Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனைவியை கற்புக்கரசி என்று சொன்னால் சந்தோஷப்பட்டால்தானே திட்டினால் கவலைப்படனும்.. பெரியார் Thug Life

Subscribe to Oneindia Tamil

சென்னை: திராவிடர் கழக முன்னாள் தலைவரான, பெரியாரின் 48வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில், அண்ணா சாலை, சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்தும், அவரது உருவப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கலந்துகொண்டனர்.

இதனிடையே பெரியார் பற்றி பலரும் தங்களது கருத்துக்களை முக நூல்களில் எழுதி நினைவு கூர்கிறார்கள். எழுத்தாளர் விஜய் பாஸ்கர் விஜய் தனது முகநூலில் எழுதியிருப்பது இதுதான்:

 விமர்சனங்கள்

விமர்சனங்கள்

பெரியார் ஒரு கூட்டத்துக்கு வரும் போது வழியெங்கும் கழுதை, அயோக்கியன் என்று அவரைத் திட்டி எழுதி வைத்திருக்கிறார்கள். மேலும் அவர் மனைவியை மோசமான பொருள் வருமாறு எழுதி வைத்திருக்கின்றனர். அதைப் பார்த்த பிறகு பெரியார் கூட்டத்தில் பேசுகிறார்.அதன் சுருக்கம் இதுதான்-

 பெரியார் பேச்சு

பெரியார் பேச்சு

"வழியெங்கும் வசவு வார்த்தைகளைப் பார்த்தேன். உண்மையில் இது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. மஸ்தான் சாகிபு என்றொருவர் இருந்தார்.
அவருடைய எச்சிலை இது பிரசாதம், இது தெய்வீக குணம் கொண்டது என்று வாங்கி உண்ட உயர்த்தப்பட்ட ஜாதி இந்துக்களை எனக்குத் தெரியும்.
தெய்வீக குணம் ஒருவரிடம் இருக்கிறது என்று நினைத்தால் நம்மவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

 மகாத்மா காந்தி

மகாத்மா காந்தி

ஒரு மனிதனை தெய்வமாக்கிவிட்டால் அதன் பிறகு அந்த மனிதனை கேள்வி கேட்க முடியுமா? அவன் கருத்துக்களில் உள்ள குறைகளை சொல்ல முடியுமா?
இதை மக்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். காந்தி விஷயத்திலும் இதே தவறைச் செய்கிறார்கள். காந்தியை மகாத்மா என்கிறார்கள். அதன் பிறகு அவர் கருத்தை எப்படி விமர்சனம் செய்ய முடியும். விமர்சனமில்லாத கருத்து எப்படி வீரியம் பெறும். எப்படி திருத்தமாக செம்மையாக்கப்படும். எப்படி மெருகேற்றப்படும். அதற்கான வாய்ப்பே இல்லாமல் போகிறதே? அவ்வகையில் என்னை அயோக்கியன் என்று சொல்வதை வரவேற்கிறேன். என்னை தெய்வம் என்று சொன்னால் நான் சொன்ன கருத்தை ஆராயாமல் அப்படியே ஏற்றுக் கொள்ளும் நிலைமை மக்களுக்கு ஏற்படும். அயோக்கியன் என்று சொல்லிவிட்டால் நான் என்ன சொன்னாலும் அதை கவனமாக ஆராய்ந்து அதிலுள்ள நல்லது கெட்டதைப் புரிந்து நல்லவற்றை எடுத்து கெட்டவற்றை புறந்தள்ளும் பக்குவம் வரும். நான் மக்களிடம் எதிர்ப்பார்ப்பதும் அந்த பக்குவத்தையே.

 கற்புக்கரசி

கற்புக்கரசி

ஆக இவர்கள் என் வேலையை எளிதாக்கிவிட்டார்கள். என்னை அயோக்கியனாக கழுதையாக எழுதி வைத்திருப்பதை வரவேற்கிறேன். நண்பர்கள் இதை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என் மனைவியை கற்புக்கரசி என்று யாராவது சொன்னால் அதற்கு நான் மகிழ்ச்சியடைந்தால்தானே, அவரை தப்பாக சொல்வதற்கு வருத்தப்படவும் செய்ய வேண்டும். தாராளமாக அவர்கள் நினைத்தபடி சொல்லிக் கொள்ளலாம்."

 படிக்க ஆரம்பியுங்கள்

படிக்க ஆரம்பியுங்கள்

ஒருவேளை பெரியார் எழுதிய ஒரு புத்தகத்தைக் கூட நீங்கள் படிக்காமல் இருந்தால் இன்றிலிருந்து படிக்க ஆரம்பியுங்கள். கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தில் இருக்கும் 'குடியரசு' இதழ் தொகுதி அருமையானது. அதிலிருந்து தொடங்கலாம். அது கொடுக்கும் வாசிப்பு இன்பமும், சிந்தனை இன்பமும் வேறு எதுவும் கொடுக்காது. தொடங்குவோம்....

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+