• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

திடீரென வந்த ரஜினி அறிவிப்பு.. உருவாகிறதா 3வது அணி.. அதிமுகவில் இருந்து பாஜக விலகுமா..?

|

சென்னை: ரஜினியை வைத்து, திராவிட கட்சிகளுக்கு செக் வைக்க ஆரம்பத்தில் இருந்தே பாஜக முயன்று வருவதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகுமா? விலகிய கையோடு ரஜினியுடன் இணையுமா? உருவாகிறதா 3வது அணி என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

உடல்நிலை காரணம் காட்டி ஒதுங்கினாலும் பாஜக விரட்டி விரட்டி வந்தது.. அந்த சமயத்தில்தான் அதாவது சில தினங்களுக்கு முன்பு ஒரு செய்தி கசிந்தது.. அதன்படி, தமிழகத்தில் ரஜினியின் தற்போதைய கிரேஸ் பற்றி அமித்ஷாவுக்கு ரிப்போர்ட் ஒன்று போனதாம்.. அதில், 1996-ல் ரஜினிக்கு இருந்த கிரேஸ், இப்போதுள்ள கிரேஸ், அரசியல் களத்தில் ரஜினி ஏற்படுத்திய தாக்கம் குறித்தெல்லாம் தெரிவிக்கப்பட்டதாம்.

அதனடிப்படையில், ரஜினிக்கு மக்கள் ஆதரவு எதிர்பார்த்த அளவு இல்லை என்று கூறப்பட்டதாகவும், அதனால்தான் பாஜகவின் கவனம் குறி வைத்தாகவும் சொல்லப்பட்டது. ஆனால், அவ்வளவும் அமித்ஷா சென்னை வந்தபோது இந்த கணிப்பபெல்லாம் சிதறி போயிற்று.

'இப்படி பேட்டி' கொடுக்க ரஜினிக்கு என்ன உரிமை இருக்கு.. நைசா தலையில் கட்டுறீங்களா.. வெடித்த சர்ச்சை

சமாதானம்

சமாதானம்

இன்னும் சொல்லப்போனால் அமித்ஷா சென்னை வந்ததே ரஜினியை சமாதானப்படுத்தவேதான் என்றார்கள்.. இவர்களுக்கான சந்திப்பு நடக்கவில்லையே தவிர, குருமூர்த்தி அமித்ஷா ரூமுக்கு அன்றைய தினம் ஏன் போனார்? அவருடன் என்ன பேசினார் என்பது இப்போது வரை உள்ள வெளிவராத தகவல் ஆகும்!

அதிமுக

அதிமுக

ஆரம்பத்தில் இருந்தே, ரஜினியின் அரசியல் வருகை என்பது உண்மையிலேயே திமுக - அதிமுகவுக்கு லேசான நடுக்கத்தையே தந்துள்ளதாக கூறப்பட்டு வருகிறது.. இதை திமுக ஓபனாக காட்டிக் கொண்டது என்றால், அதிமுகவுக்கு உள்ளுக்குள்ளேயே உதறல் இருந்துள்ளது... ரஜினி கட்சியை ஆரம்பித்தால், வாக்குகள் சிதறுமே என்பது அதிமுகவின் கவலையாக இருக்கிறதாக தெரிகிறது. அதேபோல, திமுகவுக்கு ஏற்படும் கவலை என்னவென்றால், 10 வருஷம் இல்லாமல் இருந்து, கஷ்டப்பட்டு மேலே எழுந்து வரும் சமயத்தில், ரஜினியை எதிர்கொள்வது என்பது பெரிய சிக்கல் என்பதுதான்.

இந்துத்துவா

இந்துத்துவா

இந்த இரு கட்சிகளின் பீதியைதான் பாஜக ரஜினியை வைத்து பயன்படுத்தி கொள்ள கணக்கு போட்டது.. ஆன்மீக அரசியல் என்ற ஒன்றை மக்கள் முன்நிறுத்தி, இந்துத்துவா ஓட்டுக்களை அப்படியே ரஜினியுடன் சேர்ந்து தாமும் அளள் வேண்டும் என்பதே தாமரை கட்சியின் லட்சியம் என்றும் சொல்லப்பட்டது.

பாஜக கணக்கு

பாஜக கணக்கு

ரஜினியை களத்துக்கு கொண்டுவருவதில், அமித்ஷா தான் தீவிரமாக இருந்தார்.. அதற்காகவே அவர் நேரடியாகவே அழைப்பும் விடுத்தார்.. ரஜினியை பயன்படுத்தினால், தங்கள் கட்சியின் செல்வாக்கு உயரும் என்று கணக்கு போட்டு வந்த நிலையில், இப்போது, ரஜினி ரசிகர்களுக்கு அடுத்தபடியே குஷியாகி உள்ளது பாஜக தரப்புதான்.. அதனால், நிர்ப்பந்தம் காரணமாக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில், இனி அதிமுகவை விட்டு பாஜக விலகுமா? அங்கிருந்து வந்து ரஜினியுடன் இணையுமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

60 சீட்டுக்கள்

60 சீட்டுக்கள்

ஏற்கனவே முருகன் 60 சீட் கேட்டதற்கு, அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாத நிலையில், ரஜினியை வைத்து அதிக சீட் கேட்க பாஜக முயலலாம்.. அல்லது ரஜினியுடன் இணைந்து அதிமுக, திமுக என்ற திராவிட கட்சிகளுக்கு டஃப் தரலாம்.. போகிற போக்கை எல்லாம் பார்த்தால், அன்று முருகன் சொன்னது மாதிரி கோட்டையில் காவி கொடி பறந்தாலும் ஆச்சரியப்படுதற்கில்லைதான்.

கட்சி

கட்சி

கண்டிப்பாக 3வது அணி உருவாக வாய்ப்பு உள்ளதாக ஏற்கனவே பேசப்பட்டது.. தனியாக தேர்தலை சந்திக்ககூட பாஜக தயார் என்று முருகன் பேட்டி தந்தபோதெல்லாம் இந்த 3 வது அணி குறித்த பேச்சும் அடிபட்டது.. ஆனால் ரஜினி கட்சி ஆரம்பிக்காமல் இதற்கு வாய்ப்பபில்லை என்று கருதப்பட்டது.. ஒருவேளை ரஜினி கட்சி ஆரம்பித்தால், பாஜக, பாமக, தேமுதிக, மநீம, அமமுக என மிகப்பிரம்மாண்டமான அணி உருவாகக்கூடும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதினர்.. அப்படித்தான் இப்போதும் யோசிக்க வேண்டி உள்ளது.

காவி சாயம்

காவி சாயம்

அதேசமயம், ரஜினியின் முடிவு என்னவென்று நமக்கு தெரியவில்லை.. என் மீது காவி சாயம் பூசப்படுகிறது என்று பலமுறை பேட்டிகளில் ரஜினி பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார்.. தமிழகத்தில் பாஜகவுக்கு எதிரான ஒரு மனநிலை இருப்பதையும் அவர் நன்றாகவே உணர்ந்துள்ளார்.. இவ்வளவு காலம் இல்லாமல, இப்போது அரசியலுக்கு வந்து, பாஜகவிடம் சிக்கி கொண்டு மக்களிடம் கெட்ட பெயர் கிடைத்துவிடக்வடாது என்பதிலும் அவர் உறுதியாகவே இருப்பார். அதிமுகவே பாஜகவிடம் பட்டும் படாமலும் இரக்கும்போது, ரஜினி இன்னும் ஜாக்கிரதையாகவே இருப்பார் என்றுதான் அரசியல் நோக்கர் சொல்கிறார்கள். அதனால் பாஜக ரஜினியுடன் இணையலாம்.. ஆனால், ரஜினி பாஜகவுடன் இணைவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 
 
 
English summary
Will BJP join with Rajinikanth and form 3rd Front
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X