தமிழிசை பயணித்த வழியில் சாலையோரம் நின்ற ‘மர்ம’ கார்.. அலறியடித்து ஓடிவந்த பாம் ஸ்குவாட்.. என்னாச்சு?
கோவை : கோவையில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செல்லும் வழியில் சாலையோரம் நீண்ட நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தின் எதிரொலியாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை வருகையையொட்டி போலீசார் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழிசை சௌந்தரராஜன் செல்லவிருந்த கோவை அவிநாசி சாலையில் சாலையோரத்தில் நீண்ட நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை சம்பவம்
கோவை உக்கடம் அருகே கடந்த அக்டோபர் 23ஆம் தேதி காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கார் சிலிண்டர் வெடிப்பில் பலியான ஜமேசா முபின் பற்றி பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. ஜமேசா முபின் கூட்டாளிகள் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வெடி பொருட்கள், சதி என விவகாரம் பெரிதாக இருப்பதால் விசாரணையை என்.ஐ.ஏவுக்கு மாற்றி தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.

பாதுகாப்பு தீவிரம்
தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு குறித்தும், கோவை வெடி விபத்தில் அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. உளவுத்துறை, காவல்துறையை பலப்படுத்துவது பற்றி முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன. கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, கோவை முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் தமிழிசை செல்லும் வழியில்
இந்நிலையில், தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், தனது உறவினர் இல்லத் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று கோவை வருகை தந்தார். அவர் வரும் வழியில் வழக்கத்தை விட தீவிரமாக பாதுகாப்பு சோதனையில் போலீசார் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

சல்லடை போட்ட வெடிகுண்டு நிபுணர்கள்
தமிழிசை செல்லும் வழியான கோவை - அவிநாசி சாலையில் உள்ள அண்ணா சிலை பகுதியில் சாலையோரம் கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த காரை எடுக்க நீண்ட நேரமாக யாரும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த போலீசார் வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து சோதனை நடத்தினர். அந்த கார் முழுவதும் சோதனை செய்யப்பட்டதில், அதில் வெடிகுண்டுகளோ, வெடிபொருட்களோ ஏதும் இல்லை எனத் தெரியவந்தது.

கார் உரிமையாளர்
அதைத் தொடர்ந்து காரின் உரிமையாளர் கண்டறியப்பட்டு, அவரிடம் கார் ஒப்படைக்கப்பட்டது. அந்த காரின் உரிமையாளர் காரை நிறுத்திவிட்டு, அலுவலகத்திற்குச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக அவரை அங்கிருந்து காரை எடுத்துச் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கார் வேட்டை
கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தின் எதிரொலியாக கோவை முழுவதும் சாலைகளில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த கார்களை போலீசார் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர். நேற்று 13 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு 5 கார்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications