• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"புள்ளி" வைக்க போகும் திமுக.. "கோலம்" போட தயாராகும் சசிகலா.. இணைவாரா ஓபிஎஸ்?

Google Oneindia Tamil News

சென்னை: மொத்தமாகவே ஓரங்கட்டப்பட்டு விட்டாரா ஓபிஎஸ்? இனி அவர் என்ன செய்வார்? அவரது அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? சசிகலாவுடன் இணைவாரா? என்பன போன்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. அதேசமயம், திமுக எடுக்கப்போகும் அதிரடிகளை வைத்துதான், சசிகலாவின் அடுத்தக்கட்ட அரசியல் நிகழ்வுகள் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இன்று ஆட்சியை இழந்தாலும் 65 எம்எல்ஏக்களை பெற்று பிரதான எதிர்க்கட்சியாக கெத்தாக உட்கார்ந்துள்ளது அதிமுக.

 காந்தியின் 20 வருட உழைப்பு.. வானதியின் 8 ஆண்டு முயற்சி.. அதனால்தான் வெற்றி.. எஸ்.வி.சேகர் பளிச் காந்தியின் 20 வருட உழைப்பு.. வானதியின் 8 ஆண்டு முயற்சி.. அதனால்தான் வெற்றி.. எஸ்.வி.சேகர் பளிச்

அதேசமயம், ஓபிஎஸ்ஸின் செல்வாக்கு மளமளவென சரிய தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.. மற்றொரு பக்கம் சசிகலாவுடன் ஓபிஎஸ் வெளிப்படையாகவே கைகோர்க்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.. இதுகுறித்து நாம் சிலரிடம் பேசினோம்.. அவர்கள் நம்மிடம் அனுமானத்தில் சொன்னது இதுதான்:

 ஓபிஎஸ்

ஓபிஎஸ்

ஓபிஎஸ்ஸின் இந்த நிலைமைக்கு காரணம் ஓபிஎஸ்தான்.. கட்சியில் எப்போது பிரச்சனை வந்தாலும், தன் பக்கமே அதை சரிசெய்து கொள்வார்.. தனக்கு சாதகமாகவே முடித்து கொள்வார்.. அப்படித்தான் இந்த முறையும் நடக்கும் என்று எதிர்பார்த்தார்.. தன் ஆதரவாளர்கள் இந்த முறையும் கைவிட மாட்டார்கள் என்று நம்பினார்.. ஆனால் சொதப்பி விட்டார்கள்.

 ஆதரவு

ஆதரவு


61 எம்எல்ஏக்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறது என்ற வாதத்தை முன்வைத்தே அவரை சம்மதிக்க வைத்திருப்பதாக தெரிகிறது.. அவ்வளவு ஏன், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கோபமாக கூட்டத்தை விட்டு கிளம்பி செல்கிறார் என்றால், அவரை ஒருத்தருமே சமாதானம் செய்யவில்லை.. இதுதான் அவர் நிலைமை,.. அவர் பிரச்சனையைகூட யாரும் காது கொடுத்து கேட்பதாக தெரியவில்லை..

 சசிகலா

சசிகலா

ஆனால், இதெல்லாம் தற்காலிகம்தான்.. தனக்கான ஆதாயத்தை ஓபிஎஸ் சாதிக்காமல் விட்டதில்லை.. அன்று எப்படி தனக்கான நேரம் வந்த பிறகுதான் சசிகலாவுக்கு எதிரான தர்மயுத்தத்தை ஆரம்பித்தாரோ அதுபோல, இந்த முறையும் எடப்பாடிக்கு எதிரான காய்களை நகர்த்தக்கூடும்.

 நடவடிக்கை

நடவடிக்கை

இந்த சமயத்தில் சசிகலா தரப்பின் நடவடிக்கையையும் கவனிக்க வேண்டி உள்ளது.. ஜெயிலில் இருந்து வந்ததுமே தன்னை தேடி அதிமுக நிர்வாகிகள் வருவார்கள் என்று நினைத்தார், நடக்கவில்லை.. ஓபிஎஸ்ஸாவது வந்து பார்ப்பார் என்று எதிர்பார்த்தார் அதுவும் நடக்கவில்லை.. அதிமுக தோல்வி அடைந்ததும், அப்போதாவது, தன் சமூகம் சேர்ந்தோர் தன்னை சந்திக்க வருவார்கள் என்று கணக்கு போட்டார்.. அதுவும் நடக்கவில்லை..

 கல்யாணம்

கல்யாணம்

எனவே, டிடிவி வீட்டு கல்யாணத்துக்கு ஓபிஎஸ்ஸை அழைக்கப்பட்டு, அதன்மூலம் தன் அரசியல் ஆட்டத்தையும் சசிகலா தொடங்கலாம்.. அல்லது எப்படியும் திமுக தலைமை, அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை தூசி தட்டி கையில் எடுக்கும். அந்த நேரத்தில் சில முக்கிய நிர்வாகிகள் தன்னை தேடி கண்டிப்பாக வருவார்கள் என்று சசிகலா நம்பி கொண்டிருக்கிறார்..

 திமுக

திமுக

ஆக, தானாக யாரையும் சென்று சந்திக்காமல், தன்னை தேடியே நிர்வாகிகள் வருவார்கள் என்றும், அதற்கான காலம் கனிந்து வருவதாகவும், திமுகவின் நடவடிக்கைகளை வைத்தே சசிகலாவின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது..

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

இனிவரும் காலத்தில், ஓபிஎஸ் - சசிகலா தரப்பினர் கரம் கோர்த்தாலும், எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் பெருவாரியான ஆதரவை அசைக்க முடியாது, அதிமுகவின் அதிகார நாற்காலியை எடப்பாடி எப்போதோ பிடித்துவிட்டார்.. சசிகலாவும் சரி, ஓபிஎஸ்ஸும் சரி, பாஜகவை பலமாக நம்பியவர்கள்.. ஆனால், தற்போது இருவரையும் பாஜக கைவிட்டுவிட்டது.. தவிர, ஸ்டாலினின் அதிரடிகளை பார்த்து பாஜக தலைமையே சற்று ஜெர்க் ஆகி உள்ளபோது, சசிகலா, பன்னீருக்கு எந்த அளவுக்கு மறைமுகமாக உதவி புரிய போகிறதோ தெரியவில்லை".. என்றனர்.

English summary
Will O Panneerselvam join with Sasikala Soon
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X