15 நாளாகியும் எட்டிக்கூடப் பார்க்காத எடப்பாடி.. ரிப்பேர் வேலைகள் மும்முரம்.. கெத்தாக நுழைய திட்டம்?
சென்னை : அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று இரண்டு வாரங்கள் கடந்திருக்கும் நிலையில், ஈபிஎஸ் இதுவரை அதிமுக தலைமைக் கழகத்திற்குச் செல்லவில்லை.
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவதற்கு முன்னதாக, ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் ரத்தக்களறியானது.
ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையேயான மோதல் காரணமாக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. பின்னர், எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது.

அதிமுக தலைமை அலுவலகம்
ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வானகரத்தில் பொதுக்குழு நடத்தியபோது, ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்றார். அப்போது ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இருதரப்பினரும் மாறி மாறி கடுமையாகத் தாக்கிக் கொண்டதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து, அலுவலகத்திற்குள் நுழைந்த ஓபிஎஸ் தரப்பினர், உருட்டுக்கட்டைகளால் அலுவலகத்தைச் சூறையாடினர். இதையடுத்து மயிலாப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அதிமுக அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தார்.

ஈபிஎஸ்ஸுக்கு சாதகமாக வந்த தீர்ப்பு
அதிமுக தலைமைக் கழகத்திற்கு அரசு வைத்த சீலை அகற்றி அலுவலகத்தை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் இருதரப்பினரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம் அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதேநேரம், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தொண்டர்களை ஒரு மாதம் வரை அங்கு அனுமதிக்கக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது.

திறக்கப்பட்டது தலைமைக் கழகம்
இதனையடுத்து, அதிமுக தலைமை அலுவலக சாவி, தலைமைக் கழக மேலாளரும், ஈபிஎஸ் ஆதரவாளருமான மகாலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, உள்ளே சென்ற எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அலுவலகத்தின் உள்ளே இருந்த பல விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் முக்கியமான ஆவணங்களைக் காணவில்லை என்று புகார் தெரிவித்தனர்.

ஆவணங்கள் கொள்ளை
மேலும், ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் மீது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் சி.வி.சண்முகம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கடந்த சனிக்கிழமையன்று புகார் அளித்தனர். அவர்களது புகாரில், அதிமுக அலுவலகத்தில் இருந்த பொருட்கள், ஆவணங்களை ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் திருடிச் சென்றுள்ளனர். அதிமுக தலைமை அலுவலக அசல் பத்திரங்களை காணவில்லை, அவற்றை கொள்ளையடித்துச் சென்ற ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடன் வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்தனர்.

சிபிஐக்கு மாற்றக் கோரிக்கை
இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் காணாமல் போன வழக்கை சிபிஐ அல்லது சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரி டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையரிடம் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ரிப்பேர் பணிகள் தீவிரம்
இதற்கிடையே, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தைச் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உடைந்த கதவுகள், கண்ணாடிகள், மேஜை, நாற்காலி, பீரோ போன்றவற்றை புதிதாக வாங்கவும், கணினி உள்ளிட்டவற்றை புதிதாக நிறுவவும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சேதமடைந்த அனைத்து பகுதிகளையும் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஒரு வாரத்திற்குள் சீரமைப்பு பணிகள் நிறைவடையும் எனக் கூறப்படுகிறது.

ஈபிஎஸ் செல்வாரா
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி இதுவரை அதிமுக தலைமை அலுவலகத்திற்கே செல்லவில்லை. அவருக்கு சாதகமான தீர்ப்பு வந்திருந்தாலும், அலுவலகத்தைப் பார்வை இடக்கூட சி.வி.சண்முகம் தான் சென்றார். இந்த சீரமைப்புப் பணிகள் முடிவடைந்த பிறகு எடப்பாடி பழனிசாமி அலுவலகத்திற்குச் செல்வார் என்று கூறப்படுகிறது.

1 மாதம் ஆகுமா?
அதேசமயம், 1 மாத காலத்திற்கு அதிமுக தலைமைக் கழகத்திற்குள் தொண்டர்களை அனுமதிக்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், தொண்டர்கள் கூட்டம் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி செல்ல மாட்டார் என்றும், 1 மாத காலம் நிறைவடைந்த பிறகே எடப்பாடி பழனிசாமி கொண்டாட்டமாக தலைமை அலுவலகத்திற்குள் காலடி எடுத்து வைப்பார் என்றும் ஒரு தகவல் வருகிறது. எடப்பாடி பழனிசாமி என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications