Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கலைந்தது" மவுனம்.. "அவங்களோட" கூட்டணியா?.. பாமக பாலு அதிரடி.. டக்கென திரும்பி பார்க்கும் அதிமுக

பாமக பாலு, இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்களிடம் பேட்டி தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அனைத்து கட்சிகளும், இடைத்தேர்தல் மும்முரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பாமக என்ன செய்ய போகிறது என்ற ஆர்வம் அதிகரித்து வருகிறது.. இந்நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான பாலு, இடைத்தேர்தல் குறித்து பாமகவின் நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.

விரைவில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடக்க போகிறது.. திமுக கட்சியானது, தன்னுடைய கூட்டணிக்கு தொகுதியை ஒதுக்குவதாக தெரிவித்து உள்ளது..

எனினும், இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் திமுக இப்போதே களத்தில் தீவிரமாக குதித்துவிட்டது..

 விஜயகாந்த்

விஜயகாந்த்

இலை கிடைக்காத விவகாரத்தில், கூட்டணிக்கே தொகுதியை ஒதுக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுகவே நேரடியாக போட்டியிடும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதற்கு நடுவில் ஓபிஎஸ்ஸும் களமிறங்குகிறார்.. மநீம, தேமுதிக, அமமுக, நாம் தமிழர், இப்படி எல்லாருமே இடைத்தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள்.. பாஜகவும் தன்பங்குக்கு வேகத்தை கூட்டி வருகிறது.. கிட்டத்தட்ட 5 முனை போட்டியே, இடைத்தேர்தலில் எழ வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.. ஆனால், பாமகவை எடுத்துக் கொண்டால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து இதுவரை எந்த கருத்தையும் வெளிப்படுத்தவில்லை..

 பாமக ஆர்வம்

பாமக ஆர்வம்

அதனால், பாமக என்ன நிலைப்பாடு எடுக்க போகிறது என்பது இதுவரை தெரியாமல் இருந்தது.. ஆனால், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாக செய்திகளும், கடந்த சில தினங்களாக வெளியாகி கொண்டுதான் இருந்தன.. இந்த தொகுதியில் பாமகவுக்கு பெரிய அளவில் ஓட்டு சதவீதம் இல்லை என்கிறார்கள்.. கடந்த 2016-ல் தனித்து போட்டியிட்டபோது, 1.43 சதவீதம் ஓட்டுக்களை பெற்றுள்ளது.. ஆனால், இந்த முறை திமுகவுடன் கூட்டணி வைக்க பாமக ஆர்வம் காட்டி வருகிறது.. ஆனால், திமுக கூட்டணியில் ஏற்கனவே நிறைய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.. இப்போதைக்கு அதுதான் மெகா கூட்டணி போல தெரிகிறது..

 நடுநிலைமையா?

நடுநிலைமையா?

எனவே, பாமக கேட்கும் தொகுதிகளை திமுக தருமா? என்பதைவிட, பாமக கூட்டணிக்குள் வருவதை அங்குள்ள விசிக உள்ளிட்ட கட்சிகளே விரும்பாத நிலையில், திமுக அமைதி காத்து வருகிறது. அந்தவகையில், திமுக, அதிமுக எந்த பக்கம் கூட்டணி என்பதில் பாமக யோசித்து வருகிறது.. அதனால்தான், 2024 எம்பி தேர்தலில் பாமகவுக்கு பாதிப்பு இல்லாத வகையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடுக்கும் முடிவுகள் அமைய வேண்டும் என்று ராமதாஸ் நினைக்கிறாராம்.. அநேகமாக, யாருக்கும் ஆதரவு அளிக்காமல் நடுநிலை வகிக்கலாமா? என்றுகூட ஆலோசித்து வருவதாக 2 நாட்களுக்கு முன்பு செய்திகள் கசிந்தன.

 பாமக பாலு

பாமக பாலு

இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக, பாமக செய்தி தொடர்பாளர் பாலு, சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார்... அப்போது பேசிய அவர், "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாமக நிலைப்பாடு குறித்து ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் பங்கேற்ற பாமக உயர் நிலை குழு கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது.. அதன்படி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடவில்லை. யாருக்கும் ஆதரவு இல்லை என்று முடிவெடுத்துள்ளோம்.

யூடர்ன்

யூடர்ன்

பாமகவை பொறுத்தவரை இடைத்தேர்தல் தேவையற்றது... நேர விரையம் சட்டமன்ற உறுப்பினர் மறைந்தால் அந்த கட்சி விரும்பும் நபரை சட்டமன்ற உறுப்பினராக அறிவிக்க வேண்டும். 2021-ம் ஆண்டு நடந்த 9 மாவட்டங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என முடிவெடுத்திருந்தோம். அந்த நிலைப்பாடு இப்போதும் தொடர்கிறது. அதிமுகவுடன் பாமக கூட்டணியில் இருப்பதாக சொல்வது அறியாமையால் ஏற்படும் சந்தேகம்.. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.. 3 மாதத்திற்கு முன்பு தான் யாருடன் கூட்டணி என்பதை முடிவெடுப்போம்

 தோளுக்கு தோள்

தோளுக்கு தோள்

1996-ல் 4 எம்எல்ஏக்களுடன் அதிமுக பலவீனப்பட்டு இருந்த நிலையில், அப்போது கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா, பாமக அலுவலகத்துக்கு வந்து கூட்டணி பேசி 1999ம் ஆண்டு மக்களவை தேர்தலை சந்தித்தார். இப்படி அதிமுக விழும்போதெல்லாம் பாமக தோள் கொடுத்துள்ளது. அதிமுகவின் வெற்றிக்குதான் பாமக தான் காரணம் என எப்போதும் சொல்லிக்காட்டியதில்லை.

 கருணாநிதி

கருணாநிதி

மைனாரிட்டி திமுக என அதிமுகவால் விமர்சிக்கப்பட்டபோதுகூட, எவ்வித நிபந்தனையும் இல்லாமல் திமுகவுக்கு ஆதரவு அளித்து. தலைவராக இருந்த கருணாநிதி முதல்வராக நாங்கள்தான் காரணம் என சொல்லியதில்லை.. பாமகவுக்கு இடம் ஒதுக்கியது கூட்டணி தலைவர்களின் முடிவாக இருக்கும்போது, அதுகுறித்து பேச ஜெயக்குமார் யார்? நுனி மரத்தில் அமர்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுவது போல ஜெயக்குமார் பேசி இருக்கிறார். வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து, தேர்தலுக்கு 3 மாதம் முன்புதான் முடிவெடுப்போம்" என்று பாலு கூறியுள்ளார்.

 வலுவான களம்

வலுவான களம்

ஆக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதை திட்டவட்டமாக மறுபடியும் கூறியுள்ளது பாமக தரப்பு.. அதிமுக, திமுக என இரு தரப்பையுமே பாமக தரப்பு விமர்சிக்காமல் உள்ள நிலையில், கூட்டணியிலும் இப்போதைக்கு இல்லை என்பதை தெளிவுபடுத்தி உள்ளது.. அப்படியானால், திமுக கூட்டணியில் சேர்வதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறதா என்ற சந்தேகமும் வலுத்து வருகிறது.. எனினும், எந்த தேர்தல் என்றாலும், வலுவாக வாக்கு வங்கி வைத்துள்ள, பாமகவின் பங்கு மிக மிக முக்கியமானது. தேர்தல் வெற்றியை களத்தில், வலுவாக நிர்ணயிக்கக்கூடியது.. தீர்மானிக்கக்கூடியது.. அந்தவகையில், பாமக யாருடன் கூட்டணி வைக்க போகிறது என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உருவெகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+