சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செஸ்ஸில் மாஸ் காட்டிய பிரக்ஞானந்தா..! வாரி அணைத்துக் கொண்ட இந்தியன் ஆயில்! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை : உலகின் முன்னணி செஸ் வீரர்களை வீழ்த்தி செசபிள் மாஸ்டர்ஸ் தொடரில் 2வது இடம் பிடித்த இந்திய இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

சென்னை பாடியில் பிறந்த சிறுவனான பிரக்ஞானந்தா உலக அளவில் செஸ் போட்டி களில் அசத்தி வருகிறார்.5 வயது முதல் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று வரும் இவர் ஏழு வயதிலேயே உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.

10 வயதிலேயே சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டத்தை வென்ற அவர் இளவயது சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டத்தை வென்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதேபோல் பல பட்டங்களையும் அவர் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பள்ளி ஒத்துழைப்பே சாதனைக்கு காரணம்... சென்னை திரும்பிய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா பேட்டி பள்ளி ஒத்துழைப்பே சாதனைக்கு காரணம்... சென்னை திரும்பிய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா பேட்டி

செஸ் தொடர்

செஸ் தொடர்

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் உலக அளவில் சிறந்த 16 வீரர்கள் பங்கேற்ற செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டிகள் தொடங்கியது. இந்த போட்டியில் சென்னையை சேர்ந்த 16 வயது இளம் வீரர் பிரக்ஞானந்தாவும் பங்கேற்றார். தொடரின் 5வது சுற்றில் சாம்பியனும் முதல் நிலை வீரருமான நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து விளையாடினர் ப்ரக்ஞானந்தா.

கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா

கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா

ஆட்டம் டிராவை நோக்கிசென்று கொண்டிருந்த நிலையில் கார்ல்சன் தனது 40வது நகர்வை தவறுதலாக நகர்த்தினார். இதை சாதகமாக்கி கார்ல்சனை தோற்கடித்தார். கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற போட்டியிலும் பிரக்ஞானந்தா, கார்ல்சனை வீழ்த்தியிருந்தார். அடுத்ததாக கால் இறுதி சுற்றில், பிரக்ஞானந்தா 2.5-1.5 என்ற கணக்கில் சீனாவின் வெய்யியை வீழ்த்தினார்.

தொடரில் 2வது இடம்

தொடரில் 2வது இடம்

அரையிறுதி சுற்றில் நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியை டை பிரேக்கர் சுற்றில் 1.5 - 0.5 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார். இதை தொடர்ந்து இறுதி போட்டிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா சீன வீரர் டிங் லிரனை சந்தித்தார். இந்த போட்டியில் முதல் செட்டை சீன வீரர் திங் லிரன் கைப்பற்றினார். ஆனால் 2வது செட்டுக்கான போட்டியில் அவர் திறமையாக விளையாடி வெற்றி பெற்றார். இதனால், 1-1 என்ற செட் கணக்கில் போட்டி சமன் அடைந்தது. தொடர்ந்து டை பிரேக்கரில் தோல்வியடைந்ததால் 2வது பிடித்தார் ப்ரக்ஞானந்தா.

இந்தியன் ஆயில் நிறுவனம்

இந்தியன் ஆயில் நிறுவனம்

உலகின் முன்னணி செஸ் வீரர்களை வீழ்த்தி செசபிள் மாஸ்டர்ஸ் தொடரில் 2வது இடம் பிடித்த இந்திய இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வியாழன் அன்று அதன் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா மற்றும் ஐஓசியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத் தலைவர் வி.சி. அசோகன் ஆகியோர் கலந்துகொண்ட விழாவில் முறைப்படி அந்நிறுவனத்தில் இணைந்தார். இப்போது 16 வயதாகும் ப்ராக்ஞானந்தா 18 வயதை எட்டியதும் ஐஓசி நிறுவனத்தில் முறைப்படி இடம் பெறுவார்.

அசத்தல் வேலை வாய்ப்பு

அசத்தல் வேலை வாய்ப்பு

இணைப்பு விழாவில் பேசிய ப்ராக்ஞானந்தா, ஐஓசி சார்பில் இணைப்பு கடிதம் வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ஐஓசியுடன் இருக்கும் பல செஸ் வீரர்களை நான் அறிவேன், அது அவர்களுக்கு எப்படி ஆதரவளிக்கிறது என்பது எனக்கு தெரியும், ஐஓசியில் இணைந்தது பெருமையாக உள்ளது. இது எனது செஸ் வாழ்க்கையில் எனக்கு பெரும் ஆதரவாக இருக்கும் என்றார். இனி அவர் பங்கேற்கும் போட்டிகளுக்கு ஐஓசி ஸ்பான்சர் செய்வதோடு, அலுவலர் அளவிலான பணிக்கு ஊதியம் என ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் அவருக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Indian Oil Corporation (IOC) has announced that Pragyananda, the youngest Indian chess player to finish second in the Chesapeake Masters Series, will be offered a job at Indian Oil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X