2வது நாளாக சோதனை... எஸ்பி வேலுமணியின் ஆதரவாளரான சந்திரசேகரை விடாத வருமான வரித்துறை
கோவை: நமது அம்மா பத்திரிகையின் வெளியீட்டாளரும், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு நெருக்கமானவருமான சந்திரசேகரின் வீடு அலுவலகங்களில் நேற்று வருமான வரித்துறை சோதனை நடந்த நிலையில் இன்று 2வது நாளாக சோதனை தொடர்கிறது.
நமது அம்மா பத்திரிகையின் வெளியீட்டாளராக இருப்பவர் சந்திரசேகர். இவர் முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான எஸ்பி வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவர்.
கோவை வடவள்ளியை சேர்ந்த சந்திரசேகர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளராகவும் உள்ளார். இவரது மனைவி ஷர்மிளா கோவை மாநகராட்சி 38 வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.

வருமான வரி சோதனை
என்ஜினியரான சந்திரசேகர் கோவை மாநகராட்சி ஒப்பந்த பணிகள் மட்டுமின்றி ரியல் எஸ்டேட், பைனான்ஸ் உள்பட பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார். இந்நிலையில் தான் நேற்று திடீரென்று கோவையில் சந்திரசேகரின் வீட்டில் வருமான விரித்துறையினர் சோதனையை தொடங்கினர். இதேபோல் அவிநாசி சாலையில் உள்ள அவரது அலுவலம், வடவள்ளியில் உள்ள சந்திரசேகரின் சகோதரர் வீடு, பிஎன் புதூரில் உள்ள அவரது தந்தை வீடு உள்பட 6 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 10 இந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

2வது நாளாக சோதனை
இந்நிலையில் 2வது நாளாக இன்றும் சந்திரசேகருக்கு நெருக்கமானவர்களின் வீடு, பீளமேட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின்போதும் முக்கிய ஆவணங்கள் கைபற்ற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கு முன் லஞ்ச ஒழிப்பு சோதனை
இதற்கு முன்பு எஸ்பி வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது சந்திரசேகரின் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அருப்புக்கோட்டையிலும் ரெய்டு
முன்னதாக நேற்று விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டடை அனந்தபுரி நகரில் செய்யாத்துரையின் வீடு, அலுவலகத்திலும் வருமான வரித்துறை சோதனை நடந்தது. இவர் அதிமுக ஆட்சியின்போது நெடுஞ்சாலைத்துறையின் சாலை பணியை டெண்டர் எடுத்து மேற்கொண்டு வந்தார். இவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமானவர் என கூறப்படும் நிலையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-
தேன்கூட்டில் கல்லெறிந்ததா தவெக? வேலுமணி கிட்ட சிவி சண்முகம் கேட்ட அந்த கேள்வி? அப்ப எடப்பாடி முடிவு? -
சிரித்து சமாளித்த எடப்பாடி.. வேலையைக் காட்டிய வேலுமணி! வெறுப்பில் சிவி சண்முகம்! இனிமே தான் ட்விஸ்ட் -
வேலுமணி அணி வைத்த டிமாண்ட்.. எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்? அதிமுகவுக்கு குட் நியூஸ்! -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications