3 மேட்டர்கள்.. மோப்பம் பிடிச்சாச்சு.. "மேலிட" காதில் கிசுகிசுத்த சீக்ரெட்கள்.. நடுவுல திமுக வேற..!
பாஜக உதவும் என்ற எதிர்பார்ப்பில் ஓபிஎஸ் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாக சொல்கிறார்கள்
சென்னை: எடப்பாடி பழனிசாமி ஒருபக்கம், ஓபிஎஸ் மறுபக்கம் என பிரிந்து கிடக்க, அதிமுகவின் நிலைமை இப்படியே தான் இருக்குமா என்ற கவலை ரத்தத்தின் ரத்தங்களிடம் ஒட்டிக் கொண்டுள்ளது.. இப்படிப்பட்ட சூழலில், ஓபிஎஸ் இனி என்ன செய்வார்? என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது.
Recommended Video
ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை தீவிரமான பாஜக ஆதரவாளர்.. பாஜக அபிமானி.. பாஜக தலைவர்களுக்கு நெருக்கமானவர்..
தமிழகத்துக்கு எதிரான திட்டங்கள், அறிவிப்புகள் வெளிவரும்போதுகூட, மேலிடத்தை பகைத்து கொள்ளாமல், யாருக்குமே வலிக்காமல் ஒரு கண்டன அறிக்கையை ஓபிஎஸ் வெளியிடுவார்.

அமித்ஷா
அதேபோல, எடப்பாடி - ஓபிஎஸ் இடையே அதிகார மோதல்கள் வெடிக்கும்போதெல்லாம், முதலில் ஓபிஎஸ் டெல்லிக்கு செல்வார்.. அவருக்கு பின்னாடியே எடப்பாடியும் விரைந்து செல்வார்.. பிறகு 2 பேரும் ஒற்றுமையாக சென்னை வந்து சேருவார்கள்.. இதுதான் கடந்த காலங்களில் தமிழகம் அறிந்த செய்தி.. ஆனால், இந்த முறை அப்படி இல்லை.. வழக்கம்போல் தகராறு வெடித்தது.. வழக்கம்போல் டெல்லிக்கு சென்றார் ஓபிஎஸ்.. ஆனால், அவருக்கான ஆதரவு அங்கு முழுமையாக கிடைத்ததா என்பது இதுவரை தெரியாமல் உள்ளது..

நட்டா
ஆனால், அமித்ஷாவை நேரில் ஓபிஎஸ் சந்திக்க முடியவில்லை என்ற தகவலும் கசிந்தது.. எனினும், பாஜக ஒருபக்கம், இங்கு நடப்பதை எல்லாம் டெல்லிக்கு ரிப்போர்ட்டாக அனுப்பி வைத்து கொண்டுதான் இருக்கிறதாம்.. முக்கியமாக, உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், பாஜக தேசியத் தலைவர் நட்டாவும் அவைகளை கவனத்துடன் கேட்டுக் கொண்டும் வருகிறார்களாம்.. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல் முடிந்ததுமே, அதிமுக விவகாரத்தில், தேசிய தலைவர்கள் தலையிட்டு, ஒரு சுமூக முடிவை கொண்டு வருவார்கள் என்றும் நம்பப்பட்டு வருகிறது.

எடப்பாடி பழனிசாமி
இப்படிப்பட்ட சூழலில், ஓபிஎஸ் தரப்பு என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற தகவல்கள் பரபரத்து வருகின்றன.. பொதுக்குழுவில் புதுபுது தீர்மானங்கள் போடப்பட்ட பிறகுதான், ஓபிஎஸ் தெம்பாகவே உள்ளாராம்.. இதற்கு 3 காரணங்கள் சொல்லப்படுகின்றன.. என்னதான் எடப்பாடி தரப்பில் அதிரடிகளை செய்தாலும், இறுதியில் முடிவு டெல்லி கையில் உள்ளதே முதல் காரணம்.. டெல்லி சப்போர்ட் இருந்தால் மட்டுமே ஓபிஎஸ் அதிமுகவில் நிலைத்து நிற்கு முடியும் என்பதால், மேலிட முடிவையே அதிகமாக நம்புகிறாராம்.

சீக்ரெட்கள்
அதுமட்டுமல்ல, "ஒருங்கிணைப்பாளர் பதவியில் நீங்கள் இந்த நிமிடம்வரை இருக்கிறீர்கள்.. அதனால், சட்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது.. சட்டத்துக்கு உட்பட்டே ஒவ்வொன்றையும் நீங்கள் செய்து வருவதால், நமக்கு பின்னடைவு ஏற்படாது என்று ஆதரவாளர்கள் நம்பிக்கை தந்து வருகிறார்களாம்.. மேலும், "சட்டவிதிகளை திருத்தியது செல்லாது" என்ற வழக்கும் தற்போது நிலுவையில் உள்ளதால், எப்படியும் அது நமக்கு சாதகமாகவே இருக்கும், அத்துடன் தேர்தல் ஆணையமும் நமக்கு சாதகமாகவே இருக்கும்" என்றும் நம்பிக்கை வார்த்தைகளை விதைத்து வருகிறார்களாம்.

தூபம் - எடப்பாடி
இதற்கு நடுவில், டெல்லி தலைவர்களிடம், எடப்பாடி பழனிசாமியை பற்றி, "தூபம்" போடும் வேலையும் ஆரம்பமாகிவிட்டதாம்.. ஆரம்பத்தில் இருந்தே எடப்பாடி பாஜகவுக்கு உடன்பட்டு நடக்கவில்லை.. இப்போதுகூட வேண்டுமென்றே வெறுப்பேற்றுவதற்காகத்தான் காங்கிரசுடன் மறைமுகமாக நட்பு கொண்டு வருகிறார் என்றெல்லாம் காதில் போடப்பட்டு வருகிறதாம்.. இது மேலிடத்தை நிச்சயம் கோபப்படுத்தும், அதன்மூலம் ஓபிஎஸ்ஸுக்கே சாதகமான முடிவை மேலிடம் எடுக்கும் என்றும் நம்பிக்கை அதிகரித்துள்ளதாம்.

சீக்ரெட்கள்
எல்லாவற்றிற்கும் மேலாக, திமுக அரசும், முடிந்த அளவுக்கு, மறைமுக ஒத்துழைப்பு தந்து வருவதால், ஓபிஎஸ் மிகுந்த உற்சாகத்துடன், கனத்த நம்பிக்கையுடன் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.. இப்படி எடப்பாடிக்கு எதிரான காய் நகர்த்தல்கள் நடந்து கொண்டிருக்க, எடப்பாடி டீமுக்குள்ளேயே புகைச்சல்கள் புகைய ஆரம்பித்துவிட்டதுதான் ட்விஸ்ட்டாக உள்ளது. அடுத்து என்ன நடக்க போகிறது என்று தெரியவில்லை.. பார்ப்போம்..!
-
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications