சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா பரவுவது எப்போது நிற்கும்.. மந்தை எதிர்ப்பு சக்தி அடைய எவ்வளவு தடுப்பூசி செலுத்த வேண்டும்?

Google Oneindia Tamil News

சென்னை:​"மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை" அடைவதற்கு மக்கள் தொகையில் எவ்வளவு பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்பதை அறிய பலர் ஆர்வமாக உள்ளனர்.

இது ஒரு நியாயமான கேள்விதான். லாக்டவுன் நிலைமை ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்றால் பெரும்பாலான மக்கள் நோய் எதிர்ப்பு சக்தி பெற வேண்டும் என்பதால், மக்கள் மனதில் இந்த கேள்வி எழுகிறது.

வெளிநாடுகளில் உள்ள அன்புக்கினியவர்களுடன் மீண்டும் ஒன்றிணைய முடியும், வணிகங்களுக்கு அதிக பாதுகாப்பு கிடைக்கும், தலைப்புச் செய்திகள் கொரோனா இருக்காது.. இவையெல்லாம் மக்களுக்கு மந்தை எதிர்ப்பு சக்தி எப்போது வரும் என்று அறிவதில் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. ஆனால் மந்தை நோய் எதிர்ப்பு சக்திக்கு ஒரு மேஜிக் எண்ணை கண்டுபிடிப்பது கடினம் என்பதை ஒப்புக்கொள்வது முக்கியம்.

2 கைகளையும் இழந்த 21 வயது இளைஞர்.. காலில் தடுப்பூசி செலுத்திய நர்ஸ்கள்.. கேரளாவில்..!2 கைகளையும் இழந்த 21 வயது இளைஞர்.. காலில் தடுப்பூசி செலுத்திய நர்ஸ்கள்.. கேரளாவில்..!

மந்தை நோய் எதிர்ப்பு சக்தி என்றால் என்ன?

மந்தை நோய் எதிர்ப்பு சக்தி என்றால் என்ன?

மந்தை நோய் எதிர்ப்பு சக்தி என்பது மக்கள் தொகையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும்போது நோய் தொடர்ந்து பரவுவதற்கான பாதையைத் தடுக்கிறது. தடுப்பூசி நம் ஒவ்வொருவருக்கும் நோய்க்கு எதிராக நேரடி பாதுகாப்பை அளிக்கிறது, மந்தை நோய் எதிர்ப்பு சக்தியால் தடுப்பூசி போடாத மக்கள் கூட பயனடைகிறார்கள். மந்தை நோய் எதிர்ப்பு சக்திக்கு வெவ்வேறு நோய்கள் வெவ்வேறு வரலாறுகளை கொண்டுள்ளன. அம்மை நோய்க்கு எதிரான மந்தை நோய் எதிர்ப்பு சக்தி 92% -94% ஆகும். கொரோனாவுக்கான மதிப்பீடுகள் மாறுபட்டுள்ளன. சிலர் அதை 85% அல்லது அதற்கும் அதிகமாக கணிக்கிறார்கள். அதாவது 85 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டாலோ அல்லது, தடுப்பூசி போட்டாலோ நோய் பரவல் நின்று போகும்.

உருமாறும் கொரோனா

உருமாறும் கொரோனா

இருப்பினும், ஒரு சரியான சதவீத எண்ணைக் கொடுக்க பலர் தயங்குகிறார்கள். இதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவது இதில் கணிக்க முடியாமல் இருப்பதற்கு ஒரு காரணம். பிரிட்டன் மதிப்பீடுகள்படி, இரண்டு டோஸ் ஃபைசர் தடுப்பூசி ஆல்பா கொரோனா வைரசுக்கு எதிராக 85% முதல் 95% வரை பயனுள்ளதாக இருப்பதாக காட்டியது. டெல்டா வைரசாக இருந்தால் சுமார் பத்து சதவீதம் தடுப்பூசி செயல்திறன் குறைகிறதாம். தடுப்பூசி செயல்திறன் குறைவாக இருப்பதால், அதிக அளவு பாதுகாப்பை பெறுவதை உறுதி செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம். எனவே மந்தை எதிர்ப்பு சக்தி எப்போது கிடைக்கும் என உறுதியாக கூற முடியவில்லை.

பெரியவர்களுக்கு செலுத்தினால் பாதுகாப்பு

பெரியவர்களுக்கு செலுத்தினால் பாதுகாப்பு

ஃபைசர் தடுப்பூசி இப்போது ஆஸ்திரேலியாவில் 12-15 வயதுடையவர்களுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த வயதினருக்கு இது வழக்கமாக பரிந்துரைக்கப்பட்டால், அவர்களுக்கு தடுப்பூசி போட இன்னும் நேரம் எடுக்கும். வயது வந்தோருக்கான தடுப்பூசி மூலம் குழந்தைகள் ஓரளவு பயனடைய வேண்டும். இங்கிலாந்தில், ஒட்டுமொத்த தடுப்பூசி இரண்டு டோஸ்களும் சேர்த்து 48.5% என்ற அளவில் உள்ளது. 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தொற்றுநோய்கள் குறைந்து வருகின்றன. பெரியவர்கள் தடுப்பூசி போடுவதால் வழங்கப்படும் மறைமுக பாதுகாப்பு இதற்கு ஒரு காரணம்.

தடுப்பூசி எவ்வளவு நாள் பாதுகாப்பளிக்கும்

தடுப்பூசி எவ்வளவு நாள் பாதுகாப்பளிக்கும்

தனிநபர்களில் தடுப்பூசி பாதுகாப்பு காலப்போக்கில் குறைய வாய்ப்புள்ளது. அதுவும் புதிய உருமாற்றங்களும் தோன்றுவதால், கொரோனாவுக்கு எதிராக மக்கள் பாதுகாப்பைத் தக்கவைக்க நிச்சயமாக பூஸ்டர்கள் தேவைப்படும். இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி மூலம், மந்தை நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டதாக தெரியவில்லை. ஏனென்றால் பாதுகாப்பின் காலம் மிகவும் குறைவு. அடுத்த காய்ச்சல் காலகட்டத்தில், நடப்பு பருவத்தின் தடுப்பூசியிலிருந்து வரும் நோய் எதிர்ப்பு சக்தி புதிய உருமாறிய வைரசுக்கு எதிராக மிகக் குறைவான பலனைத் தரும்.

Recommended Video

    கொரோனா பாதித்தவர்களுக்கு Pulse Oximeter முக்கியம்! Dr. Boopathy John Interview Part 2
    மக்கள் தொகை அடர்த்தி

    மக்கள் தொகை அடர்த்தி

    மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அடைவதற்கான திறன் மக்கள்தொகை அடர்த்தியையும் சார்ந்து இருக்கிறது. மக்கள் எப்படி ஒருவருக்கொருவர் கலந்து பழக வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பதும் இதில், முக்கிய பங்கு வகிக்கிறது. இதையெல்லாம் மனதில் வைத்துதான் மருத்துவ வல்லுநர்கள் பெரும்பாலும் மந்தை நோய் எதிர்ப்பு சக்திக்கு ஒரு காலக்கெடு வழங்குவதை தவிர்க்கிறார்கள்.

    English summary
    When India will get herd immunity against covid: Many are curious to know how many people in the population need to be vaccinated to achieve “herd immunity”. This is a reasonable question. This question arises in the minds of the people as most people have to get immunity if the Lockdown situation is to come to an end.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X