சிக்கிய அதிமுக.. வேட்டைக்கு கிளம்பிய கழுகுகள்.. வர மறுத்த ஒரு "கழுகு".. என்னது டிடிவியா? என்னாச்சு?
சென்னை: ஓ பன்னீர்செல்வம் டெல்லி செல்வதற்கு தீவிரமாக முயன்று கொண்டு இருக்கிறார். அவர் தன்னுடன் இன்னும் சிலரையும் அழைத்து செல்ல தயாராகிக்கொண்டு இருக்கிறாராம்.
ஒரு பெரிய காடு.. அந்த காட்டில் வாழும் ஒரு வயசான சிங்கம்.. இன்னொரு தோழன் சிங்கத்தின் உதவியுடன் காட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.. வேட்டையாடிக்கொண்டு இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்.

ஒருநாள்.. அந்த இரண்டு சிங்கங்களுக்கு சண்டை வந்து.. ஒரு சிங்கம் அங்கிருந்து வெளியேறி விட்டது. இந்த வயதான சிங்கம் காட்டில் தனியாக சிக்கி.. உணவும் இன்றி.. வயது முதிர்வில் பாதுகாப்பும் இன்றி கழுகுகளிடம் மாட்டிக்கொண்டால் எப்படி இருக்கும்.
அப்படி ஒரு நிலைமைதான் அதிமுகவிற்கு. அதிமுக - பாஜக உறவு முறிந்த நிலையில் எடப்பாடியின் பதவிக்கு வேட்டு வைக்க கழுகுகளாக கிளம்ப தொடங்கி உள்ளனர் அதிமுகவின் முன்னாள் பவர் செண்டர்கள். அது வேறு யாரும் இல்லை.. ஓ பன்னீர்செல்வம்.. சசிகலாதான். எடப்பாடி பழனிசாமி பாஜகவின் துணையின்றி... பாஜகவுடன் பகைகொண்டு இருப்பதால்.. இதை பயன்படுத்தி எடப்பாடியை வீழ்த்த தயாராகிக்கொண்டு இருக்கிறார்களாம்.
சசிகலா: ஒரு பக்கம் சசிகலா பாஜகவிற்கு தூது விட்டுக்கொண்டு இருக்கிறாராம். அதன்படி சசிகலா தரப்பில் இருந்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு முக்கிய கடிதம் ஒன்று அனுப்பப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த கடிதத்தின் உண்மைத்தன்மை குறித்த கேள்வி எழுந்துள்ளன.
( ஒரே ஒரு போன் கால்! அதுமட்டும் வந்தால் அதிமுக கேம் ஓவர்! சென்னையில் காத்திருக்கும் ஓபிஎஸ்! சஸ்பென்ஸ்)
அந்த கடிதத்தில் என்ன இருந்தது?: அந்த கடிதத்தில்.. என் கையில் அதிமுக தலைவர்கள் 5 பேர் உள்ளனர். பாஜகவுடன் கூட்டணி வைக்க நான் தயார். பாஜக - அதிமுகவை மீண்டும் இணைக்க நான் தயார். எனக்கு டெல்லி சப்போர்ட் வேண்டும். அவர்கள்தான் எனக்கு உதவ வேண்டாம்.
பாஜகவிற்கு எதிராக செயல்பட அதிமுகவில் சிலர் விரும்பவில்லை. அவர்கள் என்னுடன் நட்பில் இருக்கிறார்கள். அதனால் எனக்கு ஆதரவு கொடுங்கள் என்று அமித் ஷாவிற்கு சசிகலா கடிதம் எழுதி இருக்கிறாராம். அதே சமயம் அந்த கடிதத்தின் பிரதியை அவர் மோடிக்கும் அனுப்பி உள்ளாராம். ஆனால் இது உண்மையா .. இதற்கு டெல்லி எதுவும் பதில் கொடுத்ததா என்று தெரியவில்லை.
ஓ பன்னீர்செல்வம்: இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். இதற்காக டெல்லியில் அமித் ஷாவிடம் அப்பாயின்மென்ட். கேட்டுள்ளாராம்,. அதிமுக என் கையில் இருந்தால் கூட்டணிக்கு பிரச்சனை இருக்காது.
( 5 அதிமுக தலைவர்கள் என் கையில்.. கட்சியை உடைக்க நான் ரெடி.. அமித் ஷாவிற்கு சசிகலா கடிதம்? பின்னணி? )
அதிமுகவை நான் கையில் எடுக்கிறேன். எனக்கு அதற்கு டெல்லி சப்போர்ட் வேண்டும் என்று கேட்க கழுகு போல புறப்பட்டு செல்ல இருக்கிறார். அமித் ஷா கண் அசைவிற்காக சென்னையில் அவர் காத்துகொண்டு இருக்கிறாராம்.
டிடிவி தினகரன்: இன்னொரு பக்கம் பிரபல ஹோட்டலில் தங்கியிருக்கும் டிடிவி தினகரனை நேற்று இரவு சந்திக்க ஓபிஎஸ் விரும்பியதாகவும், இப்போது வேண்டாம் என தினகரன் சொன்னதாகவும் தகவல் வருகிறது. அதாவது டிடிவி தினகரனையும் அழைத்துக்கொண்டு டெல்லி செல்ல ஓ பன்னீர்செல்வம் திட்டமிட்டு.இருந்தார்
ஆனால் டிடிவி தினகரன் அதெல்லாம் வேண்டாம்.. நாம் இப்போது வரவில்லை. பின்னர் சொல்கிறேன் என்பது போல ஒதுங்கி இருக்கிறாராம். அவரின் இந்த முடிவிற்கு என்ன காரணம்.. ஏன் அமைதியாக இருக்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது .
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications