சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏன்.. உங்க தலைவருக்கு உடம்பு சரியில்லாம போகாதா..? ரஜினியை விமர்சிப்போருக்கு இளம் எழுத்தாளர் கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை: அரசியலுக்கு வராததால் ரஜினியை விமர்சிக்கிறீர்களே நாளை உங்கள் தலைவருக்கு உடம்பு சரியில்லாம போகாதா என கேட்கிறார் இளம் எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர் அஸ்வின்.

இதுகுறித்து டேக் 1 டேக் 2 டேக் 3 யூடியூப் சேனலில் அஸ்வின் கூறுகையில் ரஜினி எப்போதுமே சூப்பர்ஸ்டார்தான். அவர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் எழுந்தது.

இதையும் தாண்டி டிசம்பர் 31, 2017இல் அவர் அரசியலுக்கு வர போவதாக அறிவித்தார். பின்னர் டிசம்பர் 3-ஆம் தேதி அரசியல் கட்சியை ஜனவரியில் தொடங்குவேன் என அறிவித்தார்.

மருத்துவமனை

மருத்துவமனை

அண்ணாத்த படத்தில் ரஜினி தொடர்பான காட்சிகள் 40 சதவீதம் எடுக்க வேண்டியிருக்கிறது. இதற்காக அவர் ஹைதராபாத் சென்றிருந்தார், அங்கு அந்த படக்குழுவினருக்கு கொரோனா வந்துவிட்டது, ரஜினிக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சென்னை திரும்பினார்.

கருத்துகள்

கருத்துகள்

டிசம்பர் 31-ஆம் தேதி அவர் என்ன சொல்வார் என ஆவலுடன் அனைவரும் காத்துக்கொண்டிருந்தனர். இந்த நிலையில்தான் அவர் அரசியல் கட்சியை தொடங்க போவதில்லை என அறிவித்துவிட்டார். ரஜினி அரசியலுக்கு வர போவதாக அறிவித்தவுடன் சில கருத்துகள் நேர்மறையாக வந்தாலும் பல கருத்துகள் எதிர்மறையாகத்தான் வந்திருக்கிறது.

விவரங்கள்

ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் ரஜினி இருந்தார். ரஜினி அரசியலுக்கு வராவிட்டால் நிறைய படங்களில் நடிப்பார். ரஜினி அரசியலுக்கு வரபோவதில்லை என சொன்னதற்கு காரணம் அவரது உடல்நிலைதான். அவர் வெளியிட்ட அறிக்கையில் அவர் மேலும் சில விவரங்களை தெரிவித்துள்ளார்.

ரஜினி என்ன நினைக்கிறார்?

ரஜினி என்ன நினைக்கிறார்?

அதாவது 120 பேர் இருந்த படப்பிடிப்பு தளத்திலேயே உடல்நிலை பாதிக்கப்பட்டு 3 நாட்கள் மருத்துவமனையில் இருந்தேன். இந்த நிலையில் பிரச்சாரத்திற்கு சென்று மக்களை சந்தித்தால் என் உடல்நிலை மேலும் பாதிக்கும் என தெரிவித்திருந்தார். வீடியோ கால் மூலம் மக்களிடம் பேசினால் அது எடுபடாது என ரஜினி நினைக்கிறார்.

அரசியலுக்கு வர வேண்டாம்

அரசியலுக்கு வர வேண்டாம்

தான் பிரச்சாரத்திற்கு வந்தால் கூட்டம் கூடிவிடும். இந்த கூட்டத்தின் மூலம் கொரோனா பரவினால் இதனால் மக்களும் ரசிகர்களும் பாதிக்கப்படுவார்கள். தாம் வருவதால் மற்றவர்களை பலிகடா ஆக்க கூடாது என்பது ரஜினியின் எண்ணம். ஆனால் அவர் ஜோதிடரை பார்த்ததாகவும் தற்போது நேரம் சரியில்லை என்பதால் அரசியலுக்கு வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தியதாக சிலர் கூறுகிறார்கள்.

சூப்பர்ஸ்டார்

சூப்பர்ஸ்டார்

எது எப்படியிருந்தாலும் அவர் அரசியலுக்கு வர வேண்டிய வயதை அவர் தாண்டிவிட்டார். அவர் அரசியலுக்கு வந்துதான் சேவை செய்ய வேண்டும் என்றில்லை. அரசியலுக்கு வராமலேயே என்னால் மக்களுக்கு இயன்ற சேவையை செய்ய முடியும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அவருடைய வயதிற்கு இன்று வரை நடிப்பதே பாராட்டக்கூடிய விஷயம். எனவே அவரை சூப்பர்ஸ்டாராக மட்டுமே பார்க்கலாம்.

விமர்சனம் வேண்டாம்

விமர்சனம் வேண்டாம்

ரஜினிக்கு ஜோதிடத்தில் நிறைய நம்பிக்கை இருக்கிறது. எனவே கோவிட், உடல்நிலை, ஜோதிடம் ஆகியவற்றால் ரஜினி தனது முடிவை கைவிட்டார் என சிலர் கூறுகிறார்கள். தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ற முடிவைதான் ரஜினி எடுத்திருக்கிறார். நம்முடைய சூப்பர்ஸ்டாராக அவர் திரும்பிவிட்டார், அரசியலை மறந்துவிட்டு அவர் ஸ்டாராக பார்ப்போம், ஆனால் ரஜினியை விமர்சிப்பதில் எந்த நியாயமும் இல்லை என்றார்.

English summary
Young Writer condemns those who criticises Rajinikanth for his decision on politics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X