"எஃகு கோட்டை" கோவையில் அதிமுகவிற்கு அடி! எதிர்க்கட்சியாக கூட வரமுடியவில்லை! திருச்சியிலும் அதே சோகம்
கோவை மாநகராட்சியை திமுக கைப்பற்றிய நிலையில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 2வது இடத்தைப் பிடித்துள்ளது. திருச்சி மாநகராட்சியிலும் 2வது இடத்தை காங்கிரஸ் கட்சியே பிடித்துள்ளது.
கோவை: நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பரிதாபகரமான தோல்வியை தழுவியுள்ளது. கோவை, திருச்சியில் எதிர்கட்சி அந்தஸ்தையும் இழந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி கோவை, திருச்சி மாநகராட்சியில் எதிர்கட்சி அந்தஸ்தில் அமரப்போகிறது.
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு நடத்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்றைய தினம் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதில், 21 மாநகராட்சிகளையும் தி.மு.கவும் அதன் கூட்டணி கட்சிகளும் கைப்பற்றியுள்ளது அதேவேளையில் எதிர்க்கட்சிகளான அ.தி.மு.கவும், பா.ஜ.கவும் படுதோல்வியடைந்தது. அந்த வகையில் கோவையில் 5வது இடத்திற்கும், திருச்சி மாநகராட்சியில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கிறது அதிமுக.

100 வார்டில் 73 ஐ அள்ளிய திமுக
திமுக 100 வார்டுகளில் 73 வார்டுகளை தனியாக வென்றுள்ளது. 8 மாதத்திற்கு முன் 0 எம்எல்ஏ என்ற நிலையில் இருந்து மாநகராட்சி மேயர் என்ற நிலைக்கு திமுக அசுர வேகத்தில் வந்துள்ளது. காங்கிரஸ் 9 வார்டுகளைக் கைப்பற்றி எதிர்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது. சிபிஎம், சிபிஐ தலா 4 வார்டுகளைக் கைப்பற்றியுள்ளன. மதிமுக 3 வார்டுகளையும் மமக 1 இடத்திலும் வென்றுள்ளது. கொமதேக 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

அதிமுக 3 வார்டுதான்
மாநகராட்சி மேயர் என்ற அந்தஸ்தில் இருந்த அதிமுக 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடந்த முறை கோவை மேயர் பதவியை பிடித்த அதிமுக தற்போது வெறும் 3 வார்டுகளை மட்டுமே பிடித்துள்ளது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் காட்சிகளை விட அதிமுக பின்னுக்குத் தள்ளப்பட்டதால் கட்சியின் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எதிர்கட்சி அந்தஸ்தை இழந்ததோடு மட்டுமல்லாது ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கோவையில் அதிமுக வேட்பாளர்கள் 21 வார்டுகளில் டெபாசிட் இழந்த சோகமும் அரங்கேறியுள்ளது.

திருச்சியில் திமுக அமோகம்
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளில் திமுக நேரடியாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 51 இடங்களில் 49 இடங்களை கைப்பற்றியது. அதேபோல் திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த காங்கிரஸ் கொடுக்கப்பட்ட 5 இடங்களை முழுமையாக கைப்பற்றியது.

அதிமுகவிற்கு 3வது இடம்
மதிமுக 2 இடங்களிலும், சிபிஎம் 1 இடத்தையும், விசிக 1 இடத்தையும், சிபிஐ 1 இடத்தையும், அதிமுக 3 இடங்களையும், அமமுக 1 இடத்தையும், சுயேட்சை வேட்பாளா்கள் 2 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். திருச்சி மாநகராட்சியிலும் அதிமுக எதிர்கட்சி அந்தஸ்தை இழந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

நகராட்சியிலும் திமுக ஆட்டம்
திருச்சியில் உள்ள 5 நகராட்சிகளில் மொத்தம் 120 வார்டுகள் உள்ளன. இதில், 1 வார்டில் போட்டியின்றி வேட்பாளர் வெற்றி பெற்றதால். 119 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் திமுக 68 வார்டுகளையும், அதிமுக 27 வார்டுகளையும், சிபிஐ 2 வார்டுகளையும், சிபிஎம் 1 வார்டையும், தேமுதிக 1 வார்டையும், காங்கிரஸ் 1 இடத்தையும் தக்க வைத்தது. மற்றவை 20 வார்டுகளையும் கைப்பற்றியது.

பேரூராட்சிகளையும் தட்டிப்பறித்த திமுக
திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 பேரூராட்சிகளில் 2 வார்டுகளில் போட்டியின்றி வேட்பாளர்கள் வெற்றி பெற்ற நிலையில், மொத்தம் உள்ள 216 வார்டுகளில், 214 வார்டுகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. அதில் திமுக 137 இடங்களை கைப்பற்றியது. அதிமுக 34 வார்டுகளையும், சிபிஐ 1 இடத்தையும், சிபிஎம் 4 இடத்தையும், தேமுதிக 1 இடத்தையும், காங்கிரஸ் 4 இடத்தையும், மற்றவை 35 வார்டுகளையும் கைப்பற்றியுள்ளன.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications