பெருமை படுத்திட்டப்பா! கட்சி மோதலுக்கு இடையிலும்.. "அவரிடம்" நெகிழ்ந்த ஓபிஎஸ்.. அவ்ளோ குஷியாம்! ஏன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் அவ்வளவு களேபரங்களுக்கு இடையிலும் முக்கியமான ஒரு விஷயம் காரணமாக ஓ பன்னீர்செல்வம் அதீத மன மகிழ்ச்சியில் இருக்கிறாராம். அப்படி என்ன நடந்தது?

அதிமுகவில் மிக தீவிரமான உட்கட்சி மோதல் வெடித்துள்ளது. ரத்தக்காயம் ஏற்படும் அளவிற்கு கட்சி நிர்வாகிகள் சண்டை தீவிரம் ஆகி உள்ளது. ஒற்றை தலைமை வேண்டும்.. எடப்பாடிதான் பொதுச்செயலாளர் என்று எடப்பாடி கேங்க் ஒரு பக்கம் முஷ்டி முறுக்கி வருகிறது.

ஒற்றை தலைமை ஏன்.. இரட்டை தலைமையே நன்றாகத்தானே இருக்கு. எதுக்கு இந்த புது பிரச்சனை என்று ஓபிஎஸ் தரப்பு இன்னொரு பக்கம் வேட்டியை மடித்துக்கொண்டு ஆக்ரோஷமாக இருக்கிறது.

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

இந்த நிலையில்தான் ஓபிஎஸ் தனது பலத்தை காட்டும் விதமாக சென்னைக்கு தனது தொண்டர்களை, ஆதரவாளர்களை வர வழைத்து வருகிறார். தேனி மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகளை கூட்டம் கூட்டமாக வரவழைத்து வருகிறார்கள். முக்குலத்தோர் பிரிவை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகளை சென்னையில் ஓபிஎஸ் தரப்பு களமிறக்கி உள்ளது. தனக்குத்தான் தொண்டர்கள் பலம் இருக்கிறது என்பதை காட்டும் விதமாக ஓபிஎஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

தொண்டர்கள்

தொண்டர்கள்

தொண்டர்களை களமிறக்குவதில் இதுவரை ஓபிஎஸ் கையே மேலோங்கி உள்ளது. எம்எல்ஏக்கள் ஆதரவு என்னவோ எடப்பாடிக்கு அதிகம் இருந்தாலும், தனக்குத்தான் தொண்டர்கள் ஆதரவு உள்ளது என்பதை காட்டும் வகையில் ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார். இதன் ஒரு கட்டமாகவே சென்னை முழுக்க ஓபிஎஸ் ஆதரவு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. ஓபிஎஸ்தான் ஒற்றை தலைவர்.. ஓபிஎஸ்தான் ஜெயலலிதா கண்டு எடுத்த தலைவர் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

போஸ்டர்

போஸ்டர்

சென்னையில் மட்டுமின்றி சேலத்திலும் இப்படி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. எடப்பாடி வீடு இருக்கும் நெடுஞ்சாலை பகுதியிலும் இப்படி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. தமிழ்நாடு முழுக்க.. எடப்பாடி ஏரியாவில் கூட தனக்குதான் ஆதரவு என்பதை காட்டும் விதமாக ஓபிஎஸ் இப்படி போஸ்டர்களை ஒட்டி வருகிறார். இந்த பணிகளை எல்லாம் கவனித்துக்கொள்வது என்னவோ ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்தான். ஓபிஎஸ் ஆதரவாக ஆட்களை திரட்டியது, போஸ்டர் ஒட்டியது எல்லாம் ஜெயபிரதீப்தான் என்கிறார்கள் ஓபிஎஸ் வட்டாரத்தினர்.

ஜெயபிரதீப்

ஜெயபிரதீப்

இந்த நிலையில் ஜெயபிரதீப் செயலால் ஓபிஎஸ் குஷியில் இருப்பதாக கூறுகிறார்கள். அவர் சென்னைக்கு ஆட்களை கொண்டு வந்த விதம்.. போஸ்டர்களை ஒட்டிய விதம்.. நேற்று அதிமுக அலுவலகம் முன் நிர்வாகிகளை இறக்கிய விதம் அனைத்தையும் பார்த்து ஓபிஎஸ் நெகிழ்ச்சியில் இருக்கிறாராம். பெருமை படுத்திட்டப்பா என்று அவரை பாராட்டியதாகவும் கூறப்படுகிறது. இன்னொரு மகனும் நன்றாக அரசியல் பணி செய்கிறாரே.. இக்கட்டான நிலையில் இப்படி சிறப்பாக வேலை பார்க்கிறார் என்று நெகிழ்ச்சியில் இருக்கிறாராம்.

குளிர்ந்த மனம்

குளிர்ந்த மனம்

அதோடு இன்றும் ஓபிஎஸ் ஆதரவாக செய்தி தாள்களில் விளம்பரங்கள் வந்தன. முதல் பக்கத்தில் ஒரு பக்க பெரிய விளம்பரங்கள் வந்தன. ஓபிஎஸ்ஸை பாராட்டி. ஜெயலலிதா கண்டு எடுத்த தலைவர் என்று புகழ்ந்து விளம்பரங்கள் வந்துள்ளன. இதற்கு பின்பும் ஜெயபிரதீப் இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக தொண்டர்களை தன் அப்பா பக்கம் கொண்டு வரும் விதமாக ஜெயபிரதீப் தீவிரமாக பணிகளை செய்ய களமிறக்கி விடப்பட்டு இருக்கிறாராம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+