சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வந்தாச்சு மே.. பொண்டாட்டி ஊருக்குப் போயாச்சு டோய்.. ஜனகராஜ் மோடுக்கு மாறிய கணவர்கள்.. ஒரு கலகல கதை!

Google Oneindia Tamil News

சென்னை: என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா... மே மாதத்தில் சென்னை நகர கணவன்கள் பெரும்பாலானோரின் குரல் இதுவாகத்தான் இருந்திருக்கும்.

ஐ... என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா.. என மனைவி மற்றும் குழந்தைகளை ஊருக்கு பேருந்தில் ஏற்றிவிட்டு.. ஜனகராஜ் ஒரு படத்தில் சொல்வார், கத்திக்கொண்டு சந்தோஷமாக ஓடுவார். சென்னை கணவன்களின் பலரின் நிலையும் மே மாதத்தில் அப்படித்தான் இருக்கும்.

மனைவி என்பவள் விதி, பிள்ளைகள் வரம்... இதுதான் இயற்கையின் நியதி. இதன்படி வாழ்க்கையில் மகிழ்ச்சியோடு வாழ ஆசைப்படும் ஆண்களுக்கு மனைவி என்பவள் விதியாக அமையாமல் வரமாக அமைவது என்பது சிலருக்குதான் ஒத்துப்போயிருக்கும். பலருக்கு மனைவி விதியாகத்தான் தெரிவார்.

அட்சய திருதியை 2019: பொன்மழை பொழிய தானம் செய்யுங்கள்! - கனகதாரா ஸ்தோத்திரம் படியுங்கள்அட்சய திருதியை 2019: பொன்மழை பொழிய தானம் செய்யுங்கள்! - கனகதாரா ஸ்தோத்திரம் படியுங்கள்

மண்டையே சாப்ட்வேர் சிஸ்டம்

மண்டையே சாப்ட்வேர் சிஸ்டம்

சரி விஷயத்துக்கு வருவோம்.. சென்னை, போன்ற பெருநகரங்களில் பன்னாட்டு நிறுவனங்கள், சாப்ட்வேர் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றும் ஆண்கள், எந்த நேரமும் கணிணி முன்பாக அமரந்து கண்ணையும், மூளையும் கால்குலேட்டர் போல் மாற்றி வைத்திருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையில் எந்த நிமிடம் எப்படி இருக்க வேண்டும். எப்படி வேலை செய்ய வேண்டும் என்பது அவர்கள் வேலை செய்யும் சாப்ட்வேர் போல் மூளைக்குள் புரோகிராம் பிக்ஸ் செய்யப்பட்டு இருக்கும் .

குடும்பத்தோடு பயணம்

குடும்பத்தோடு பயணம்

இதனால் வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை ஒன்று தான் அவர்களுக்கு சொர்க்கமாக தெரியும். ஆனால் அன்றும் பிடித்த நண்பர்களுடன் செல்ல இயலாது. பிடித்த வேலைகளை செய்ய முடியாது, ஞாயிற்றுக்கிழமை வந்தால் காலையில் நான் வெஜ் கடையில் நீண்ட வரிசையில் காத்திருந்து கறி எடுத்து கொடுத்தால், சமைத்து சாப்பிட்டு முடித்த உடன், மனைவி மற்றும் குழந்தைகளுடன் வண்டியை எடுத்து பீச் மற்றும் பார்க் அல்லது தியேட்டர் உள்ள மால்களை நோக்கி ஷாப்பிங்கிற்காக செல்ல வேண்டியதிருக்கும்.

ஒரு நாள் எனக்கு

ஒரு நாள் எனக்கு

ஆனால் வாரம் முழுவதும் கடும் வேலைகளை செய்துவிட்டு மிஷின்போல் இருக்கும் ஆண்கள், தங்கள் நண்பர்களை சந்திப்பதற்கோ, ஒய்வு நாள் தானே என்று ஜாலியாக இருப்பதற்கோ பெரும்பாலான மனைவிகள் அனுமதிப்பது இல்லை. காரணம் வாரத்தில் 6 நாட்கள் அலுவலகத்திற்கு, மீதமுள்ள ஒரு நாள் எங்களுக்கு என்று விவாதம் செய்வார்கள். வேறு வழியில்லாமல் இதன்படி தான் பல கணவன்கள் செயல்படுகிறார்கள்.

மே மாதம் ஜாலி மாதம்

மே மாதம் ஜாலி மாதம்

இதனால் நண்பர்களை சந்திப்பதோ, உறவினர்களை சந்திப்பதோ, அல்லது மனதிற்கு பிடித்தது போல் ஜாயிலாக விடுமுறை நாட்களில் பொழுதை கழிப்பதற்கோ முடியாமல் சென்னை போன்ற பெருநகர கணவன் தவித்து வருகிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் சந்தோஷமான நாட்கள் என்றால் அது மேமாதம் தான்.மனைவி மற்றும் குழந்தைகளை கோயம்பேட்டில் போய் ஊருக்கு அனுப்பிவிட்டு, அப்போது சோக முகத்துடன் டாட்டா காட்டினாலும், அப்பாடா நிம்மதி இன்னும் ஒரு மாசத்துக்கு நமக்கு பிடிச்ச மாதிரி இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டு. வாகனத்தில் செல்வார்கள். அப்போது "ஐ... என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா மொமண்ட் பல ஆண்களுக்கு வந்து போகும்.

உப்புக் காற்றில்

உப்புக் காற்றில்

அப்படியே நண்பா ரெடியா என பேச்சுலர் நண்பனுக்கு போன் செய்வார்கள். அவ்வளவு தான். காய்ந்த மாடு புல்லில் மேய்ந்தது போல் குடி கூத்து கும்மாளம், நண்பர்களுடன் அரட்டை (எல்லோரும் இப்படி இருப்பதில்லை, நல்லவர்களும் லிஸ்ட்டில் உண்டு பாஸ்) என அந்த ஒரு மாதத்தை இஷ்டம் போல் கழிப்பார்கள். இத்தனை மணிக்கு வீட்டுக்கு போக வேண்டும் என எந்த கட்டாயமும் இல்லததால் சுதந்திர பறவையாக நள்ளிரவுகளில் பீச்சில் உப்புக் காற்றில் கரைந்து கிடப்பார்கள்.

அமுதமும் நஞ்சு

அமுதமும் நஞ்சு

தற்காலிக ஒரு மாத பேச்சுலர் வாழ்க்கைக்காக ஒருவருடம் தவம் இருக்க வேண்டும். எனினும் இந்த வாழ்க்கை 4 முதல் 5 நாட்கள் சூப்பராக இருக்கும். ஆனால் அதற்கு பின்பான நாட்கள் மனைவி மற்றும் பிள்ளைகள் இல்லாத வீடு வெறுமையும், மனதுக்குள் சோகத்தையே தரும்.. அதேநேரம் மனைவி வருகிறாள் வீட்டுக்கு என்றால், முதல் நாளே... வீட்டில் உருவான சிலபல குப்பைகளை பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கே தெரியாத அளவுக்கு தூக்கி கொண்டு போய் தூர எறிந்துவிட்டு, பக்தி மணமாக வீட்டையும் மாற்றி விடுவார்கள். இதில் சொல்ல வருவது என்னவென்றால்... எதுவுவே கொஞ்சம் தான் வாழ்க்கையில்.. எந்த விஷயமும் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சுதான்..!

English summary
wife leave from home, chennai husband happy for may month leave that janagaraj style movement
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X