ஷாக்.. உறவினர் நிகழ்ச்சியில் பிரியாணி! அப்படியே மயங்கி சரிந்த பவானி! கணவன் எடுத்த விபரீத முடிவு!
சென்னை : சென்னையில் நிகழ்ச்சியொன்றில் பிரியாணி சாப்பிட்டு திடீர் மாரடைப்பில் மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை அயனாவரம் மேட்டுத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் தம்புசாமி . பிளம்பிங் வேலை பார்த்து வரும் இவருக்கு, 23 வருடங்களுக்கு முன்பு பவானி என்பவருடன் திருமணமாகி 22 வயதில் யுவஸ்ரீ என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில் நேற்று பவானி மேட்டு தெருவில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு தனது உறவினருடன் சென்றார். நிகழ்ச்சியில் விருந்தினர்களுக்கு பிரியாணி சமைத்து பரிமாறப்பட்டிருக்கிறது.

பிரியாணி
அங்கு பிரியாணி சாப்பிட்ட பவானி, பின்னர் வீட்டிற்கு உறவினருடன் நடந்து வந்தபோது திடீரென பவானிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உடனடியாக உறவினர் உதவியுடன் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், பவானி வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர்.

பெண் திடீர் மரணம்
அதனைத் தொடர்ந்து இதுகுறித்து தகவலறிந்து பவானியின் கணவர் தம்புசாமி, அவரது மகள் யுவஸ்ரீ ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து இறந்த பவானியின் உடலை கண்டு கதறி அழுதனர். அதன் தொடர்ச்சியாக மருத்துவமனையில் இருந்த தம்புசாமி காணாமல் போனதால், அவரது மகள் யுவஸ்ரீ செல்போனில் தொடர்பு கொண்டபோது தம்புசாமி செல்போனை எடுக்காததால் அனைவரும் பதற்றம் அடைந்தனர்.

கணவன் தற்கொலை
பின்னர் பவானியின் உடலை ஆட்டோ மூலம் வீட்டிற்கு எடுத்து வந்தபோது, வீட்டின் சமையல் அறையில் தம்புசாமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த அயனாவரம் போலீசார் தம்பு சாமியின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை
மேலும் தற்கொலை குறித்தும், பவானி உயிரிழந்ததற்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி இறந்த சோகத்தில் கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அயனாவரம் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பிரியாணி சாப்பிட்ட பின் உடல்நலக் குறைவு மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுவதாக செய்திகள் அதிகளவில் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications