விங்ஸ் கன்வென்ஷன் சென்டர் யார் சாய்ஸ்? அப்படி என்ன அந்த இடத்தில் விசேஷம்? திமுக பொதுக்குழு ருசிகரம்!
சென்னை: திமுக பொதுக்குழு நடைபெறவுள்ள விங்ஸ் கன்வென்ஷன் சென்டரில் விறுவிறுப்பாக வேலைகள் நடந்து வருகின்றன.
5,000 பேர் வரை அமரக்கூடிய அளவுக்கு விசாலாமான இட வசதி, 3,000 பேர் வரை ஒரே நேரத்தில் சாப்பிடலாம், 300க்கும் மேற்பட்ட கார்களை பார்க்கிங் செய்யலாம் என ஏராளனாம சிறப்புகளை பெற்றிருக்கிறது விங்ஸ் கன்வென்ஷன் சென்டர்.
திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினும், அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலினும் சேர்ந்து ஆலோசித்து தான் திமுக பொதுக்குழு நடைபெறும் இடத்தை தேர்வு செய்திருக்கிறார்கள்.

திமுக பொதுக்குழு
அக்டோபர் 9ஆம் தேதி அன்று சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகே உள்ள விங்ஸ் கன்வென்ஷன் செண்டரில் திமுக பொதுக்குழு நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அன்றைய தினமே திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் முறைப்படி தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்நிலையில் திமுக பொதுக்குழுவுக்கான முன்னேற்பாடுகள் விங்ஸ் கன்வென்ஷன் சென்டரில் விறு விறுப்படைந்துள்ளன.

என்னென்ன சிறப்புகள்
விங்ஸ் கன்வென்ஷன் சென்டரில் ஒரே நேரத்தில் 5,000 பேர் வரை அமரும் அளவுக்கு இடவசதி உண்டு. இதேபோல் 3,000 பேர் வரை சாப்பிடக் கூடிய அளவுக்கு பரந்த விசாலாமன இடம் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக 300-க்கும் மேற்பட்ட கார்களை விங்ஸ் கன்வென்ஷன் சென்டர் வளாகத்திற்குள் நிறுத்திக் கொள்ளலாம். மேலும், அமைந்தகரையில் மக்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படா வண்ணம் உள்நோக்கி தள்ளி இருப்பதால் போக்குவரத்து நெரிசலும் வெகுவாக குறையும்.

பெங்களூர் ஓனர்
விங்ஸ் கன்வென்ஷன் சென்டரின் நிறுவனர் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் விங்ஸ் கன்வென்ஷன் சென்டர் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. சைவம், அசைவம் என இரண்டு விதமான உணவுகளுக்கும் இங்கு அனுமதி உண்டு என்பது கவனிக்கத்தக்கது. வழக்கமாக அதிமுக பொதுக்குழு நடைபெறும் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டப வளாகத்தில் அசைவ உணவுகளுக்கு அனுமதி இல்லை என்பதும் இதனால் வெளியே உள்ள கார் பார்க்கிங் பகுதியில் தான் இந்த விருந்து நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணா அறிவாலயம்'
சென்னையில் திமுக பொதுக்குழு நடைபெற்றால் வழக்கமாக அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் தான் நடைபெறும். இதனால் அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படும். ஆளுங்கட்சி என்பதால் இடையூறு கொடுக்கிறார்கள் என மக்கள் நெகட்டிவாக நினைத்துவிடக் கூடாது என்பதற்காகவே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் அமைந்துள்ள விங்ஸ் கன்வென்ஷன் சென்டரில் திமுக பொதுக்குழு நடைபெறவுள்ளது.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications