள் குறித்து, பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் 4 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.

முன்னதாக, இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி, மாநில முதலமைச்சர்களுக்கும், பிரதான எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஒரே முட்டுக்கட்டை.. ஓபிஎஸ்சுக்கு எதிராக இடைக்கால உத்தரவு வேண்டும்.. எடப்பாடி உச்சநீதிமன்றத்தில் மனு ஒரே முட்டுக்கட்டை.. ஓபிஎஸ்சுக்கு எதிராக இடைக்கால உத்தரவு வேண்டும்.. எடப்பாடி உச்சநீதிமன்றத்தில் மனு

 டேமேஜ் இமேஜ்

டேமேஜ் இமேஜ்

அந்தவகையில், தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு வந்து சேர்ந்தது. இத்தனை மாதமும், இடைக்கால பொதுச்செயலாளராக பாஜக மேலிடம் எடப்பாடி பழனிசாமியை ஏற்று கொள்ளாத நிலையில், "அதிமுக இடைக்கால பொது செயலாளர்" என்று குறிப்பிட்டே அழைப்பிதழ் விடுக்கப்பட்டது. இது எடப்பாடி தரப்புக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.. அதேசமயம், ஓபிஎஸ்ஸுக்கு இது கடுப்பை தந்துள்ளதாக தெரிகிறது.. அவ்வாறான அழைப்பு இல்லை என்பதால், ஓபிஎஸ்ஸை பாஜக மேலிடம் கழட்டிவிட்டுவிட்டதோ, எடப்பாடியை மட்டும் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டுவிட்டதோ? என்ற கேள்விகள் இணையத்தில் வலம் வர ஆரம்பித்து விட்டன.

 சாய்ஸ் சான்ஸ்

சாய்ஸ் சான்ஸ்

இது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு எதுவுமே பேசாமல் இருந்தநிலையில், திடீரென இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியிருந்தார்.. எனினும், கடிதம் எழுதி விளக்கம் கேட்பது முறை என்பதால், அவ்வாறு எழுதியதாகவும், அது அவ்வளவாக பலனளிக்காத நிலையில், நேரடியாகவே டெல்லி சென்று விடலாம் என ஓபிஎஸ் தரப்பு முடிவெடுத்துள்ளதாகவும் 2 நாட்களுக்கு முன்பு தகவல்கள் வந்தன.. அப்படி டெல்லி செல்லும் பட்சத்தில், பிரதமர் மோடி, மற்றும் அமித்ஷாவை நேரடியாகவே சந்தித்து பேச வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.

வைத்திலிங்கம்

வைத்திலிங்கம்

பிறகு, ஓபிஎஸ் தன் மகனை மட்டும் டெல்லிக்கு அனுப்ப உள்ளதாக இன்னொரு தகவல் வட்டமடித்த நிலையில், தற்போது ஓபிஎஸ்ஸே ஸ்டிரைட்டாக, டெல்லி செல்ல முடிவாகி உள்ளதாம்.. கடந்த 2 மாதங்களுக்கு முன்பேயே ஓபிஎஸ் டெல்லி சென்று, மேலிட தலைவர்களை சந்திக்க உள்ளதாக, மூத்த தலைவர் வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் சொல்லியிருந்த நிலையில், அவ்வாறு எந்த பயணமும் ஓபிஎஸ் மேற்கொள்ளவில்லை.. இப்போது டெல்லி செல்வதாக சொல்வதுகூட, எடப்பாடிக்கு அனுப்பிய அழைப்பிதழ் விவகாரத்திற்காக மட்டுமே இருக்காது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

தம்பிதுரை

தம்பிதுரை

இன்னும் சொல்லப்போனால், அழைப்பிதழில் "இடைக்கால பொதுச்செயலாளர் என்ற குறிப்பிட்ட விவகாரத்துக்கும் மேலிட தலைவர்களுக்கும் சம்பந்தமே இல்லையாம்.. வெளியுறவு துறை சம்பந்தப்பட்ட, வெளிமாநில அதிகாரிகள், எடப்பாடியின் பதவியை குறிப்பிட்டு அந்த அழைப்பிதழை அனுப்பியிருந்ததாகவும், இதற்கு பின்னணியில் மூத்த தலைவர் தம்பிதுரை இருந்திருக்கலாம் சொல்கிறார்கள்.. அப்படியிருக்கும்போது, வெறும் அழைப்பிதழ் விவகாரத்தை மட்டுமே வைத்து, எடப்பாடியுடன் பாஜக பணிந்துவிட்டதாக, ஒருபிம்பம் தேவையில்லாமல் இங்கு கட்டமைக்கப்பட்டு வருகிறதாம்.

 இன்விடேஷன்

இன்விடேஷன்

எனவே, இதையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொண்டு, ஓபிஎஸ் டெல்லிக்கு செல்ல வாய்ப்பில்லை என்றாலும், "ஒருங்கிணைப்பாளர்" என்ற முறையில் தனக்கு அழைப்பிதழ் அனுப்பப்படாத காரணம் என்ன? தருமர், ரவீந்திரநாத் என எம்பிக்கள் தன்சார்பாக உள்ள நிலையில், அழைப்பிதழ் ஏன் தனக்கு அனுப்பப்படவில்லை என்பதை டெல்லியில் கேட்க ஓபிஎஸ் முயலலாம் என்கிறார்கள்.. அநேகமாக இன்று மாலை அல்லது நாளைக்குள் இந்த சுற்றுப்பயணம் பற்றிய தகவல் வெளியாகலாம் என்றும் தெரிகிறது..

டென்ஷன்

டென்ஷன்

ஆக, ஓபிஎஸ் நிஜமாகவே டெல்லிக்கு போக போகிறாரா? இல்லையா? அப்படியே செல்வதானாலும் எதற்காக செல்ல உள்ளார்? மேலிட தலைவர்களை சந்திக்க வாய்ப்புள்ளதா? என்பது போன்ற எந்த தகவல்களும் இதுவரை உறுதியாக தெரியாத நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஒருவித கலக்கம் மட்டும் சூழ்ந்துள்ளதாம்.. என்னதான் நடக்கப் போகிறது, பார்ப்போம்..!!!

English summary
When is OPS going to Delhi and Is it possible to talk to the leaders about Edappadi Palaniswami
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X