ஹிந்தியை எதிர்க்கிறீர்கள்.. உருது பள்ளிகளை அதிகம் திறக்கிறீர்கள்.. திணிப்புதானே? கேட்கிறார் அண்ணாமலை
சென்னை: தமிழகத்தில் அதிக உருது பள்ளிகளை திறக்க வேண்டும் என மாநில அரசின் கல்விக்கொள்கை கூறுகிறது. இந்தி திணிப்பை எதிர்க்கும் திமுக உருது திணிப்பை ஏன் ஆதரிக்கிறது? மீனவர்களின் குழந்தைகளுக்கு கடல் சார்ந்த கல்வி கற்றுத்தரப்படும் எனக்கூறுவது குலக்கல்வி இல்லையா? என தமிழக அரசுக்கு கேள்வியெழுப்பி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்தார்.
மத்திய அரசு இந்தியை திணிப்பதாக கூறி ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. அதேபோல் மத்திய அரசின் விஷ்வகர்மா யோஜனா திட்டத்தை குலக்கல்வி திட்டம் என்று அவர்கள் விமர்சனம் செய்தன.

இந்நிலையில் தான் இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்தி திணிப்பை எதிர்க்கும் திமுக ஏன் தமிழகத்தில் உருது திணிப்பை ஆதரிக்கிறது? மீனவர்களின் குழந்தைகளுக்கு கடல் சார்ந்த கல்வி கற்றுத்தரப்படும் எனக்கூறுவது குலக்கல்வி இல்லையா? என கேள்விகள் எழுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது: புதிய கல்விக்கொள்கை என்ன சொல்லியிருக்கிறது. மும்மொழி கொள்கை என்று இருக்கிறது. இதுவரைக்கும் மும்மொழி கொள்கை தான் இருந்து இருக்கிறது. இதனை திமுகவினர் இல்லை என்று கூறினால் அது தவறு. இந்தியாவில் 2020ம் ஆண்டு வரை இந்தி என்பது கட்டாய மொழி என்று தான் இருந்துச்சு. இதனை திமுக இல்லை என்று சொல்லலாம். மேலும் அதனை தமிழக அரசு பாலோ பண்ணாமல் இருந்திருக்கலாம்.
எங்க இடத்துல நாங்க விளையாடுவோம்.. விஜய் இப்படியே போனால் எங்களுக்கு சந்தோஷம் தான்.. அண்ணாமலை பரபர
ஆனால் இப்போதுதான் முதன் முதலாக புதிய கல்விக் கொள்கையில் இந்தி படித்தால் படிங்க. இல்லையென்றால் வெறு மொழியை படியுங்கள் என்று ஆப்ஷனோடு வந்திருக்கிறது. இந்தி படித்தால் படிங்க.. இல்லையென்றால் மலையாளம் படிங்க.. என நாமே 3 வது மொழியை தேர்வு செய்துகொள்ளலாம்.
பிரதமர் மோடி விஸ்வகர்மா யோஜனா கொண்டு வந்தால் அது குல கல்வி திட்டம் என்கின்றனர். ஆனால் தமிழக கல்வி கொள்கையில் ஒரு வார்த்தை இருக்கிறது. அதாவது மீனவர்கள் அதிகம் இருக்கக்கூடிய பள்ளியில் மாணவரின் தந்தையும், தாயும் மீனவராக இருந்தால் என்றால் அவர்களின் குழந்தைக்கு கடற்கரை ஓரத்தில் படிப்பு சொல்லி கொடுப்பார்களாம். அந்த படிப்பில் படகு, கடல், நாட்டிகல் பற்றி சொல்லி கொடுப்பாங்களாம். அப்படியென்றால் இது குல கல்வி திட்டம் இல்லையா?.
மாநில அரசு பயிற்றுவித்தால் குல கல்வி இல்லை. விஸ்வர்மாவில் பயிற்சி வழங்கினால் குல கல்வியா?. இருமொழியை தாண்டி மக்கள் 3வது மொழியை விரும்புகின்றனர். தமிழக கல்விக்கொள்கையில் உருது பள்ளிகளை அதிகமாக தொடங்க வேண்டும். உருது டெக்ஸ்ட் புக்குகளை அதிகம் கொண்டு வர வேண்டும் என்று இருக்கிறது. இது உருது திணிப்பு இல்லையா?. இந்தி திணிப்பு எதிர்ப்பு என்று சொல்லும் திமுக உருது திணிப்பை ஏன் எதிர்க்கவில்லை. புதிய கல்வி கொள்கையில் இருப்பதை அப்படியே திமுக அரசு கட் காப்பி பேஸ்ட் செய்துள்ளது’’ என விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications