சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புயல்களைப் போல.. உருமாறிய கொரோனா வகைகளுக்கும் தனித்துவமான பெயர்கள்.. சவுமியா சுவாமிநாதன் தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: ஒவ்வொரு புயலுக்கு தனித்துவமாகப் பெயர்களைச் சூட்டுவதைப் போல உருமாறிய கொரோனா வகைகளுக்கும் புதிய பெயர்களை உலக சுகாதார அமைப்பு அறிவிக்கவுள்ளதாக அந்த அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளர் சவுமியா சுவாமிநாதன் குறிப்பிட்டார்.

Recommended Video

    அக்கம் பக்கத்தில் பேசினால் கூட Mask போடுங்க.. 6 அடி இடைவெளியை கடைபிடிங்க.. Dr Prakash

    கொரோனா பரவலின் தாக்கம் உலகில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகைகள் வைரஸ் பாதிப்பைப் பல மடங்கு அதிகரித்துள்ளது.

    இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி போட 3 ஆண்டுகள் வரை ஆகும்.. ஏற்றுமதி செய்தது ஏன்? சீரம் விளக்கம்இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி போட 3 ஆண்டுகள் வரை ஆகும்.. ஏற்றுமதி செய்தது ஏன்? சீரம் விளக்கம்

    பல்வேறு நாடுகளிலும் கண்டறியப்படும் இந்த உருமாறிய கொரோனா வகைகளை B.1.1.7, B.1.617 போன்ற ஆங்கில எழுத்து மற்றும் எண் காம்பினேஷன்களில் பெயரிடப்படும்.

     உருமாறிய கொரோனா

    உருமாறிய கொரோனா

    இருப்பினும் இதைக் குறிப்பிடுவது கஷ்டம் என்பதால் ஊடகங்களும் மக்களும் பெரும்பாலும் எங்கு உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டதோ அதையே பெயராக வைத்து அழைக்கின்றனர். அதாவது பிரிட்டனில் முதலில் கண்டறியப்பட்ட B.1.1.7 வகை கொரோனாவை பிரிட்டன் வகை கொரோனா என்றும் B.1.351 கொரோனா வகையைத் தென் ஆப்பிரிக்கா கொரோனா வகை என்றும் மக்கள் அழைக்கின்றனர். முதலில் கொரோனா வைரசை கூட வூஹான் வைரஸ் என்றே சிலர் குறிப்பிட்டனர்.

     மத்திய அரசு

    மத்திய அரசு

    இது போல நாடுகளை வைத்து கொரோனா வகைகளை அழைப்பது அந்த நாடுகளைக் களங்கப்படுத்தும் விதமாக அமைந்துவிடுகிறது. கடந்த வாரம்கூட B.1.617 வகையை இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா என்று தான் அழைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

     உலக சுகாதார அமைப்பு

    உலக சுகாதார அமைப்பு

    இந்நிலையில், ஒவ்வொரு புயலுக்குத் தனித்துவமாகப் பெயர்களைச் சூட்டுவதைப் போல உருமாறிய கொரோனா வகைகளுக்கும் புதிய பெயர்களை உலக சுகாதார அமைப்பு அறிவிக்கவுள்ளதாக அந்த அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளர் சவுமியா சுவாமிநாதன் குறிப்பிட்டார். உலகம் முழுவதும் ஏற்படும் புயல்களுக்குக் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் பெயரிடும் வழக்கம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

     புதிய பெயர்கள்

    புதிய பெயர்கள்

    இது குறித்து மேலும் அவர் கூறுகையில், புதிய பெயரிடும் முறை விரைவில் தொடங்கும். அது புயலுக்கு அளிக்கப்படும் பெயர்களைப் போல இருக்கும். இதன் மூலம் உருமாறிய கொரோனா வகை கண்டறியப்படும் இடங்களைக் கொண்ட சில நாடுகள் களங்கப்படுத்துவது தடுத்து நிறுத்தப்படும். அதுபோன்ற பெயர்களை வைப்பதன் மூலம் மக்களும் எளிதாக உருமாறிய கொரோனா பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும்" என்று அவர் தெரிவித்தார்.

    English summary
    WHO Chief Scientist Soumya Swaminathan On Corona variant names
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X