சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஏய்.. அத திருமாவளவன் கையால ஸ்டாலினுக்கு கொடுத்தீங்களே.. ஓகேவா".. எகிறிய கங்கை அமரன்.. சீறும் வன்னி

கங்கை அமரன் பேச்சுக்கு வன்னி அரசு கண்டனம் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: கங்கை அமரன் பேசிய பேச்சு, சூட்டை கிளப்பி வரும் நிலையில், விசிக அதற்கு தன்னுடைய கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இளையராஜா கூறியிருந்த கருத்துக்களின் சர்ச்சைகள் இன்னும் அடங்கவில்லை.. ஒரு புத்தகத்துக்கு எழுதப்பட்டதாக கூறப்பட்ட முன்னுரையின் தாக்கம் தொடர்ந்து வட்டமடித்து வருகிறது.

இந்த விவகாரம் வெடிக்க தொடங்கிய உடனேயே, தன்னுடைய கருத்தை திரும்ப பெற மாட்டேன் என்று தன்னுடைய சகோதரர் கங்கை அமரனிடம் தெரிவித்து இருக்கிறார் இளையராஜா..

இளையராஜா விவகாரம்.. பேசுறவன் முட்டாள்.. அறிவே இல்லாத நாய்... கங்கை அமரன் கடும் கோபம் இளையராஜா விவகாரம்.. பேசுறவன் முட்டாள்.. அறிவே இல்லாத நாய்... கங்கை அமரன் கடும் கோபம்

 கங்கை அமரன்

கங்கை அமரன்

இதை பற்றி கங்கை அமரனே அப்போது ஒரு விளக்கம் தந்திருந்தார்.. "அவருக்கே போன் செய்து அதை பற்றி கேட்டேன். உங்களை நிறைய பேர் விமர்சிக்கிறார்களே என்று.. அதற்கு அவர், பிரதமர் மோடி குறித்து எழுதிய கருத்தை திரும்ப பெற மாட்டேன் என்று இளையராஜா என்னிடம் சொன்னார்... அது தன்னுடைய சொந்த கருத்து, அதே சமயம் தன்னுடைய கருத்து பற்றி மற்றவர்கள் சொல்லும் கருத்தை விமர்சிக்கவும் மாட்டேன் என்று என்னிடம் கூறினார்" என்று கங்கை அமரன் கூறியிருந்தார்.

 கங்கை அமரன் பேச்சு

கங்கை அமரன் பேச்சு

இப்படிப்பட்ட சூழலில்தான், தனியார் செய்தி நிறுவனமான, தமிழ் நியூஸூக்கு கங்கை அமரன் ஒரு பேட்டி தந்திருக்கிறார். அதில் அந்த 3 பக்க முன்னுரையை நீங்கள் தான் எழுதியதாக தகவல் பரவிவருவதாக கேள்வி எழுப்பப்பட்டது... அதற்கு கங்கை அமரன் அளித்த காரசார பதில்கள்தான் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.. அத்துடன் கண்டனமும் சேர்ந்தே எழுகிறது.

அண்ணாதுரை

அண்ணாதுரை

"இளையராஜாவுக்கு பதில் நான் முன்னுரை எழுதி கொடுத்தேன் என்பவர்கள், இளையராஜா இசையமைத்த 1400 படங்களுக்கு, நான் இசை அமைத்தேன் என்று சொல்வார்களா? 15,16 புத்தகம் எழுதின அறிவாளிக்கு நான் முன்னுரை எழுதி கொடுத்தேன்னு எவன் சொன்னான்? என்னய்யா பெரிய சமூகம் சமூகம்? அண்ணாதுரைக்கு நான் கதை எழுதிக்கொடுத்து அவர் வெளியிடுகிறார் என்று சொன்னால், அவருக்கு அசிங்கம் இல்லை? கலைஞர் எத்தனை புத்தகம் எழுதியிருக்கிறார், கண்ணதாசன் எத்தனை பாட்டு எழுதியிருக்கிறார். எல்லாதையும் கங்கை அமரன் எழுதிக்கொடுத்தாருனு சொன்ன அசிங்கம் இல்லை?

 பொறுய்யா.. பொறுய்யா..

பொறுய்யா.. பொறுய்யா..

யார் யார் பெயரில் வருவதோ, அவங்களிடம் தான் கேள்வி கேட்கனும், குற்றவாளி போல் என்னை நேரடியாக கேட்கக்கூடாது என்று பேசி கொண்டே வந்தவர், "யோவ்... பொறுய்யா... பொறுய்யா.. ஆமா நான் தான் எழுதினேன். நீ என்ன பண்ணுவ? அப்படி பேசுறவன் எல்லாம் பேசுறவன் முட்டாள், அறிவே இல்லாத நாய்.. மோடியை அம்பேத்கருடன் ஒப்பிடுவது என் இஷ்டம்.. எனக்கு பிடிக்கும். எனக்கு பால்கோவா சாப்பிட கூட தான் பிடிக்கும். அது எப்படி பிடிக்காலானு நீ கேள்வி எழுப்ப முடியுமா?

 வாயை மூடு

வாயை மூடு

ஏய்.. பொறுய்யா.. வாயை மூடு..ஏய்.. அம்பேத்கர் என்ன சொன்னார்னு தெரியுமா? முதல இளையராஜா எழுதின முன்னுரையை படிச்சியா நீ? அம்பேத்கரை திருமாவளவுடன் ஒப்பிட்டு பேசுகிறீங்க.. மோடியுடன் ஏன் ஒப்பிட்டு பேசக் கூடாது? அன்னைக்கு ஒரு நிகழ்ச்சியல சொல்றாங்க..அம்பேத்காரின் விருதை அம்பேத்கரே வாங்கி அம்பேத்காருக்கு கொடுக்குறாருனு ஸ்டாலினுக்கு கொடுத்தீங்க.. அதுலாம் ஓகேவா உங்களுக்கு... ஏய்.. ஏய்.. ஏய் பதில சொல்றா...

 திருமாவளவன்

திருமாவளவன்

அம்பேத்கர் விருதை இன்னொரு அம்பேத்கருனு சொல்ற திருமாவளவன் கையால ஸ்டாலினுக்கு கொடுத்தீங்களே அது ஓகேவா உனக்கு..' என்று கங்கை அமரன் ஆவேசமாக பேசினார். ஏற்கனவே இளையராஜா விவகாரத்தில் கடுப்பில் உள்ளவர்கள், கங்கை அமரன் இப்படி பேசியதுமே மேலும் எரிச்சலுக்கு ஆளானார்கள்.. இதுகுறித்து "இளையராஜா பாவம், இது ஆர்எஸ்எஸ் செய்யும் சதி" என்று ஏற்கனவே திருமாவளவன் சொல்லி வருகிறார்..

 பலிஆடுகள்

பலிஆடுகள்

கங்கை அமரன் பேட்டியை பார்த்ததும், ஒப்பீடு செய்வதில் இரு வகை உண்டு.. நேர்மறை ஒப்பீடு, எதிர்மறை ஒப்பீடு.. அம்பேத்கர் இருந்தால் மோடியைப் பாராட்டுவார் என்பது அம்பேத்கரைச் சங்கிமயப்படுத்தும் சனாதன முயற்சி. முழுமையாய் அவரை விழுங்கத் துடிக்கும் சங்கத்துவக் கும்பலின் சதிச்செயல். பாவலரின் சகோ'க்கள்.. பரிவார்களின் பலிஆடுகளா? என்று கேட்டிருந்தார்.

 வன்னி அரசு

வன்னி அரசு

இந்நிலையில், விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு அடுத்த கேள்வியை எழுப்பி உள்ளார்.. இதுகுறித்த ட்வீட்டில், எவ்வளவு நல்ல மனிதரும் சனாதனிகளோடு சேர்ந்தால் இப்படி தான் மாறிப்போவர். மாற்றுக்கருத்து சொல்வது தவறல்ல; இளையாராஜாவுடன் அனிருத்தை கூட ஒப்பிடலாம். ஆனால், ஒரு ஊடகவியலாளரை இவ்வளவு தரம் தாழ்த்திப்பேசுவது சரியா? இதற்கு பெயரே #சனாதனம்! இதை எந்த ஊடகத்தினரும் கண்டிக்காதது ஏன்? என்று கேள்வி கேட்டுள்ளார்.

துணிச்சல்

துணிச்சல்

இதற்கு பலரும் திரண்டு வந்து ஆதரவு தந்து வருகின்றனர்.. ஏய்ங்கிறான் நாய்ங்கிறான்.. ஊடகத்தினரை மரியாதை குறைவாக பேசும் இவர் யாரின் துணிச்சலில் பேசுகிறார் என்பது எல்லா ஊடகத்தினருக்கும் தெரியும்.. தெரிந்தும் ஊடகங்கள் ஊமையாகி போனதேனோ! என்றும், ஈவிகேஎஸ் அவ்வளவு கேவலமாக பேசியிருக்கிறார்? அவரை ஏன் யாருமே கண்டிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

 சக புரிதல்

சக புரிதல்

மேலும் சிலர், பேட்டி ஆரம்பிக்கும் போது நிபந்தனை விதிக்கிறார் அரசியல் வேண்டாம் என்று,முதல் கேள்வியே அரசியல்.. ஒரு சக புரிதல் மிக அவசியம்.. ஊடகவியலாளர்கள் பதவியில் இல்லாதவர்களிடத்தில சரமாரி கேள்வி கேட்பதும், பதவியில் உள்ளவர்களிடத்தில் கேள்விகளை முன்பே காட்டி தணிக்கை பெறுவதும் இது எவ்வகை நியாயம்? என்று வன்னி அரசுக்கு பதில் கேள்வி கேட்டு வருகிறார்கள்..

பலி ஆடுகள்

பலி ஆடுகள்

கங்கை அமரன் பேட்டியை பார்த்ததும், ஒப்பீடு செய்வதில் இரு வகை உண்டு.. நேர்மறை ஒப்பீடு, எதிர்மறை ஒப்பீடு.. ஒப்பீடு செய்வதில் இருவகை உண்டு.1.நேர்மறை ஒப்பீடு 2.எதிர்மறை ஒப்பீடு கரும்பு இனிக்கும் ; கனிகள் இனிக்கும் - இது நேர்மறை கரும்பு இனிக்கும் வேம்பு கசக்கும் இது எதிர்மறைஅம்பேத்கர் ; பெரியார் - இது நேர்மறை. அம்பேத்கர் ; மோடி- இது எதிர்மறை. அம்பேத்கரும் மோடியும்.. அம்பேத்கர் இருந்தால் மோடியைப் பாராட்டுவார் என்பது அம்பேத்கரைச் சங்கிமயப்படுத்தும் சனாதன முயற்சி. முழுமையாய் அவரை விழுங்கத் துடிக்கும் சங்கத்துவக் கும்பலின் சதிச்செயல். பாவலரின் சகோ'க்கள்.. பரிவார்களின் பலிஆடுகளா? என்று கேட்டிருந்தார்.

English summary
When will the gangai amaran controversy be resolved and vck vanni arasu condemns கங்கை அமரசன் பேச்சுக்கு வன்னி அரசு கண்டனம் தெரிவித்துள்ளார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X