Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ட்விஸ்ட்.. அஸ்திவாரத்துக்கே ஆபத்து?.. இப்படி ஒரு விஷயம் இருக்காமே.. மெயின் மேட்டரை பிடித்த "தலை"

எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் விவகாரத்தில் பாஜக என்ன செய்ய போகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமி தனக்கான மெஜாரிட்டியை நிரூபித்துவிட்ட நிலையில், பாஜகவுடன் அவருடனான உறவு இனி எப்படி இருக்க போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது..!

Recommended Video

    கட்சிக்குள் போட்டியாளர்களை எடப்பாடி கவிழ்த்த வரலாறு

    விரைவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும், எம்பி தேர்தல் வர போகிறது.. இதற்கான காய்நகர்த்தல்களை தேசிய கட்சிகள் துவங்கிவிட்டன..

    அதேபோல மாநில கட்சிகளும் தேசிய கட்சிகளுடன் தங்கள் மறைமுக பேச்சுவார்த்தையை ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது.

     பல்டி அடித்த சம்பவங்கள்

    பல்டி அடித்த சம்பவங்கள்

    அந்த வகையில், தமிழக காங்கிரஸ் தரப்பு கடந்த சில மாதங்களாகவே அப்செட்டில் உள்ளது.. திமுக அரசு நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி வருகை, வெங்கைய்யா நாயுடு வருகை, பட்டினப்பிரவேசம், பிரியாணி திருவிழா சம்பவங்களில் பல்டி அடித்தது போன்றவைகள், காங்கிரஸ் தரப்புக்கு அதிருப்தியை தந்து வந்தது.. இதற்கு நடுவில் பேரறிவாளனை முதல்வர் கட்டிப்பிடித்ததுமே, காங்கிரஸ் அதிர்ந்து போய்விட்டது.. பெயரளவுக்கு கண்டனங்களை நடத்தினாலும், வலுவான எதிர்ப்பை திமுக தரப்பில் முன்வைக்காமல் மென்று விழுங்கி வருவதாக சொல்லப்படுகிறது.

    சப்போர்ட்

    சப்போர்ட்

    அதேபோல, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை, பாஜக மீது அதிருப்தியில் உள்ளார்.. குட்ட குட்ட குனிய தயார் இல்லை என்பது போல, பாஜக எதிர்ப்பு நடவடிக்கைகள் சிலவற்றையும் எடுத்தார்.. ஓபிஎஸ்ஸுக்கு கண்மூடித்தனமாக சப்போர்ட் கிடைக்கும் நிலையில் தனக்கான ஆதரவு கிடைக்கவில்லை என்ற வருத்தம் ஒருபக்கம் இருந்தாலும், பாஜக கூட்டணியில் இருக்கும்வரை தமிழகத்தில் அதிமுக தலைநிமிர முடியாது என்பதையும் உணர்ந்துள்ளதாகவே தெரிகிறது.

     சண்முகம் பேச்சு

    சண்முகம் பேச்சு

    ஆக, ஒருபக்கம் கூட்டணியுடன் காங்கிரஸ் அதிருப்தி, மறுபக்கம் கூட்டணியுடன் அதிமுக அதிருப்தியில் சிக்கி கிடக்க, திடீரென அதிமுக - காங்கிரஸ் கட்சிகள் நெருக்கம் காட்ட துவங்கின.. கடந்த 20 நாட்களுக்கு முன்புவரை இந்த பேச்சுதான் அதிமுகவுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.. ராகுல்காந்திக்கு போனை போட்டு எடப்பாடி பேசியதாகவும், செய்திகள் கசிந்தன.. இதற்கு பிறகுதான், ஒற்றை தலைமை விவகாரம் வெடித்து சிதறிவிட்டது. இப்போது எடப்பாடி தன் பெரும்பான்மையை நிரூபித்துள்ளார்.. ஓபிஎஸ்ஸுக்கு அந்த அளவுக்கு ஆதரவு இல்லை.. ஆனால், சட்டத்தையும், தேர்தல் ஆணையத்தையும், டெல்லியையும், பிரதானமாக நம்பி உள்ளார்.

     லிஸ்ட் எடுத்த டீம்

    லிஸ்ட் எடுத்த டீம்

    இனி வர போகும் காலங்களில், எடப்பாடி, பாஜகவுடன் எப்படி உறவை கடைப்பிடிப்பார்? எம்பி தேர்தலை எப்படி சந்திப்பார்? காங்கிரஸ் விஷயத்தில் என்ன முடிவு எடுப்பார்? என்பன போன்ற சந்தேகங்களும் எழுகின்றன.. மற்றொருபுறம், எடப்பாடி மீதான புகார்களை லிஸ்ட் போட்டு, ஓபிஎஸ் டீம் ரிப்போர்ட்களை அனுப்பி உள்ளது.. அதில், வேல் யாத்திரைக்கு தடை, நீட் எதிர்ப்பு என்று பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடப்பாடி எடுத்ததை சுட்டிக் காட்டி உள்ளார்களாம்... பாஜகவால் தான் தோற்றோம் என்று சிவி சண்முகம் பேசியது, பாஜகவின் வளர்ச்சி அதிமுகவுக்கும், தமிழகத்துக்கும் நல்லதல்ல என்ற பொன்னையன் பேசியதும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.

     பறந்த ரிப்போர்ட்கள்

    பறந்த ரிப்போர்ட்கள்

    கடந்த மாதம் நடந்த பொதுக்குழுவில் தடுப்பூசி திட்டத்துக்காக பிரதமரை பாராட்டி நிறைவேற்றவிருந்த தீர்மானம் ரத்தானது முதல், பாஜகவுக்கு இதுவரை எடப்பாடி எடுத்த அத்தனை நகர்வுகளையும் அதில் ஓபிஎஸ் டீம் வரிசைப்படுத்தி உள்ளார்களாம்.. ஏற்கனவே, டிடிவி, சசிகலாவுடன் இணைந்து செல்ல வலியுறுத்தியும், அதை எடப்பாடி பழனிசாமி மறுத்த நிலையில், அந்த கோபமே பாஜகவுக்கு இன்னும் உள்ளது.. போதாக்குறைக்கு மேற்கண்ட அத்தனை புகார்களும் பறந்துள்ள நிலையில், மேலிடம் மேலும் சூடாகி உள்ளதாம்.

     திடீர் ரெய்டு

    திடீர் ரெய்டு

    அதுமட்டுமல்ல, மாஜிக்கள் 2, 3பேர் மீது "ரெய்டு" நடவடிக்கை எடுத்தால், எடப்பாடி டீம் வெலவெலத்து போய்விடும், பிறகு எல்லாமே சுமூக முடிவுக்கு வரும் என்றும் டெல்லிக்கு யோசனை சொல்லப் போகிறார்களாம்.. ஒருவேளை இதெல்லாம் உண்மையானால், எடப்பாடி பழனிசாமி இதை எப்படி எதிர்கொள்வார்? என்ற எதிர்பார்ப்பும் எகிறி வருகிறது.. தங்கள் பேச்சை மீறுவதால், தங்களுக்கு ஒன்றும் இழப்பில்லை என்பதை பாஜக நன்கு உணர்ந்துள்ளது..

     கோட்டை வட்டாரம்

    கோட்டை வட்டாரம்

    காரணம், கொங்குவில் அண்ணாமலை ஸ்டிராங்காக உள்ள நிலையில், தென்மண்டலத்தில் ஓபிஎஸ் & தினகரன் & சசிகலா டீமை இறக்கி வாக்குகளை அள்ளும் யுக்தியும் பாஜகவிடம் நிரம்ப உள்ளது.. ஆனால், அவ்வளவு சீக்கிரம் எடப்பாடி பழனிசாமி பாஜகவை பகைத்து கொள்ள விரும்ப மாட்டார் என்கிறார்கள்.. விரைவில், அக்கட்சியை சமாதானம் செய்ய, கூல் நடவடிக்கையையும் எடுப்பார் எடப்பாடி என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.. இந்த நடவடிக்கையில்தான், அதிமுகவின் வருங்கால கூட்டணியும் அடங்கி இருக்கிறது என்பதே யதார்த்த உண்மை.. என்ன நடக்க போகிறது என்று பார்ப்போம்..!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+