பைக் ஓட்டணும்னு ஆசையா இருக்கு.. நொடியில் நடந்த கொடுமை.. பரிதாபமாக உயிரை விட்ட குன்றத்தூர் அபிநயா!
பைக் விபத்தில் இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்
Recommended Video
சென்னை: "பைக் ஓட்ட கத்து தர்றியா, ஆசையா இருக்கு" என்று ஆசையாக கேட்ட அபிநயா.. கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ரோட்டோரம் உள்ள தடுப்பு சுவற்றில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
குன்றத்தூர் அடுத்த சிக்கராயபுரம் அருகே பைக் விபத்தில் ஒரு பெண் இறந்துகிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்ததில், இளம்பெண், முகம், கை, கால்களில் பலத்த காயங்களுடன் சடலமாக கிடந்தார். அவருக்கு பக்கத்திலேயே இன்னொருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

விசாரணை
இதையடுத்து இளைஞரை மீட்ட போலீசார் குரோம்பேட்டையில் ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். அதில், படுகாயமடைந்தவர் பெயர் அண்ணாமலை, வயசு 21 என்பது தெரியவந்தது. உயிரிழந்த பெண்ணின் பெயர் அபிநயா, வயசு 20 என்பதும் தெரியவந்தது.

அபிநயா
அபிநயா, காட்டுப்பாக்கத்தில் உள்ள தனியார் ஷோரூமில் கொஞ்ச நாளாக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போதுதான் அண்ணாமலையுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் வேலையை விட்டு அபிநயா நின்றுவிட்டார். இதனால் சம்பள பாக்கியை வாங்கி வருகிறேன் என்று வீட்டில் சொல்லிவிட்டு கிளம்பி இருக்கிறார்.

பைக்
பிறகு குன்றத்தூரில் பைக்குடன் காத்திருந்த அண்ணாமலையுடன் ஷோரூமுக்கு புறப்பட்டு சென்றார் அபிநயா. வழியில், "பைக் ஓட்ட கற்று தர்றியா, ஆசையா இருக்கு" என்று அண்ணாமலையிடம் கேட்டுள்ளார். அதற்கு அண்ணாமலையும் சரி என்று சொல்லி, பைக்கை ஓட்ட சொல்லி அபிநயாவிடம் தந்துவிட்டு, பின்னாடி உட்கார்ந்து கொண்டார்.

பரிதாப பலி
ஆனால் அபிநயா எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி ரோட்டோரம் இருந்த தடுப்பு சுவரில் உள்ள கம்பியில் போய் பலமாக மோதிவிட்டார். இதில் அவரது முகம், கை, கால்கள், கழுத்தில் கம்பி குத்தி கிழித்து ரத்தம் கொட்டியது. சில நிமிடங்களிலேயே அதே இடத்தில் அபிநயா பரிதாபமாக உயிரிழக்க, அண்ணாமலை காயங்களுடன் தூக்கி வீசப்பட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications