பெரிய ஓட்டை! வெளியேற வந்த பூனைக்குட்டி! இரவோடு இரவாக.. வண்டியை விட்ட ஓபிஎஸ்.. ஓடி வந்த "புது" தலைகள்
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு தனக்கு எதிராக வந்த போதிலும் ஓ பன்னீர்செல்வம் மகிழ்ச்சியாகவே காணப்படுகிறார். அவர் முன்பை விட இப்போது அதிக நம்பிக்கையாக இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக பொதுக்குழு வழக்கில் நேற்று முதல்நாள் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி வெளியிட்ட அறிவிப்பை இரட்டை நீதிபதிகள் ரத்து செய்தனர்.
இதன் மூலம் ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்று முடிவு ஆகி உள்ளது. ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கு இது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இதனால் தீர்ப்பு காரணமாக அதிமுகவில் முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

என்னென்ன மாற்றங்கள்
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் இடைக்கால பொதுச்செயலாளர் ஆகிறார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்படுகின்றன. இதனால் ஓ பன்னீர்செல்வத்தை இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி நீக்கியது செல்லும். எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பெயரில் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டது செல்லும். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எல்லோரும் நீக்கப்பட்டது செல்லும் என்று உறுதியாகிறது.

திங்கள் கிழமை
இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் இந்த தீர்ப்பிற்கு எதிராக திங்கள் கிழமை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறார். இந்த மேல்முறையீட்டு வழக்கில் விரைவில் விசாரணை நடக்கலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது . அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு தனக்கு எதிராக வந்த போதிலும் ஓ பன்னீர்செல்வம் மகிழ்ச்சியாகவே காணப்படுகிறார். அவர் முன்பை விட இப்போது அதிக நம்பிக்கையாக இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

என்ன காரணம்
ஓ பன்னீர்செல்வம் இப்படி உற்சாகமாக காணப்பட சில முக்கியமான காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. முதல் விஷயம் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள சில விஷயங்கள் சட்ட ரீதியாக எடுபடாது. மேல்முறையீடு செய்தால் தங்களுக்கே சாதகமாக தீர்ப்பு வரும் என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு கருதுகிறதாம். தீர்ப்பில் சில விஷயங்கள் "அதிமுக விதிகளுக்கு" எதிராக இருப்பதாக ஓ பன்னீர்செல்வம் தரப்பு கருதுகிறதாம். ஓ பன்னீர்செல்வம் தரப்பில் இது பற்றி விசாரித்ததில்.. தீர்ப்பு எங்களுக்கு எதிராக வந்து இருக்கலாம்.

பாயிண்ட்ஸ்
ஆனாலும் சில பாயிண்ட்ஸ் தவறாக உள்ளது. தீர்ப்பில் சில பெரிய ஓட்டைகள் இருக்கின்றன. இதை சுட்டிக்காட்டி மேல்முறையீடு செய்வோம். திங்கள் கிழமை மேல்முறையீடு செய்வோம். எங்களுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும் என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு நம்பிக்கையாக சொல்கிறது. இந்த நிலையில் பன்னீர்செல்வம் நேற்று இரவோடு இரவாக திடீரென தேனிக்கு புறப்பட்டார். கடந்த ஒரு வாரமாக அவர் சென்னையில் இருந்தார்.

சென்னை
அதற்கு முன் தேனியில் இருந்தவர் சென்னை வந்து 1 வாரமாக நிர்வாகிகளை சந்தித்தார். இந்த நிலையில் நேற்று இரவோடு இரவாக மீண்டும் தேனிக்கு புறப்பட்டார். அந்த இரவிலும் அவரை சந்திக்க நிர்வாகிகள் பலரும் காத்து இருந்தனர். அதுவரை ஓ பன்னீர்செல்வம் வீட்டு பக்கம் வராத சில எடப்பாடி ஆதரவாளர்களும் நேற்று ஓபிஎஸ் வீட்டிற்கு வந்து அவரை வரவேற்றதாக கூறப்படுகிறது. தீர்ப்பு அவருக்கு எதிராக வந்தாலும் ஆதரவு அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

ஆதரவு அதிகரிப்பு
புதிதாக சில தலைகள் ஓ பன்னீர்செல்வத்தை நேற்று இரவு திருச்சியிலும் வரவேற்றனர். ஓ பன்னீர்செல்வம் அதிமுகவை இணைக்க புரட்சி பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரையும் ஓ பன்னீர்செல்வம் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் எடப்பாடி பக்கம் இருந்த சில "பூனைக்குட்டிகள்" ஓ பன்னீர்செல்வம் பக்கம் அப்படியே ஜம்ப் அடித்துள்ளனர். ஓ பன்னீர்செல்வமும் டெல்லிக்கு கேஸ் செல்ல உள்ளதால் தனக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.
-
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை?












Click it and Unblock the Notifications