சிஎன்ஜி, பிஎன்ஜி எரிவாயு விலை குறைப்பு.. ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. குஜராத்தில் திடீர் சலுகை
அகமதாபாத்: குஜராத்தில் சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி எரிவாயு விலை மீதான வாட் வரி எனப்படும் மதிப்பு கூட்டு வரியை 10 சதவீதம் குறைப்பதாக குஜராத் அமைச்சர் ஜிது வாக்ஹனி தெரிவித்தார். மேலும் ஆண்டுக்கு 2 சிலிண்டர்கள் இலவசமாக கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
குஜராத் சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் ஆண்டின் தொடக்கத்தில் முடிவுக்கு வருகிறது.
இதனால், அதற்கு முன்பாக அந்த மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்துவது அவசியம். எனவே, இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டமன்ற தேர்தல் குஜராத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத் தேர்தல் தேதி
கடந்த 15- தேதி தேர்தல் ஆணையம் இமாசல பிரதேச மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்தது. அன்றைய தினம் குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. விதிகளின் படியே தேர்தல் தேதி அறிவிப்புகள் வெளியாவதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்து இருந்தது.

அரவிந்த் கெஜ்ரிவாலும் தீவிர முயற்சி
ஆனாலும், பாஜகவுக்கு உதவும் வகையில் தேர்தல் ஆணையம் நடந்து கொள்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்தன. எப்படி இருந்தாலும் இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என்பதால், குஜராத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குஜராத்தில் ஏறத்தாழ கால் நூற்றாண்டாக பாஜக ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. இந்த முறை பாஜகவை வீழ்த்தி விட வேண்டும் என்ற நோக்கத்துடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கோதாவில் குதித்துள்ளார்.

மும்முனை போட்டி
இதனால் அடிக்கடி குஜராத் சென்று மக்களை சந்தித்து அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் பல்வேறு வாக்குறுதிகளையும் கெஜ்ரிவால் அள்ளி வீசி வருகிறார். இதனால், குஜராத் சட்டமன்ற தேர்தலில் இம்முறை பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவும் என்று தெரிகிறது. இந்த நிலையில், குஜராத்தில் சி.என்.ஜி ( அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு) மீதா வாட் வரி வரி குறைக்கப்பட்டுள்ளது.

பிஎன்ஜி எரிவாயுவின் விலையும் குறைப்பு
வாட் வரி எனப்படும் மதிப்பு கூட்டு வரியை 10 சதவீதம் குறைப்பதாக குஜராத் அமைச்சர் ஜிது வாக்ஹனி தெரிவித்தார். இந்த விலை குறைப்பின் மூலம் சிஎன்ஜி விலை ஒரு கிலோவிற்கு ரூ.6 முதல் 7 வரை குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் பிஎன்ஜி எரிவாயு மீதான வாட் வரியும் 10 சதவீதம் குறைக்கப்படுவதாக குஜராத் அரசு அறிவித்துள்ளது.

ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்
இதன்மூலம் பிஎன்ஜி எரிவாயுவின் விலை ரூ. 5 முதல் 6 வரை கிலோவுக்கு குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆண்டுக்கு இரண்டு சிலிண்டர்கள் இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் ஜிது வகானி தெரிவித்தார். சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி எரிவாயு விலை மீதான வாட் வரி குறைப்பால் அரசுக்கு கூடுதலாக 1650 கோடி ரூபாய் சுமை ஏற்படும் என குஜராத் அரசு தெரிவித்துள்ளது.

திடீர் விலை குறைப்பு ஏன்
இதற்கிடையே திடீரென இந்த விலை குறைப்பு எதற்காக என்ற கேள்வி அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. விரைவில் குஜராத் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடபெற உள்ளதால், இதை மனதில் வைத்தே இந்த விலை குறைப்பை அரசு வெளியிட்டு இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications