தமிழகத்தின் அடுத்த சட்டம் ஒழுங்கு டிஜிபி யார்?.. "அவர்"தாங்க!.. 28-இல் வெளியாகிறது அறிவிப்பு?
சென்னை: தமிழ்நாட்டின் அடுத்த சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அறிவிப்புகள் வரும் 28ஆம் தேதி வெளியாகும் என தெரிகிறது.
Recommended Video
தமிழக டிஜிபியாக பதவி வகித்து வந்த டிகே ராஜேந்திரனின் பணிக்காலம் முடிவடைந்த போது கடந்த 2019ஆம் ஆண்டு சட்ட ஒழுங்கு டிஜிபியாக ஜே கே திரிபாதியை தமிழக அரசு நியமித்தது.
தமிழகத்தின் 29 ஆவது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக ஜே கே திரிபாதி பதவியேற்றார். வரும் ஜூன் மாதம் 30-ஆம் தேதியுடன் அவரது பதவிக்காலம் முடிவடைகிறது.

முக்கியத்துவம் வாய்ந்த பதவி
இதையடுத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பதவிக்கு யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பணி மூப்பு அடிப்படையில் சைலேந்திர பாபு, கரன் சின்ஹா, சஞ்சய் அரோரா, சுனில் குமார், சிங், கந்தசாமி உள்ளிட்டோரில் இருந்து ஒருவர் தேர்வு செய்யப்படுவார் என தெரியவந்துள்ளது.

தமிழக அரசு
இவர்களது பெயர்கள் அடங்கிய கோப்புகளை மத்திய உள்துறை அமைச்சகத்தில் கொடுத்து ஒப்புதல் வாங்க தமிழக தலைமைச் செயலாளர் வெ இறையன்பு டெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 பேரின் கோப்புகளில் இருந்து உள்துறை அமைச்சரகம் மூவரை தேர்வு செய்து தமிழக அரசிற்கு அனுப்பி வைக்கும்.

நியமனம்
அந்த 3 பேரில் யாரேனும் ஒருவரை டிஜிபியாக தமிழக அரசு நியமனம் செய்து கொள்ளலாம். அதற்கான கோப்புகளையும் மத்திய அரசிற்கு அனுப்பி வைத்து ஒப்புதல் பெற வேண்டும். ஒரு வேளை தமிழக அரசின் தேர்விற்கு மத்திய உள்துறை ஒப்புதல் அளிக்கவிட்டால், மத்திய அரசு தேர்வு செய்த மற்ற இருவரில் இருந்து ஒருவரை தமிழக அரசு தேர்வு செய்யும்.

அறிவிப்பு எப்போது?
தற்போது ரயில்வே துறை டிஜிபியாக உள்ளார். இவர் ஊழலுக்கு எதிரானவர். சுகாதாரம், தூய்மை இந்தியா, ஆரோக்கியம் ஆகியவற்றில் அக்கறை கொண்டவர். மிகவும் கண்டிப்பான அதிகாரியாவார். ஒரு அரசு மக்களிடம் நற்பெயரை எடுக்கவும் மக்களுக்கு நல்லது செய்யவும் இது போன்று கண்டிப்பான, ஊழலுக்கு எதிரான அதிகாரிகளை தேர்வு செய்வது முக்கியத்துவம் ஆகும். சைலேந்திர பாபுவை தேர்வு செய்ததற்கான அறிவிப்புகள் வரும் 28 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications