சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னாச்சு? திடீரென ஆர்.என் ரவியை சந்தித்த அண்ணாமலை.. கைமாறிய ரிப்போர்ட்.. அதுதான் காரணம்?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென இன்று காலை ஆளுநர் ஆர். என் ரவியை சந்தித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர். என் ரவிக்கும், ஆளும் திமுக தரப்பிற்கும் இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. ஆளுநர் தொடர்ந்து இந்துத்துவா குறித்தும், சனாதனம் குறித்தும் பேசுவதை ஆளும் திமுக தரப்பு கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. ஆளுநர் ரவியை திரும்ப பெற வேண்டும். அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் திமுக சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

ஆளுநர் ஆர். என் ரவி பாஜக நிர்வாகி போல பேசுவதாகவும் , அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் செயல்படுவதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு உள்ளன.

இது என்ன புதுசா.. இதுவரைக்கும் இப்படி நடந்ததே இல்லையே? ஆர்.என் ரவி செய்த சம்பவம்.. ஒரே குழப்பம்! இது என்ன புதுசா.. இதுவரைக்கும் இப்படி நடந்ததே இல்லையே? ஆர்.என் ரவி செய்த சம்பவம்.. ஒரே குழப்பம்!

மோதல்

மோதல்

இந்த மோதல் காரணமாக எதிர்க்கட்சிகள் ஆளுநருடன் நெருக்கம் காட்டி உள்ளது. சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் ஆர். என் ரவியை நேரில் சென்று சந்தித்தார். இந்த மீட்டிங்கில் திமுக பற்றி குற்றச்சாட்டுகளை எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டு இருக்கிறார். அதே சமயம் ஆளுனரிடம் வேறு ஒரு முக்கியமான விஷயத்தையும் குறிப்பிட்டு இருக்கிறாராம். அதன்படி, திமுக உங்களுக்கு நெருக்கடி கொடுக்கிறது. உங்களுக்கு எதிராக டெல்லியில் புகார் கொடுக்கிறது. நீங்கள் திமுகவிற்கு நெருக்கடி கொடுங்கள், என்று எடப்பாடி பழனிசாமி பேசியதாக கூறப்பட்டது.

என்ன பேசினார்?

என்ன பேசினார்?

4 முக்கியமான விஷயங்கள் இந்த மீட்டிங்கில் கவனம் பெற்றதாக கூறப்பட்டது. அதன்படி தமிழ்நாடு சட்ட ஒழுங்கு குறித்து ரிப்போர்ட் ஒன்றை எடப்பாடி பழனிசாமி கொடுத்ததாக கூறப்பட்டது . மேலும் சென்னை வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கொடுக்கப்படவில்லை என்று எடப்பாடி புகார் வைத்துள்ளார்.. அதேபோல் சீர்காழி வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் தரப்படவில்லை என்றும் எடப்பாடி புகார் வைத்துள்ளார். 3வதாக திமுக அமைச்சர்கள் பற்றி லிஸ்ட் ஒன்றை கொடுத்து இதில் நடவடிக்கை எடுங்கள் என்றும் ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். இது போக 4வது விஷயமாக.. அதிமுக - பாஜக உறவு குறித்தும் இவர்கள் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

எடப்பாடி

எடப்பாடி

இந்த நிலையில்தான் தற்போது பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநர் ஆர். என் ரவியை இன்று சந்தித்து உள்ளார்.தமிழ்நாடு சட்ட ஒழுங்கு குறித்து அண்ணாமலை புகார் கொடுத்ததாக என்று கூறப்படுகிறது. பிரதமர் மோடி தமிழ்நாடு வந்த போது சரியான பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை. சட்ட ஒழுங்கில் குறைபாடு இருப்பதாக அண்ணாமலை ரிப்போர்ட் ஒன்றை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதேபோல் பல்வேறு மசோதாக்கள் பற்றியும் இவர்கள் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்

முன்னதாக கோயம்புத்தூரில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியது. இந்த சம்பவத்தில் முபின் என்ற தீவிரவாதி சம்பவ இடத்திலேயே பலியானார்.இந்த சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர். துரிதமாக செயல்பட்டு இதில் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அதன்பின் வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது. இது பற்றி ஆளுநரிடம் ரிப்போர்ட் கொடுக்க போவதாக ஏற்கனவே அண்ணாமலை கூறி இருந்தார். இன்று நடக்கும் சந்திப்பில் அது அதை பற்றி பேசியதாக கூறப்படுகிறது.

டெல்லி

டெல்லி

அதே சமயம் பாஜகவில் நடக்கும் உட்கட்சி மோதல்கள் குறித்தும் இவர்கள் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. தமிழ்நாடு பாஜகவில் சுனாமி போல புயலை கிளப்பி இருக்கிறது காயத்ரி ரகுராம் நீக்கப்பட்ட விவகாரமும், திருச்சி சூர்யா ஆடியோ விவகாரமும். இந்த விவகாரம் விந்திய மலையை தாண்டி.. பாஜக மேலிடத்திற்கும் சென்றுள்ளது. இந்த விஷயமும் டெல்லிக்கு தெரிந்து கண்டித்து இருக்கிறதாம். தமிழ்நாடு பாஜக மீது டெல்லி அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இன்று நடந்த மீட்டிங்கில் அந்த விவகாரம் பற்றி ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

English summary
Why does Annamalai meet with Governor R N Ravi today suddenly? What happened?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X