"கிடைச்ச கேப்பில் எல்லாம்".. ஓபிஎஸ் + 2 பேர்.. உறுப்பினர் பதவிக்கே சிக்கல்? நொறுக்கி தள்ளும் இபிஎஸ்!
சென்னை: நாளை அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி மட்டும் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டால் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பதவிக்கு வந்ததும் பல முக்கிய நடவடிக்கைகளை அவர் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு நாளை வானகரம் ஸ்ரீ வாரு மண்டபத்தில் பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் மண்டபத்தில் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிகழ்விற்காக எடப்பாடி ஆதரவாளர்கள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள். அது யார் எடப்பாடி ஆதரவாளர்கள் என்றால் கிட்டத்தட்ட அதிமுகவில் இருக்கும் 95% பேர் தற்போது எடப்பாடி ஆதரவாளர்கள்தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

எடப்பாடி ஆதரவு
கிட்டத்தட்ட கொங்கு மண்டலம் முழுக்க எடப்பாடி பக்கம்தான் நிற்கிறது. வடக்கு மண்டல நிர்வாகிகளும் எடப்பாடியுடன்தான் இருக்கிறார்கள். எதிர்பார்க்காத வகையில் தென் மண்டல நிர்வாகிகளையும் எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியமாக "சமாளித்து" விட்டார். இதனால் கொத்து கொத்தாக தென் மண்டல நிர்வாகிகளும் ஓபிஎஸ் தரப்பில் இருந்து எடப்பாடி தரப்பிற்கு ஜம்பாகி வருகிறார்கள். நேற்று மட்டும் எடப்பாடி கேம்பிற்கு ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் 5 பேர் தாவினார்கள்.

ஓபிஎஸ் ஆதரவு
இன்றும் ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் வரிசையாக எடப்பாடி பக்கம் செல்ல தொடங்கி உள்ளனர். எடப்பாடி பழனிச்சாமியுடன் முன்னாள் எம்பி மைத்ரேயன் சந்திப்பு நடத்தி உள்ளார். நேற்று வரை ஓபிஎஸ்ஸுடன் இருந்த மைத்ரேயன் எடப்பாடி பக்கம் தாவி உள்ளார். இன்று காலைதான் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு தாவினார் ஓபிஎஸ் ஆதரவாளர் வேளச்சேரி அசோக். அதன்பின் ஓபிஎஸ் உறவினரான ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் முனியசாமி இபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

என்ன செய்வார் எடப்பாடி?
இதனால் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக இருக்கும் மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை 5 ஆக குறைந்து உள்ளது. இந்த நிலையில் பெரிதாக ஆதரவு இல்லாத ஓபிஎஸ்க்கு எடப்பாடி முக்கிய பதவி கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நாளை அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி மட்டும் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டால் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி ஓபிஎஸ்ஸுக்கு முக்கிய பதவி எதுவும் கொடுக்காமல் மொத்தமாக ஓரம்கட்ட வாய்ப்பு உள்ளது.

ஓரம்கட்ட வாய்ப்பு
ஓபிஎஸ்ஸுக்கு பெரிய சப்போர்ட் இல்லாததால் மொத்தமாக அவைத்தலைவர் உள்ளிட்ட எந்த பொறுப்பையும் கொடுக்காமல் அப்படியே ஓரம் கட்ட வாய்ப்பு உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று ஜெயக்குமார் முக்கியமான விஷயம் ஒன்றை கொளுத்தி போட்டார். அதில்.. கட்சியை எதிர்த்து வழக்கு போட்டால் உறுப்பினர் பதவியே காலியாகும் என்று அதிமுகவின் விதியில் உள்ளதாக ஜெயக்குமார் கூறியுள்ளார். அதாவது பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் வழக்கு போட்டால் அவரை கட்சியில் இருந்தே நீக்க முடியும் என்று ஜெயக்குமார் மிரட்டி உள்ளார்.

நீக்கம்?
ஓபிஎஸ்ஸுக்கு நிர்வாகிகள் ஆதரவு இல்லாத நிலையில்.. அவரை எதிர்காலத்தில் நீக்குவதற்கான சிக்னலாக இது பார்க்கப்படுகிறது. ஆனால் எடப்பாடி அவ்வளவு கடுமையான முடிவை இப்போதே எடுப்பாரா என்பது சந்தேகம்தான். ஒருவேளை ஓபிஎஸ் சசிகலாவை அதிகாரபூர்வமாக சந்திக்கும் பட்சத்தில், எடப்பாடி இப்படி ஏதாவது முடிவுகளை எடுக்க வாய்ப்பு உள்ளதே ஒழிய.. இப்போதே ஓபிஎஸ்ஸை கட்சியில் இருந்து நீக்க வாய்ப்பு குறைவாக உள்ளது.

2 பேர்
ஆனால் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு எதிராக எடப்பாடி ஆக்சன் எடுக்க வாய்ப்பு உள்ளது. பொதுக்குழுவில் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக பேசும் நபர்கள் மீது பொதுச்செயலாளர் மீது எடப்பாடி ஆக்சன் எடுக்க வாய்ப்பு உள்ளது. முக்கியமான மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்ட 2 பேர் ஓபிஎஸ்ஸுக்கு தீவிரமாக ஆதரவு அளிப்பதால், பொதுக்குழுவில் எடப்பாடி பொதுச்செயலாளர் ஆகும் பட்சத்தில் இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க அதிக வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தினர்!
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications