தூத்துக்குடி ரூ.18000 கோடி கப்பல் முதலீடு ஆந்திராவுக்கு கைநழுவியது ஏன்? வெள்ளை அறிக்கை தேவை: ராமதாஸ்
சென்னை: தூத்துக்குடியில் அமையவிருந்த ரூ.18,000 கோடி மதிப்பிலான பொதுத்துறை நிறுவனமான MDL-ன் மெகா கப்பல் கட்டும் தளம், தமிழக அரசின் சில அதிரடி விதிமீறல் குற்றச்சாட்டுகளால் தடம் மாறி அண்டை மாநிலமான ஆந்திராவிற்குச் சென்றுள்ளது. இந்த விவகாரத்தில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இதன் பின்னணியில் உள்ள உண்மைகளை உடைக்கத் தமிழக அரசு உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என சவால் விடுத்துள்ளார்.
கடந்த 2025 செப்டம்பர் மாதம் பவநகர் மாநாட்டில், தூத்துக்குடியில் ரூ.15,000 முதல் ரூ.18,000 கோடி முதலீட்டில், "மரைடைம் அம்ரித் கால் விஷன் 2047" திட்டத்தின்கீழ் அதிநவீன கிரீன்ஃபீல்ட் கப்பல் கட்டும் தளத்தை அமைக்க தமிழக அரசின் "கைடன்ஸ் தமிழ்நாடு" நிறுவனத்துடன் மத்திய பொதுத்துறை நிறுவனமான MDL முக்கிய ஒப்பந்தம் செய்திருந்தது.

தூத்துக்குடியில் கப்பல் முதலீடு
ஆனால், மத்திய அமைச்சகம் (MoPSW) இதற்கான அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களை வெளியிடுவதற்கு முன்பாகவும், ஏல நடைமுறைகள் எதுவுமே இல்லாமல், விதிகளை மீறி தென்கொரியாவின் HD Hyundai நிறுவனத்தை "அங்கர் இன்வெஸ்டராக" தேர்வு செய்து அப்போதைய முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசு பிரத்யேக ஒப்பந்தம் மேற்கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதனால் உள்நாட்டு பொதுத்துறை நிறுவனங்கள் புறக்கணிக்கப்பட்டு வெளிநாட்டு நிறுவனத்திற்கு சாதகமாகச் செயல்பட்டதாக எழுந்த சர்ச்சையால் ஏமாற்றமடைந்த MDL நிறுவனம், தூத்துக்குடி திட்டத்தை முழுமையாகக் கைவிட்டுவிட்டு, பக்கத்து மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் ரூ.29,000 கோடிக்கும் அதிக முதலீட்டில் மெகா கப்பல் கட்டும் திட்டத்தை தொடங்க ரெடியாகி வருகிறதாம்.
இயற்கை துறைமுக வசதி
தூத்துக்குடியின் சாதகமான இயற்கை துறைமுக வசதிகள் இருந்தும், தமிழக அரசின் இத்தகைய வெளிப்படைத்தன்மையற்ற செயல்பாடுகளால் பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளும், பெருமளவிலான பொருளாதார வளர்ச்சியும் அண்டை மாநிலத்திற்கு செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சில கேள்விகளை கேட்டு, தன்னுடைய அதிருப்தியையும் வெளிப்படுத்தி உள்ளார்.. இது தொடர்பான அவரது அறிக்கையில், மசாகான் டாக் (MDL) கப்பல் கட்டும் திட்டம் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய மிகப்பெரிய தொழில் முதலீட்டுத் திட்டங்களில் ஒன்றாகும், இது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டிருந்தால் ஆயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆந்திராவில் முதலீடு, லாபம், அசுர வளர்ச்சி
மேலும் தன்னுடைய அறிக்கையில், "இந்த திட்டத்தின் மூலம் கப்பல் கட்டுதல், கப்பல் பழுதுபார்ப்பு, எஃகு தயாரிப்பு, இயந்திர உற்பத்தி, மின்சாதனங்கள், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துணைத் தொழில்கள் வளர்ச்சியடைந்து, கடலோர மாவட்டங்களை மையமாகக் கொண்டு புதிய தொழில் வளாகங்கள் உருவாகியிருக்கும். இளைஞர்களுக்கு உயர்தர வேலைவாய்ப்புகளுடன் மாநில அரசுக்கு வரி வருவாயும், துறைமுக மற்றும் ஏற்றுமதி வளர்ச்சியும் அதிகரித்திருக்கும்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மெகா திட்டம் தற்போது ஆந்திரப் பிரதேசத்திற்கு மாறியிருப்பது தமிழ்நாட்டு மக்களிடையே மிகுந்த ஏமாற்றத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு வெள்ளை அறிக்கை
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் முன்னணி மாநிலமாகத் திகழும் தமிழ்நாட்டை விட்டு இவ்வளவு பெரிய திட்டம் வேறு மாநிலத்திற்குச் சென்றிருப்பது இப்போதைய அரசின் செயல்திறன் மற்றும் அதிகாரிகள் மீதான நம்பகத்தன்மை குறித்து பெரும் கேள்விகளை எழுப்புகிறது.
எனவே இந்தத் திட்டத்தை தமிழ்நாட்டில் தக்கவைத்துக் கொள்ள மாநில அரசு என்ன முயற்சிகளை மேற்கொண்டது, உள்கட்டமைப்பு மற்றும் சலுகைகள் தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்துத் தமிழக அரசு முழுமையான காரணங்களுடன் ஒரு "வெள்ளை அறிக்கை" வெளியிட வேண்டும், இனிவரும் காலங்களில் இத்தகைய பெரிய முதலீட்டுத் திட்டங்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறாத வகையில் தொழில் முதலீட்டுக் கொள்கைகளை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்றெல்லாம் டாக்டர் ராமதாஸ் கடுமையாக வலியுறுத்தியுள்ளார்...!!
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications