• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

10 "தாமரைகள்".. 2 விஷயங்களுக்கு "பச்சை கொடி".. மேட்டரை கையில் எடுத்த டெல்லி.. குறியே திமுகதானாம்

Google Oneindia Tamil News

சென்னை : வரப்போகும் எம்பி தேர்தலுக்கு தமிழக பாஜக இப்போதே தயாராகி உள்ளது.. அதற்காக 2 விதமான அதிரடிகளையும் கையில் எடுத்துள்ளது..!

சட்டசபை தேர்தலில் 4 சீட்கள் கிடைத்த வெற்றியைவிட, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவின் எழுச்சி பாஜகவுக்கு, கிடைத்த பெருத்த நம்பிக்கையையும் உற்சாகமும் அபரிமிதமானது.

பாஜகவை தோற்கடிப்பது தான் நோக்கமே! மகாராஷ்டிரா ராஜ்யசபா தேர்தலில் காங்.,க்கு ஆதரவளித்த ஓவைசி கட்சி பாஜகவை தோற்கடிப்பது தான் நோக்கமே! மகாராஷ்டிரா ராஜ்யசபா தேர்தலில் காங்.,க்கு ஆதரவளித்த ஓவைசி கட்சி

"எப்போதுமே தனித்து போட்டியிட்டால் தான், ஒவ்வொரு கட்சியின் முழுமையான பலம் தெரியும்... அப்போதுதான், அடுத்தடுத்த தேர்தல்களில் நம்மை பலப்படுத்தி கொள்ள, தேர்தல் வியூகங்களை அமைத்து கொள்ள முடியும்" என்று அண்ணாமலைக்கு அப்போதே மேலிட தலைவர்கள் அட்வைஸ் தந்ததாக சொல்லப்பட்டது.

டஃப் தரும் கட்சி

டஃப் தரும் கட்சி

இதற்கு பிறகு, தமிழக பாஜக 2 விதமான வியூகங்களை கையில் எடுத்தது.. ஒன்று அதிமுகவை முந்திக் கொண்டு, திமுகவுக்கு டஃப் தருவது, மற்றொன்று, மாற்று கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களை தன்பக்கம் இழுக்க தூண்டில்போடுவது.. இவை இரண்டிலுமே கிட்டத்தட்ட வெற்றியையும் பாஜக பெற்று கொண்டிருக்கிறது..

நம்பர் 1

நம்பர் 1

பாஜக மேலிடத்தை பொறுத்தவரை, "திமுகதான் நம்பர் ஒன் எதிரி" என்பதில் மாற்றுக் கருத்தில்லை.. அதனால்தான் தமிழக அரசை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடத்தினால், இதற்கு பாஜக தலைமை முழு ஆதரவு தரும்" என்று பச்சை கொடி காட்டி நம்பிக்கையை ஏற்கனவே தந்தாராம் அமித்ஷா... இப்போது விஷயம் என்னவென்றால், எம்பி தேர்தல் வர உள்ள நிலையில், பாஜக சில புதிய வியூகங்களை கணக்கு போட்டு வருகிறதாம்.

திருமா கோபம்

திருமா கோபம்

அதன்படி முதலாவதாக, திமுகவின் கூட்டணியை பலவீனப்படுத்தி, பாஜக கூட்டணியை வலுப்படுத்துதானாம்.. இந்த அஸ்திரத்தை கடந்த சட்டசபை தேர்தலின்போதே பாஜக எதிர்பார்த்தது.. திமுக எப்படியும் குறைந்த சீட்களை, அதன் கூட்டணிக்கு ஒதுக்கவே செய்யும், அதை நிச்சயம் கூட்டணி கட்சிகள் ஏற்காது, திமுகவுடன் கூட்டணியை முறித்து கொள்வார்கள் என்று நம்பியது.. ஆனால், பாஜகவின் இந்த நம்பிக்கையை சுக்குநூறாக நொறுக்கியதே திருமாவளவன்தான்.. இதுக்கு ஒரு விளக்கத்தையும் அப்போதே திருமாவளவன் தந்திருந்தார்.

திருமாவளவன்

திருமாவளவன்

"திருமாவளவனை சீண்டினால் ஆவேசப்படுவார், ஆத்திரப்படுவார், கூட்டணியை விட்டு வெளியே வருவார்.. இதனால் கூட்டணி சின்னாபின்னமாகிவிடும் என்று பலர் நினைத்தார்கள்.. ஆனால், நான்தான் கூட்டணியில் முதல் ஆளாக போய் கையெழுத்து போட்டேன்.. அவர்கள் கணக்கு எல்லாமே இன்று தவிடுபொடியாகிவிட்டது. ஆறா அல்லது பத்தா என்பது பிரச்சனை இல்லை, இந்த நாட்டில் பாஜக இங்கு வரணுமா, வரவேண்டாமா என்பதுதான் பிரச்சனை" என்று சீறியிருந்தார்.

பக்கபலமை

பக்கபலமை

எனவே, இந்த முறையாவது, திமுக கூட்டணியை பலவீனப்படுத்தும் முயற்சியில் பாஜக முனைப்பு காட்ட துவங்கியிருப்பதாக சொல்கிறார்கள்.. அதாவது திமுகவுக்கு எதிரான கட்சிகளை எல்லாம் ஒன்று திரட்டுவது, அந்த கட்சிகளுக்கு பக்கபலமாக துணை நிற்பது, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வைப்பது, அவைகளில் இருந்து வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பதவி தந்து, டெல்லியில் உட்கார வைத்து, திமுகவுக்கு டஃப் கொடுப்பது.. இதுதான் அந்த பிளானாம்.

கணக்கு போடும் பாஜக

கணக்கு போடும் பாஜக

எப்படியும் வரப்போகிற தேர்தலில் அதிமுகவுடன் தான் கூட்டணி என்பதில் சந்தேகம் இல்லை.. ஆனால், அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைந்து செயல்படுத்த, அதிமுக, பாமக, தேமுதிக தயாராக இருக்குமா? என்பது தெரியவில்லை.. ஒருவேளை இவர்கள் ஒத்துழைப்பு கிடைக்காவிட்டாலும், தனித்த முறையில் திமுகவுக்கு எதிரானவர்களை ஒன்றிணைக்க பாஜக உதவ போவதாக தெரிகிறது.. ஆனால் இந்த லிஸ்ட்டில் நாம் தமிழர் மட்டும் இருக்காது. சீமான் எப்படியும் யாருடனும் சேர போவதில்லை என்பதால், மற்றவர்களை ஒன்றிணைக்க பாஜக கணக்கு போடலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

டபுள் டிஜிட்

டபுள் டிஜிட்

மற்றொரு பிளான், இந்துக்களுக்கு எதிரான கட்சியாக திமுகவை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதாகும்.. ஆனால், இதை அரசியல் கட்சிகள் மூலம் இல்லாமல், மடாதிபதிகள், ஆதீனங்கள், வைத்து, திமுகவுக்கு எதிராக பேச வைப்பதாம்.. அதற்கான அறிகுறிதான் கடந்த 2 மாதமாகவே தமிழகத்தில் தென்பட்டு கொண்டிருப்பதாக கூறுகிறார்கள்.. இதனால் திமுக மீது வெறுப்பை கக்க வைத்து, வரப்போகும் தேர்தலில் 10 சீட் அதாவது டபுள் டிஜிட் சீட்களையாவது தமிழகத்தில் பெற வேண்டும் என்பதே நோக்கமாக உள்ளதாம்..

10 தாமரைகள்

10 தாமரைகள்

எனினும், இதற்கெல்லாம் சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என்று தெரியவில்லை.. அதேசமயம், தாங்கள் தமிழகத்தில் வளர்ந்து வருகிறோம் என்று சொல்லி கொள்ளும், பாஜக தலைவர்கள் படுபிஸியாக களத்தில் இப்போதே இறங்கியும் விட்டனர்.. இந்த நாசூக்கு பிளான்களை எல்லாம் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக எப்படி எதிர்கொள்ள போகிறது? ஆளும் கட்சியான திமுக, இதை எப்படி நொறுக்கி தள்ள போகிறது? என்பதெல்லாம் இனிமேல்தான் தெரியவரும்..

English summary
Will TN BJP win 10 seats in mp election and What is the advice given by Amitsha தமிழகத்தில் 10 இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்றாராம் அமித்ஷா
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X