பெண்ணாக பிறந்திருக்கலாமோ என நினைத்திருக்கிறேன்! எனக்கு ரெண்டு பொண்ணு மட்டும் இல்லை! உருகிய கமல்ஹாசன்
கோவை : இரண்டு முறை புடவை கட்டி பெண்ணாக நடித்து இருக்கின்றேன். அப்போதே பெண்ணாக பிறந்து இருக்கலாமோ என்று நினைத்திருக்கின்றேன் என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.
கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக, மகளிருக்கான மய்யம் விருதுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் விருதுகளை வழங்கி பாராட்டினார்.

கமலஹாசன்
பின்னர் விழாவில் பேசிய கமலஹாசன்," உலகில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்தவர்கள் சாமானியர்கள் எனவும், மாற்றம் நம்மில் இருந்து துவங்க வேண்டும். புலம்புவதால் பிரயோஜனம் இல்லை. காந்தி வந்தவுடன் சுதந்திரம் கிடைத்து விடவில்லை. பொறுமையாக இருந்து தன் பணியை செய்து முடித்து விட்டு போனார். பார்வையாளர்கள் அனைவருமே மாற்றத்தின் விதைகள். பீடிகைகளுக்கு நேரமில்லை, வேலையில் இறங்கனும், அதைத்தான் நாங்கள் செய்கின்றோம்

பெண்ணாக பிறந்த இருக்கலாமோ
மகாத்மா என்று காந்தியை நான் கூப்பிடுவதில்லை, நான் அவர் சந்ததி என நம்புகின்றேன். இரண்டு முறை புடவை கட்டி பெண்ணாக நடத்தி இருக்கின்றேன். அப்போதே பெண்ணாக பிறந்த இருக்கலாமோ என்று நினைத்திருக்கின்றேன். பெருமை படக்கூடிய பிறவி பெண். இரண்டு பெண் குழந்தைகளுக்கு தந்தை என சொல்கின்றனர். அது இல்லை .

பெற்றால்தான் பிள்ளையா
தெரியாமல் நிலவும் பல அவலங்கள் இங்கு உண்டு.35 ஆயிரம் குழந்தைகள் எய்ட்ஸ் பாதிக்கபட்ட பெற்றோரால் பாசிட்டிவ் ஆன குழந்தைகள். அவர்களில் பிழைக்க வாய்ப்பில்லை என்ற 2000 குழந்தைகளை தேர்வு செய்து அதன் தந்தையாக இருக்க பெற்றால்தான் பிள்ளையா என்ற அமைப்பை உருவாக்கினோம். அதற்கு மருந்தை கண்டு பிடித்தார்கள்.

பெண்களுக்கு ஊதியம்
சிறிய விழுக்காடு மரணத்தை தவிர பலர் அதில் பிழைத்து பல்வேறு பணிகளில் இருக்கின்றனர். பெற்றால்தான் பிள்ளையா அமைப்பின் மூலம் அதை செய்ய முடிந்தது. பெண்களுக்கு தமிழக அரசு ஊதியம் வழங்க வேண்டும் எனவும், தாய் நாடு, தாய் மண் என்று சொல்கின்றனர் , ஆனால் ஊதியம் வழங்குவதை பின்னர் செஞ்சிலாம் என்ற வாக்குறுதி கொடுக்கின்றனர் எனவும் அது போதாது, வாக்குறுதியை, அழுத்தம் கொடுத்துசெய்ய வைக்க வேண்டும்" என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications