Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையை உலுக்கிய "சிவப்பு நிற கார்.." வசமாக சிக்கிய டிப் டாப் பெண்.. உள்ளே பார்த்தால் ஆடுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் சிவப்பு நிற காரில் டிப்டாப் உடையணிந்து 6 மாதங்களாக ஆயிரக்கணக்கான ஆடுகளை திருடிச்சென்று உல்லாசமாக வாழ்ந்து வந்த பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். சீக்கிரம் பணக்காரர் ஆக்குவதாக கூறி அந்த பெண்ணை ஆடு பிடிக்க தூண்டிய கறிக்கடைக்காரரையும் போலீசார் கைது செய்தனர்.

சென்னை பம்மல் பகுதியில் உள்ள ஆதாம் நகரத்தை சேர்ந்தவர் சின்ன பொன்னன் (வயது 80). இவர் சுமார் 20 ஆடுகளை வளர்த்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தனது வீட்டின் முன் கட்டி போட்டிருந்த ஆடுகள் திருடு போனது. இதனால், அதிர்ச்சி அடைந்த சின்ன பொன்னன் காவல்துறையில் புகார் அளித்தார். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சிவப்பு நிறம் கொண்ட காரில் வந்த பெண் உள்ளிட்ட 2 பேர் ஆடுகளை களவாடி செல்வது தெரிந்தது.

5 ஆடுகளையும் திருடுவதற்காக

5 ஆடுகளையும் திருடுவதற்காக

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினர். ஆடு திருடும் கும்பலை போலீசார் ஒரு பக்கம் தேடிக்கொண்டு இருக்க கடந்த சில தினங்களுக்கு முன்பாக சின்ன பொன்னன் வளர்த்து வந்த 5 ஆடுகளையும் திருடுவதற்காக அதே கும்பல் மீண்டும் வந்தது. ஆடுகளை காரில் ஏற்றும் போது ஆடுகளின் சத்தத்தை கேட்டு வந்த சின்ன பொன்னன் அங்கு சிவப்பு நிற கார் நின்றதை கவனித்தார்.

கறிக்கடைகளில் ஆய்வு

கறிக்கடைகளில் ஆய்வு

உடனே சின்னபொன்னன் சத்தம் போடவே சுதாரித்த திருட்டு கும்பல் தப்பி ஓடிவிட்டது. இதையடுத்து போலீசார் மீண்டும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது, புதுச்சேரி பதிவெண் கொண்ட சிவப்பு நிற கார் தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் உள்ள போரூர் சுங்கச்சாவடியை கடந்து செல்வது தெரியவந்தது. உடனே அப்பகுதியில் உள்ள கறிக்கடைகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் மதுர வாயல் பகுதியில் உள்ள கறிக்கடை ஒன்றில் சின்ன பொன்னனின் ஆடுகளை விற்பனை செய்திருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

3 பேர் கைது

3 பேர் கைது

இதையடுத்து கடை உரிமையாளரான பரூக் (வயது 33) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அனகாபுத்தூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெயக்குமார் (வயது 36), முடிச்சூரை சேர்ந்த சரோஜினி (வயது 36) ஆகிய இருவரும் தான் முக்கிய குற்றவாளிகள் என்பதை கண்டறிந்தனர். துரிதமாக நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசார், சம்பந்தப்பட்ட இருவரையும் நேற்று முன் தினம் கைது செய்தனர். அவர்கள் இருவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது.

 சீக்கிரம் பணக்காரர் ஆக ஐடியா

சீக்கிரம் பணக்காரர் ஆக ஐடியா

இது தொடர்பாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டதாவது:- மதுரவாயல் பகுதியில் கறிக்கடை வைத்திருக்கும் பரூக்கிற்கும் சரோஜினிக்கும் பழக்கம் இருந்துள்ளது. சீக்கிரம் பணக்காரர் ஆக வேண்டும் கூறிய சரோஜினிக்கு பரூக் ஐடியா கொடுத்துள்ளார். இதன்படி ஆடுகளை திருடி கொடுத்தால் அதனை விற்று நல்ல பணம் தருகிறேன் என்று பரூக் கூறியுள்ளார். இதையடுத்து சரோஜினி, அனகாபுத்தூரை சேர்ந்த ஆட்டோ டிரைவரான ஜெயக்குமார் என்பவரது ஆட்டோவை வாடகைக்கு எடுத்துச் சென்று, அவரது துணையுடன் ஆடுகளை திருட தொடங்கியிருக்கிறார்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை திருடி..

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை திருடி..

இதில் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை ஜெயக்குமாருக்கும் கொடுத்துள்ளார். சரோஜினி மற்றும் ஜெயக்குமார் இருவரும் ஆடுகளை திருடி, அதனை கறிக்கடை நடத்தும் பாரூக்கிற்கு விற்று வந்துள்ளனர். பல்லாவரம், பம்மல், தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி ஆகிய புறநகர் பகுதிகளில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை திருடி விற்று வந்துள்ளதாக சரோஜினி, ஜெயக்குமார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+