100% சான்ஸே இல்லை.. எடப்பாடி பக்கம் சுழன்று அடிக்கும் காற்று! புட்டு புட்டு வைத்த புள்ளி! கேம் ஓவரா?
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு ஓ பன்னீர்செல்வத்திடம் எடப்பாடி பழனிசாமி சுமுகமாக செல்ல பார்க்கிறாரோ, இருவரும் நெருங்கி வருகிறார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்விக்கு மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் பதில் அளித்துள்ளார்.
வாக்குகள் சிதற கூடாது என்பதற்காக இருவரும் மீண்டும் கைகோர்க்க தயாராகிவிட்டனரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்வி எழுவதற்கு காரணம் இல்லாமல் இல்லை. சட்டசபையில் நடந்த இரண்டு சம்பவங்களால் இந்த சந்தேகம் எழுந்துள்ளது.
முதல் விஷயம் எதிர்க்கட்சி துணை தலைவருக்கான இருக்கை. எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓபிஎஸ் அமர வேண்டுமா உதயகுமார் அமர வேண்டுமா என்ற மோதல் நிலவி வருகிறது. ஆனால் கடந்த முறை போல எடப்பாடி இந்த முறை அவையில் பெரிதாக அமளி எல்லாம் செய்யவில்லை.

அப்பாவு
ஒரே ஒரு முறை அப்பாவுவை அவையில் சந்தித்தார். அப்பாவு இதில் முடிவு எதையும் எடுக்கவில்லை. ஆனால் இதற்கு எதிராக எடப்பாடி அவையில் பெரிதாக அமளி எதையும் செய்யாமல் ஓ பன்னீர்செல்வம் அருகிலேயே அமைதியாக அமர்ந்துவிட்டார். எடப்பாடியின் இந்த மனமாற்றம்தான் நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது. எடப்பாடி இறங்கி போக ரெடியாகிவிட்டாரா? எடப்பாடி ஏன் அமளி செய்யவில்லை? ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ஓ பன்னீர்செல்வத்துடன் எடப்பாடி பழனிசாமி சமாதானமாக செல்ல தயாராகிவிட்டாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

சட்டசபை
இரண்டாவதாக அவையில் கூட்டத்தொடர் முழுக்க அதிமுக சார்பாக ஓ பன்னீர்செல்வம் பலமுறை பேசினார். அதற்கு முன் ஓபிஎஸ் இப்படி அதிமுக சார்பாக பேசும் போதெல்லாம் அதை எடப்பாடி டீம் கடுமையாக எதிர்க்கும். ஆனால் இந்த முறை அப்படி எல்லாம் எதிர்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவையில் பின்னால் இருந்த அதிமுக எம்எல்ஏக்கள் பலர் ஓ பன்னீர்செல்வம் பேசியதை ரசித்து கேட்டுக்கொண்டுதான் இருந்தனர். ஓ பன்னீர்செல்வம் பேசுவதை எதிர்க்காமல், அவர் பேசுவதை சிரித்தபடி ரசித்துக்கொண்டுதான் இருந்தனர். இதனால் அதிமுகவினர் சுமுகமாக செல்ல தயாராகிவிட்டனரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்விக்கு மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் பதில் அளித்துள்ளார்.

பேட்டி
ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக எடப்பாடி ஓ பன்னீர்செல்வத்திடம் இறங்கி போகிறார் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். அது தோல்வி அடைய போகிற தொகுதி என்பது தெரியும். அதனால் கண்டிப்பாக அவர் கூட்டணி கட்சிக்கு தொகுதியை கொடுத்து விடுவார். அவர் ஓ பன்னீர்செல்வத்துடன் இணைந்து போட்டியிட வேண்டும் என்றால் இந்நேரம் முடிவு எடுத்து இருப்பாரே? இந்நேரம் ஓ பன்னீர்செல்வத்துடன் இணக்கமாக போய் இருப்பாரே? ஆனால் போக வில்லையே? அதை மீறி எடப்பாடி ஒரு வேட்பாளரை போட்டியிடுவதாக எடப்பாடி தனியாக அறிவித்தால் அவருக்குத்தான் சிக்கல்.

எடப்பாடி பிளான்
எடப்பாடி ஒரு வேட்பாளரை அதிமுக சார்பாக அறிவித்தால் ஓ பன்னீர்செல்வமும் ஒரு வேட்பாளரை அறிவிப்பார். எடப்பாடி சமாதானமாக ஓ பன்னீர்செல்வத்துடன் செல்ல வேண்டும் என்றால், கோர்ட்டிலேயே சமாதானமாக பேசி இருக்கலாமே? எடப்பாடி சமாதானமாக செல்கிறார் என்றெல்லாம் சொல்ல முடியாது. வெறுமனே ஓ பன்னீர்செல்வத்தை கடுமையாக எதிர்க்காமல் அமைதியாக இருக்கிறார்கள். அவ்வளவுதான். மற்றபடி எடப்பாடி - ஓ பன்னீர்செல்வமும் ஒன்றாக சேர வாய்ப்பே இல்லை. இவர்கள் சேர்வதற்கு 100 சதவிகிதம் வாய்ப்பே இல்லை.

சட்டசபை
சட்டசபையில் வைத்தியலிங்கம் - விஜயபாஸ்கர் பேசிக்கொண்டார். வைத்தியலிங்கம் வேறு வழியின்றி ஓ பன்னீர்செல்வத்தை ஆதரிக்கிறார். காரணம் வேலுமணியை வைத்தியலிங்கம் விரும்பவில்லை. அவருக்கும் வேலுமணிக்கும் மோதல். டெல்டா மண்டலத்தில் எஸ்பி வேலுமணி தலையிட்டதை எடப்பாடி தடுக்கவில்லை. டெல்டா மாவட்டத்தில் வேலுமணி தலையிட்டார். இதை தடுக்கும்படி வைத்தியலிங்கம் சொன்னார். ஆனால் எடப்பாடி இதை கேட்கவில்லை. இந்த கோபத்தில்தான் வைத்தியலிங்கம் ஓ பன்னீர்செல்வம் பக்கம் சென்றார். மற்றபடி வேறு காரணம் இல்லை. இல்லை என்றால் வைத்தியலிங்கம் எடப்பாடி பக்கம்தான் இருந்திருப்பார். இப்போதும் கூட வேலுமணி டெல்டாவில் தலையிட மாட்டார். நீங்கள் அதிமுக பக்கம் வாருங்கள் என்று எடப்பாடி அழைத்தால் வைத்தியலிங்கம் எடப்பாடி பக்கம் வந்துவிடுவார்.

ஓ பன்னீர்செல்வம்
ஓ பன்னீர்செல்வத்துடன் அவர் இருக்க மாட்டார். கோவை செல்வராஜ் சப்போர்ட் கூட இப்போது ஓ பன்னீர்செல்வத்திற்கு இல்லையே? எடப்பாடி சமாதானம் செய்து அழைத்தால் வைத்தியலிங்கம் எடப்பாடி பக்கம் வந்துடுவிடுவார். அதிமுக பொதுக்குழு வழக்கில் எப்படி முடிவு வரும் என்று தெரியாது. ஓபிஎஸ், எடப்பாடி பதவிக்கு வந்ததே பொதுக்குழு மூலம்தான். இதுவரை ஓ பன்னீர்செல்வம் இருந்த பதவி எல்லாம் பொதுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட பதவிகள்தான். அப்படிப்பட்ட சூழலில் ஓ பன்னீர்செல்வம் எப்படி பொதுக்குழுவையே எதிர்க்கலாம்.

சாதகம்
அப்படி இருக்கும் போது வழக்கு எடப்பாடிக்கு சாதகமாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து. கட்சி விதி இருக்கலாம். அப்படி என்றால் உட்கட்சி தேர்தல் நடத்த வேண்டும். யார் மாவட்டம்தோறும் தேர்தல் நடத்துவது. இது கட்சிக்கும் தெரியும். வழக்கு எடப்பாடிக்கு சாதகமாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து. இந்த தீர்ப்பிற்காகவே அதிமுக காத்து இருக்கிறது. இந்த தீர்ப்பு வந்தால் பிரச்சனைகள் சரியாகும். எடப்பாடி இதற்குத்தான் காத்து இருக்கிறார். பாஜகவும் இதற்குத்தான் காத்து இருக்கிறது., என்று பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications