சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெரிய ட்விஸ்ட்.. "ஓபிஎஸ் சொன்னதை வரவேற்கிறேன்".. போட்டுடைத்த தினகரன்! இணையும் டிடிவி - சசி - ஓபிஎஸ்?

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் சேர்ந்து இயங்க வேண்டும் என்று கூறிய ஓ பன்னீர்செல்வமின் கருத்தை வரவேற்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Eps-க்கு மீண்டும் அழைப்பு விடுத்த OPS *Politics

    அதிமுக பொதுக்குழு வழக்கில் வென்ற நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர்செல்வம், அதிமுகவில் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அவர் தனது பேட்டியில், ஒன்றுபட்டு ஜனநாயக ரீதியில் பயணித்தால் அதிமுகவை யாராலும் வெல்ல முடியாது. அதிமுக எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

    எங்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் அசாதாரண சூழல் ஏற்பட்டது. அதிமுக ஒன்றுபட்ட போது அதை வீழ்த்த இயலவில்லை என்பது நிரூபணம்.

    55 + 4 ... நொறுங்கிய பிளான்.. இடிக்கும் கணக்கு..டோட்டலாக 55 + 4 ... நொறுங்கிய பிளான்.. இடிக்கும் கணக்கு..டோட்டலாக

    திமுக

    திமுக

    நாம் ஒன்றாக இருந்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும். அப்படி இல்லாமல் போனதால்தான் திமுக வென்றது. திமுகவை வீழ்த்த நாம் இணைய வேண்டும். நடந்தவைகள் நடந்தவைகளாகவே இருக்கட்டும். கடந்தவை கடந்தவைகளாக இருக்கட்டும். அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட விரும்புகிறார்கள். அதிமுகவில் வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட வேண்டும். அதிமுக ஒன்றுபடுவதே அனைவரது விருப்பமாக இருக்கிறது.

    சசிகலா

    சசிகலா

    எங்களை பொறுத்தவரை தலைவர் காலத்தில் தலைவருடன் உடன் இருந்து பாடுபட்டவர்கள், தலைவருக்காக தொடக்க காலத்தில் அவருடன் இருந்தவர்கள், இந்த கழகத்தை உருவாக்க உடன் இருந்தவர்கள், இயக்கத்தை வளர்க்க ஒத்துழைப்பு கொடுத்தவர்கள், தூணாக இருந்து இயக்கத்தை வளர்க்க ஒத்துழைப்பு கொடுத்தவர்கள், அவர்கள் யாராக இருந்தாலும் அதிமுகவில் இணைந்து செயல்பட வேண்டும் .

    எங்கே செல்ல வேண்டும்?

    எங்கே செல்ல வேண்டும்?

    நாங்கள் அங்கே செல்ல வேண்டும். அவர்கள் இங்கே வர வேண்டும் என்று சொல்ல மாட்டேன். எல்லோரும் இணைந்து ஒன்றாக செயல்பட வேண்டும் என்றுதான் கூறுகிறேன். அனைவரும் என்றால் சின்னம்மா.. டிடிவி தினகரன் இருவரும் அதில் இருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். போதுமா? அவர்கள் வந்து சேர்கிறார்களா? நாங்கள் போகிறோமோ என்று இல்லை.

    டிடிவி தினகரன்

    டிடிவி தினகரன்

    அதிமுக 30 வருடம் ஆண்ட வரலாறு கொண்ட கட்சி. அதற்கு இந்த இரண்டு தலைவர்களும் உறுதுணையாக இருந்தனர். தொண்டர்களின் விருப்பமும் அதுதான் என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்தார். இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வமின் இந்த பேச்சை அமமுக பொதுச்செயலாளர் வரவேற்று பேசி உள்ளார். அதில், தீயசக்தியான தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் இணக்கத்துடன் செயல்படவேண்டும் என்ற திரு.O.பன்னீர்செல்வம் அவர்களின் கருத்தை சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவர் ஒருவரும் வரவேற்கவே செய்வார்கள்.

    உச்சம்

    உச்சம்

    அதேசமயம், சுயநலத்தின் உச்சமாக, பதவி வெறிபிடித்தாடும், துரோக சிந்தனை உடைய ஒரு கும்பல் நல்லதை எப்போதும் ஏற்காது என்பதும் அனைவரும் அறிந்ததே, என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இவர் அளித்த பேட்டியில் கூட எதிர்காலத்தில் ஓ பன்னீர்செல்வமுடன் இணைந்து செயல்பட தனக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் எக்காலத்திலும் எடப்பாடியுடன் இணைந்து செயல்பட மாட்டேன் என்று டிடிவி தினகரன் கூறியது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Will OPS join hands with Sasikala and TTV? Dinakaran says YES. அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் சேர்ந்து இயங்க வேண்டும் என்று கூறிய ஓ பன்னீர்செல்வமின் கருத்தை வரவேற்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.அ
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X