சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Exclusive: நேற்று பெய்தது போலவே இன்றும் சென்னையில் பேய்மழை பெய்யுமா? தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன பதில்

Google Oneindia Tamil News

சென்னை: நேற்று மழை பெய்தது போலவே இன்றும் சென்னையில் தீவிர கன மழை பெய்யுமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஒன்இந்தியா தமிழுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

Recommended Video

    Chennai-யில் திடீரென கொட்டித்தீர்த்த கனமழை..காரணம் என்ன? | Oneindia Tamil

    கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அளவிற்கு நேற்று சென்னையில் அதி தீவிர கனமழை பெய்தது. 10 மணி நேரமாக சென்னையில் விடாமல் பெய்து வந்த கனமழை காரணமாக மொத்த நகரும் வெலவெலத்து போய் உள்ளது. ஆழ்வார்பேட்டை, மீனம்பாக்கம், வளசரவாக்கம், ஈசிஆர் சாலை முழுக்க மழை அளவு 100 மிமீ அளவை தாண்டிவிட்டது.

    வருட கடைசியில் இப்படி பெய்த மழை மக்களை பெரும் அதிர்ச்சிக்கும், இன்னல்களுக்கும் உள்ளாக்கியது. அதிலும் மைலாப்பூர், எம்ஆர்சி நகர், மெரினா சாலை, நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் எல்லாம் 200 மிமீ மழையை தாண்டிவிட்டது.

    கடைசி டாஸ்க்.. டிக்கெட்டை தட்டி தூக்கிய போட்டியாளர்..இவருக்காகத்தான் இந்த ஏற்பாடா??கடைசி டாஸ்க்.. டிக்கெட்டை தட்டி தூக்கிய போட்டியாளர்..இவருக்காகத்தான் இந்த ஏற்பாடா??

     தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

    தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

    இந்த நிலையில் நேற்று மழை பெய்தது போலவே இன்றும் மாலை நேரத்தில் சென்னையில் தீவிர கன மழை பெய்யுமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கம் அளித்துள்ளார். அவர் ஒன்இந்தியா தமிழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில், நான் முன்பே கணித்தது என்னவோ இன்றும் நாளையும் மழை அதிகம் பெய்யும் என்றுதான். நேற்று மழை மிதமாக இருக்கும், இன்று கனமழை பெய்யும் என்றுதான் கணித்து இருந்தோம்.

    மிதமான மழை

    மிதமான மழை


    ஆனால் நேற்று எதிர்பார்க்காத அளவிற்கு மிக கனமழை பெய்து உள்ளது. பல இடங்களில் 200 மிமீ தாண்டி பெய்து உள்ளது. இன்றும் கண்டிப்பாக தமிழ்நாட்டில் மழை பெய்யும். ஆனால் நேற்று பெய்தது போல சென்னையில் தீவிர கனமழை பெய்யும் என்று சொல்ல முடியாது.

    சென்னை தாண்டி மழை

    சென்னை தாண்டி மழை

    நேற்று சென்னை தாண்டி மற்ற இடங்களில் அவ்வளவு பெரிதாக மழை பெய்யவில்லை. டெல்டாவில் இரவு கொஞ்சம் மழை பெய்தது. மயிலாடுதுறையில் கொஞ்சம் மழை பெய்தது. மற்றபடி ஈசிஆரில் கொஞ்சம் மழை பெய்தது. மற்றபடி எல்லா மழையும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில்தான் பெய்து உள்ளது.

    மத்திய சென்னை

    மத்திய சென்னை

    முக்கியமாக மத்திய சென்னையில் நல்ல அதிகன மழை பெய்துள்ளது. மெதுவாக நகர்ந்த மேகங்கள் அப்படியே சென்னையில் மழையை கொட்டி தீர்த்து இருக்கிறது நுங்கம்பாக்கம், மைலாப்பூர், அண்ணாசாலை, டிஜிபி அலுவலகம் என்று அந்த பெல்ட் முழுக்க தீவிர கனமழை மழை பெய்துள்ளது. இது ஒருவகையில் சென்னையில் தீவிர கனமழை பெய்ய காரணமாக இருக்கலாம்.

    தமிழ்நாடு வானிலை

    தமிழ்நாடு வானிலை

    நேற்று பெய்த மழை சாதாரண மழைக்கால மழை போல மழை போல இல்லை. நவம்பர் மாதத்தில் பெய்யும் மழையிலும், மழை காலத்தில் பெய்யும் மழையிலும் பெரிய அளவில் இடி மின்னல் அவ்வளவு இருக்காது. ஆனால் நேற்று பெய்த மழை சாதாரண மழைக்கால மழையை போல அல்லாமல் மிகவும் வித்தியாசமாக இருந்தது. இதற்கு காரணம் என்னதான் என்று உறுதியாக இப்போது சொல்லிவிட முடியாது.

    காரணம் என்ன

    காரணம் என்ன

    வானிலை மாதிரிகள், டேட்டாக்களை சோதனை செய்துவிட்டுதான் இதை சொல்ல முடியும். என் கணிப்புப்படி பார்த்தால் மழை மேகங்கள் அதிகமாக சென்னை மேல் இருந்துள்ளது. காற்று வேகம் குறைவாக இருந்ததால் மேகங்கள் மிக மெதுவாக நகர்ந்து இருக்கிறது. இதன் காரணமாக மேகங்கள் ஒரே இடத்தில் அதிக நேரம் மழையை கொட்டி இருக்கிறது என்று கூறலாம்.

    இன்று மழை நிலவரம்

    இன்று மழை நிலவரம்

    அதேபோல் மேற்கு பக்கத்தில் ஏற்பட்ட காற்று பள்ளம் இதற்கு காரணமாக இப்படி மழை ஏற்பட்டு இருக்குமா என்று பார்க்க வேண்டும். இன்றும் நாளையும் எதிர்பார்த்த மாதிரியே பெய்யும். ஆனால் நேற்று பெய்தது போல சென்னையில் தீவிர கனமழை பெய்யும் என்று சொல்ல முடியாது. மழைக்காலம் போல சாதாரண மழையே இன்றும் நாளையும் பெய்யும், என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Will heavy rain pour today also in Chennai? Tamilnadu weatherman Pradeep John Exclusive report.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X