தன்னானே "தாமரை" பூ.. பாஜக குஷ்பு ஆடிய வள்ளி கும்மியாட்டம்! பொங்கல் விழாவில் ஜாலியோ ஜாலி அண்ணாச்சி!
கோவை : கோவையில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பாஜக சார்பில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் காளைகள் சீறி பாய்ந்த நிலையில், பிரபல நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெண்களுடன் வள்ளி கும்மியாட்டம் ஆடி அசத்தினார்.
1990 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடிகையாகவும் குணசித்திர பாத்திரங்களில் நடித்தும் முக்கிய இடம் பிடித்தவர் நடிகை குஷ்பு.
இவர் நடிகர் பிரபுவுடன் சின்னத்தம்பி, ரஜினியுடன் நடித்த அண்ணாமலை, சரத்குமாருடன் நாட்டாமை என நடித்த அடுத்தடுத்த படங்கள் அதிரிபுதிரி ஹிட் ஆகிய நிலையில் தற்போது வரை தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார்.

நடிகை குஷ்பு
ரஜினி கமல் உள்ளிட்ட மூத்த நாயகர்களுடன் நாயகியாக கரம் கோர்த்த அவர் விஜய் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்ட அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் இதனிடையே திமுக காங்கிரஸில் இருந்த அவர் தற்போது பாஜகவில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். பாஜகவின் தேசிய அளவிலான பொறுப்பில் இருக்கும் அவர் பாஜக குறித்தும் அரசியல் நிகழ்வுகள் குறித்தும் காரசாரமான கருத்துக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

ஆக்டிவ் அரசியல்
சினிமாவில் இருந்தாலும் சரி அரசியலில் இருந்தாலும் சரி சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். குறிப்பாக சற்று உடல் பருமனோடு இருந்த குஷ்பு தற்போது உடல் எடையை வெகுவாக குறைத்து இருக்கும் நிலையில் அது தொடர்பான சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியாகி பலரும் குஷ்புவை புகழ்ந்து தள்ளினர்.

பிசி பெண்
தற்போது ஓரிரு படங்களில் நடித்து வரும் குஷ்பு அரசியல் எப்போதும் ஹாட் டாபிக்காகவே இருப்பார். அரசியல் சினிமா என பிசியாக இருந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடனம் பாட்டு என மகிழ்ச்சியாகவே இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் குஷ்பு அங்குள்ள பெண்களுடன் நடனமாடி கலக்கினார்.

பொங்கல் விழா
இந்நிலையில் கோவையில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பாஜக சார்பில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் காளைகள் சீறி பாய்ந்த நிலையில், பிரபல நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெண்களுடன் வள்ளி கும்மியாட்ட ஆடி அசத்தினார். கோவையை அடுத்த வெள்ளலூர் நெடுஞ்சாலை அருகே பாஜக சார்பில் நம்ம ஊர் பொங்கல் திருவிழா நடைபெற்றது.

உற்சாக நடனம்
பாஜக தெற்கு மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்ற விழாவில் நடிகையும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு சுந்தர் கலந்து கொண்டார். முன்னதாக அப்பகுதியை சேர்ந்த மக்களுடன் குஷ்பு பொங்கல் வைத்து வழிபட்டு பொங்கலை பரிமாறிக் கொண்டதுடன், வண்ண உடைகளுடன் வள்ளி கும்மியாட்டம் ஆடி அசத்தினார். இதனை தொடர்ந்து ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. குஷ்பு ரேக்ளா வண்டியின் மீது ஏறி கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதனையடுத்து காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications