பெண்களுக்கு விளையாட இனி பயம் வந்துவிடும்.. டாக்டர்கள் சரியில்லை,, குமுறும் பிரியாவின் பயிற்சியாளர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அறுவை சிகிச்சை முறையாக செய்யத் தெரியாதவர்கள் ஏன் மருத்துவராக இருக்கிறார்கள். ஒரு பெண்ணின் வாழ்க்கையே முடிந்து விட்டது. அரசு கொடுக்கும் 10 லட்சத்தால் எந்த பயனும் இல்லை. என்று உயிரிழந்த கால்பந்து ஆட்ட வீராங்கனை ப்ரியாவின் பயிற்சியாளர் ஜோயல் தெரிவித்துள்ளார்.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 17 வயது மாணவி பிரியா. சென்னை ராணி மேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

கால்பந்து விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்ட பிரியா பல தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.

 காலில் சவ்வு விலகியிருப்பது..

காலில் சவ்வு விலகியிருப்பது..


இதற்காக படித்த கல்லூரியிலேயே பயிற்சி எடுத்து வந்த பிரியாவுக்கு அண்மையில் காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரியாவுக்கு சென்னை ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்து பார்த்துள்ளனர். இதில் மாணவி பிரியாவுக்கு காலில் சவ்வு விலகியிருப்பது தெரியவந்தது. இதனால் அவருக்கு டாக்டர்களின் பரிந்துரைப்படி கொளத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது.

சிகிச்சை பலனின்றி மாணவி பலி

சிகிச்சை பலனின்றி மாணவி பலி


அங்கு அறுவை சிகிச்சை செய்த பின்னரும் மாணவி பிர்யாவுக்கு காலில் வலி குறையவில்லை. இதனால் மீண்டும் ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரியில் பிரியா சேர்க்கப்பட்டார். அங்கு மாணவி பிரியாவின் கால் சவ்வில் உள்ள திசுக்கள் அழுகிவிட்டதாக கூறி அவரது காலை அகற்றிவிட்டனர். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மாணவி பிரியா இன்று காலை பலியானார். கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா இன்று காலை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2 மருத்துவர்கள் பணி இடைநீக்கம்

2 மருத்துவர்கள் பணி இடைநீக்கம்


இந்த விவகாரத்தில் 2 மருத்துவர்கள் கவனக்குறைவாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும் தற்போது அவர்கள் இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேட்டியின் போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், "இரு மருத்துவர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விசாரணை மேற்கொள்ளப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும். இந்த விஷயத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று கூறினார்.

 இனி யாராவது விளையாட அனுமதி அளிப்பார்களா

இனி யாராவது விளையாட அனுமதி அளிப்பார்களா

இந்த நிலையில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற பெண்ணின் கனவு கலைந்துவிட்டதாக உயிரிழந்த கால்பந்து ஆட்ட வீராங்கனை ப்ரியாவின் பயிற்சியாளர் ஜோயல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறுகையில், "இப்போதுதான் பெண்கள் கால்பந்து விளையாடுவது அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. இதுபோன்ற செய்தி வெளிவந்த பிறகு இனி யாராவது விளையாட அனுமதி அளிப்பார்களா..

பெண்ணின் வாழ்க்கையே முடிந்து விட்டது

பெண்ணின் வாழ்க்கையே முடிந்து விட்டது

இந்தியாவுக்கு விளையாட வேண்டும் என்ற கனவுதான் பிரியாவுக்கு இருந்தது. பிரியாவை போன்ற வீராங்கனையை நான் பார்த்ததே இல்லை. அறுவை சிகிச்சை முறையாக செய்யத் தெரியாதவர்கள் ஏன் மருத்துவராக இருக்கிறார்கள். ஒரு பெண்ணின் வாழ்க்கையே முடிந்து விட்டது. அரசு கொடுக்கும் 10 லட்சத்தால் எந்த பயனும் இல்லை. மாணவியின் குடும்பத்தினருக்கு என்ன சொல்வதென்றே எனக்கு தெரியவில்லை.

முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

மருத்துவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும். இனி இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க வேண்டும். முதல்வரின் தொகுதியில் உள்ள மருத்துவமனையில் இப்படி நடைபெற்றது வருத்தமாக உள்ளது. இந்த விவகாரத்தில் முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரியாவிற்கு அளித்த சிகிச்சைகள் குறித்து அரசு விளக்கம் கேட்க வேண்டும். மருத்துவமனை நன்றாக இருந்தது ஆனால் மருத்துவர்கள் சரியில்லை" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+