• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஆபாசம்".. சுடுகாட்டில் பெண் சடலத்தைகூட.. பிளேட்டை திருப்பிப் போட்டு.. அன்றும் இன்றும் பரபர ராதாரவி

Google Oneindia Tamil News

சென்னை: நீண்ட நாட்களுக்கு பிறகு லைம்லைட்டில் வந்துள்ள நடிகர் ராதாரவி, பழனிமலை அடிவாரத்தில் ஒரு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டிதான் சில சலசலப்புகளையும், கேள்விகளையும் எழுப்பி வருகிறது.

கிட்டத்தட்ட எல்லா கட்சியிலும் ஒரு ரவுண்டு அடித்து வந்துவிட்டார் ராதாரவி... அதிமுக, பிறகு திமுக, மறுபடியும் அதிமுக, இப்போதைக்கு ஐக்கியமாகி உள்ளது பாஜகவில்!

ஆனால், இவர் பாஜகவில் சேர்ந்த நேரமே, ஏகப்பட்ட சர்ச்சைகள், பிரச்சனைகள், விவாதங்களை இழுத்து கொண்டு வந்துவிட்டார்..

"பாஜக ராதாரவி" இவர்தான்.. எதையுமே நான் அனுபவிக்கல.. திமுகதான் காரணம்.. பழனியில் பற்ற வைத்த நடிகர்

 தேங்காய் மூடி கட்சி

தேங்காய் மூடி கட்சி

"தேங்காய் மூடி கட்சி" என்று சொந்த கட்சியான பாஜகவை பொது மேடையிலேயே இவர் பேசியது பெரும் சர்ச்சையானது... பொதுவாக பாஜகவில் யார் சேர்ந்தாலும், அந்த கட்சி மிகப்பெரிய பொறுப்பை தந்து அழகுபார்க்கும்.. ஆனால் ராதாரவிக்கு ஏன் பொறுப்பு தரவில்லை என தெரியவில்லை.. ஒருவேளை இவரது திராவிடர் கட்சிக்கான பிம்பம் இன்னும் உடையவில்லையோ, அல்லது திராவிடர் கழகங்களில் இருந்து தாவி வந்த பிரமுகரை பாஜக இன்னும் நம்பவில்லையோ தெரியவில்லை.

 நொந்துபோன ராதாரவி

நொந்துபோன ராதாரவி

ஆனால், காயத்ரி ரகுராமுக்கு மிகப்பெரிய தந்ததுமே, ராதாரவி உடைந்து போய்விட்டதாக செய்திகள் கசிந்தன.. தன் மனக்குமுறலை ஒருமுறை அவரே, வெளிப்படுத்தியும் இருந்தார்.. "என்னை 2ம் தாரம் பேச்சாளர்கள் என்றுகூட சொல்லிக் கொள்ளுங்கள்.. எனக்கு கவலை இல்லை.. ஒரு வருடமாக பாஜக கட்சிக்குள் கசப்புடன் தான் இருக்கிறேன்.. கட்சியில் சேர சொல்லி அழைக்கும்போது வாங்க வாங்க என்று கூப்பிடறாங்க.. ஆனால் சேர்ந்த பிறகு நாம் என்று தெரிவதற்கு பயோடேட்டாவை கொடுக்கனும்போல.. குறைகளை மாநிலத் தலைவரை சந்தித்துகூட சொல்ல முடியாத நிலைமை இருக்கு" என்று ராதாரவி சொன்னதை கேட்டு பாஜகவே சற்று அதிர்ந்துதான் போனது.

ராதாரவி

ராதாரவி

எனினும், பாஜக என்பது நல்ல கட்சி, பிரதமர் மோடி அமித்ஷா பற்றி எல்லாம் தெரிந்து தான் அந்தக் கட்சியிலேயே போய் சேர்ந்தேன் என்று சொன்னதாலோ என்னவோ, அடுத்தடுத்த பிரச்சாரங்களில் பங்கேற்றார்.. ஆனால், தன் மீதான மொத்த மதிப்பையும் அந்த பிரச்சாரங்களில் ராதாரவி இழந்துவிட்டார் என்றே சொல்லலாம்..

 சுடுகாடு

சுடுகாடு

காரணம், "ஸ்டாலினுக்கு சமஸ்கிருதம் எப்படி வாயில் வரும்? "சம்சாரம்"ன்னுதானே வரும்? திமுகவினர் ஏமாத்துகாரர்கள்... திமுகவை பத்தி சொல்லவே வேணாம்.. சுடுகாட்டில் புதைத்த பெண் சடலத்துக்குகூட திமுகவினர் தொல்லை தந்துடுவாங்க.. என் அப்பாவுக்கு 20 பொண்டாட்டிங்க.. ஆனாலும் அவர் யாரையுமே தெருவில் விடவிலை.. இதுவே கமலை எடுத்துக்குங்க.. நம்பி வந்த 3 பொண்ணுங்களையும் காப்பாத்தினாரா? கமலிடம் இருப்பது கிறிஸ்துவ பணம்" என்று ராதாரவியின் அந்த பேச்சுக்கள் மக்களின் வெறுப்பையே சம்பாதித்தன.

பழனிமலை

பழனிமலை

இதற்கு பிறகு ராதாரவியை காணோம்.. பெரிதாக எங்குமே அவர் தென்படவில்லை.. கட்சியிலும் அவருக்கு எந்த பொறுப்பும் பெரிய அளவில் கொடுக்கப்படவில்லை.. இப்போது நீண்ட நாட்கள் கழித்து, பழனியில் பேட்டி தந்துள்ளார்.. தலைவர் அண்ணாமலையை அளவுக்கு அதிகமாக புகழ்ந்துள்ளார்.. சொந்த கட்சி தலைவர் என்பதால் புகழ்வதில் தவறில்லை என்றாலும், "பத்திரிக்கையாளர் முதல் அனைவரையும் மரியாதையாக நடத்துகிறார்... முதலில் எதிர்ப்பாக பார்த்தவர்கள் இப்போது நட்புடன் பார்க்கின்றனர்.. பலரும் அவரது பேச்சால் நடுநிலைவாதியாக மாறிவிட்டனர்" என்று ஒரே போடாக போட்டுள்ளார்.

அறிவாலயம்

அறிவாலயம்

இதற்கு இந்த ஒருமாதமாக தமிழகத்தில் நடந்த சம்பவத்தையே உதாரணங்களாக எடுத்து கொள்ளலாம்.. தலைமை செயலகத்தில், ஒரு செய்தியாளரின் கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் தன் நிதானத்தை இழந்தவர் அண்ணாமலை.. கேள்வி கேட்டவரை பார்த்து, அறிவாலயத்தில் இருந்து 200 ரூபாய் கிடைத்துவிடும் என்று ஆரம்பித்து, கடைசியில் 3000 ரூபாய் என்று அவதூறாக பேரம் பேசியிருந்தார்.. அதாவது அறிவாலயத்தில் கையூட்டு பெறுகிறார்கள் என்று சொன்னதை, அன்றே பத்திரிகையாளர்களும், பத்திரிகையாளர் சங்கங்களும் கண்டனங்களை பதிவு செய்திருந்தன.. இந்த ஆணவ போக்கு ஒரு கட்சி தலைவருக்கு அழகல்ல என்றும் எச்சரித்திருந்தன.

 1000 ரூபாய் நிச்சயம்

1000 ரூபாய் நிச்சயம்

இதற்கு பிறகு, பிரதமர் மோடி சென்னை வந்திருந்தபோது, விதியை மீறி பேனர் வைத்தது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டதற்கு, உங்களுக்கு 200 ரூபாய் நிச்சயம் என்றார் அண்ணாமலை அதை அந்த செய்தியாளர் கண்டித்தபோது, சரி 500 வாங்கிக்குங்க, சரி 1000 ரூபாய் வாங்கிக்குங்க.. என்று பேசியிருந்ததையும் பத்திரிகையாளர்கள் கண்டித்திருந்தனர்.

 போய்யா.. பேசாம

போய்யா.. பேசாம

அவ்வளவு ஏன், 2 நாளைக்கு முன்பு செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதில் சொல்லாமல் அண்ணாமலை சென்றதற்காக, "ஏய் என்ன கேள்வி கேட்டுட்டே இருக்க.. போய்யா பேசாம.,. கேள்வி கேட்காதே" செய்தியாளரை பார்த்து பாஜகவினர் சத்தம் போட்டு, தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி, கடைசியில் கைகலப்பு வரை ஏற்பட்டதையும் மறுக்க முடியாது. இவைகள் அத்தனையும் சோஷியல் மீடியாவில் வைரலாகியும் வந்த நிலையில், திடீரென ராதாரவி இப்படி ஒரு உல்டா கருத்தை சொல்லி இருப்பது, அதிர்ச்சியாக உள்ளதாகவும், எப்போது ராதாரவி பேசினாலும் அது பரபரப்பாக பேசப்பட்டு விடுவதாகவும் கருத்துக்கள் பரவி வருகின்றன..!

English summary
why did actor radharavi say about annamalai and praises tamilnadu bjp நடிகர் ராதாரவி, பழனியில் செய்தியாளர்களுக்கு பரபரப்பு பேட்டி தந்துள்ளார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X