சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மேலிட சிக்னலா?.. பேப்பர் கட்டோடு திடீரென ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்த ஓபிஎஸ்.. என்ன பேசினார்கள்?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவியை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இன்று நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு ஆளுநராக பதவி ஏற்றபின் ஆளுநர் ஆர்.என் ரவி பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார். முதல்வருடன் இரண்டு முறை சந்திப்பு நடத்தினார். அதோடு சென்னை வெள்ளத்தின் போது போன் மூலம் முதல்வரிடம் ஆளுநர் உரையாடினார்.

விவசாய போராட்டம் பற்றி தவறான செய்தி.. Zee Newsன் 3 வீடியோக்களை டெலிட் செய்ய என்பிடிஎஸ்ஏ உத்தரவு விவசாய போராட்டம் பற்றி தவறான செய்தி.. Zee Newsன் 3 வீடியோக்களை டெலிட் செய்ய என்பிடிஎஸ்ஏ உத்தரவு

உள்ளாட்சி தேர்தலுக்கு பின்பாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளை சந்தித்தார். இதில் தேர்தல் முறைகேடு, சட்ட ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக ஆளுநரிடம் அதிமுகவினர் புகார் அளித்தனர்.

புகார்

புகார்

அதோடு பாஜக தலைவர் அண்ணாமலை, எச். ராஜா போன்ற தலைவர்களும் ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்தனர். தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்சனை இருப்பதாகவும், ரமேஷ் உள்ளிட்ட திமுக எம்பிகளுக்கு எதிரான புகார்களை விசாரிக்க வேண்டும் என்றும் பாஜக சார்பாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி 6 நாள் பயணமாக டெல்லி சென்றார்.

 சந்திப்பு

சந்திப்பு

டெல்லி பயணத்தில் ஆளுநர் ஆர். என் ரவி பல்வேறு முக்கிய தலைவர்களை சந்தித்தார். மத்திய அமைச்சர் அமித் ஷாவை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து ஆலோசனை நடத்தினார். இவர்கள் நீண்ட நேரம் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. அதன்பின் தமிழ்நாடு தலைமை செயலாளர் வெ இறையன்புவிடம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி வளர்ச்சி திட்டங்கள் குறித்த ரிப்போர்ட் ஒன்றை கேட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இது சாதாரண நடைமுறைதான் என்று தலைமை செயலாளர் வெ இறையன்பு விளக்கம் அளித்தார்.

வைரல்

வைரல்

ஆளுநரின் இந்த டெல்லி பயணத்தில் அவர் தமிழ்நாடு அரசியல் குறித்தும், அதிமுக கட்சியில் நிலவும் உட்கட்சி பூசல் குறித்தும் பேசியதாக செய்திகள் வெளியாகின. முக்கியமாக சசிகலா கட்சிக்குள் வர மீண்டும் முயல்வது குறித்தும் இதில் பேசி இருக்கலாமோ என்றும் அரசியல் விவாதங்கள் செய்யப்பட்டன. இப்படி அடுத்தடுத்த சந்திப்புக்கு இடையில்தான் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவியை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இன்று நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

காரணம்

காரணம்

இதில் அதிமுக உட்கட்சி பூசல் குறித்து எதுவும் பேசப்பட்டு இருக்குமோ என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஏனென்றால் ஜெயலலிதா மறைவிற்கு பின்பாக இருந்தே அதிமுகவில் பிரச்சனைகள் ஏற்படும் போதெல்லாம் ஆளுநர் வழியாக டெல்லி மேலிடத்திடம் அதிமுக தலைவர்கள் பேசுவது வழக்கமாகி வருகிறது. இந்த மீட்டிங்கும் அப்படி ஒரு சந்திப்பாக இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலிடம்

மேலிடம்

அதிலும் அதிமுகவின் மற்ற பெரிய தலைவர்கள், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இல்லாமல் ஓ பன்னீர்செல்வம் சென்றுள்ளது கேள்விகளை எழுப்பி உள்ளது. மேலிடத்தில் இருந்து ஏதாவது அதிமுக தொடர்பாக சிக்னல் வந்துள்ளதா என்ற விவாதத்தையும் இது எழுப்பி உள்ளது. இதெல்லாம் போக இந்த சந்திப்பில் ஓ பன்னீர்செல்வம் கையில் பெரிய பேப்பர் கட்டு ஒன்றை வைத்து இருந்ததும் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பி உள்ளது.

விவாதம்

விவாதம்

இந்த நிலையில் அதிமுக தரப்பில் விசாரித்த போது, இது வெறும் சம்பிரதாய சந்திப்புதான் என்று கூறியுள்ளனர். ஆளுநருக்கு ஓபிஎஸ் வாழ்த்து மட்டுமே சொன்னார், பெரிதாக அரசியல் பேசவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அதிமுகவில் பலரும் ஆளுநரை நேரில் சந்தித்து மரியாதை செலுத்திவிட்டனர். முதல்வரும் ஆளுநரை சந்தித்துவிட்டார். பாஜகவினரும் சந்தித்துவிட்டனர்.

ஓபிஎஸ் சந்திப்பு ஏன்?

ஓபிஎஸ் சந்திப்பு ஏன்?

ஆனால் ஆளுநராக ஆர். என் ரவி பதவி ஏற்று தமிழ்நாடு வந்த நேரத்தில் ஓபிஎஸ் மனைவி இறந்த காரணத்தால், அவரால் ஆளுநரை சந்திக்க முடியவில்லை. அதன்பின் சரியான நேரம் கிடைக்காத காரணத்தால் இப்போது மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பை நடத்தி உள்ளனர் என்று கூறப்படுகிறது.

English summary
Why AIADMK leader O Pannerselvam meets Tamilnadu governor R N Ravi?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X