பொள்ளாச்சியில் அடித்து நொறுக்கப்பட்டது என்னுடைய பார் அல்ல- பார் நாகராஜ் பரபரப்பு பேட்டி
Recommended Video

கோவை: பொள்ளாச்சியில் அடித்து நொறுக்கப்பட்டது என்னுடைய பார் அல்ல என்று அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பார் நாகராஜ் தெரிவித்தார்.
அதிமுகவில் முக்கிய பதவியில் இருந்தவர் பார் நாகராஜ். இவர் பாலியல் புகார் கொடுத்த பெண்ணின் சகோதரனை தாக்கியதாக வழக்கு தொடரப்பட்டது. இதில் ஜாமீனில் வெளியே வந்தார்.

இதையடுத்து அதிமுக அவரை கட்சியிலிருந்து நீக்கியது. பொள்ளாச்சி சம்பவத்தில் தன்னை தொடர்புப்படுத்தியும், தான் தலைமறைவாகிவிட்டதாகவும் வதந்திகள் பரவுவது குறித்து விளக்கமளிப்பதற்காக பார் நாகராஜ் கோவை ஆட்சியர் ராஜாமணியை சந்தித்து மனு அளித்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புள்ள திருநாவுக்கரசு, சதீஷ் ஆகியோர் எனக்கு நட்பு ரீதியாக மட்டுமே பழக்கம். நான் அதிமுகவில் இருப்பதால் என் மீது வேண்டாதவர்கள் இந்த பிரச்னையை பெருசாக்க நினைக்கிறார்கள்.
மேலும் என் மீது பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணணை மிரட்டியதாக அடிதடி வழக்கு இருந்தது. அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு மாஜிஸ்ரேட் என்னை ஜாமீனில் வெளியிட்டார். இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை.
நான் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை மிரட்டவே இல்லை. இதனை அவரிடமே கேட்டு பாருங்கள்.
பொள்ளாச்சி பாலியல் தொடர்பாக வெளியான வீடியோவில் என்னை மார்பிங் செய்து வெளியிட்டு உள்ளார்கள். அதற்கான ஆதாரமும் என்னிடம் உள்ளது.
நான் பார் தொழிலை விட்டு 10 மாதங்கள் ஆகிவிட்டன. பொள்ளாச்சியில் அடித்து நொறுக்கப்பட்ட பார் என்னுடையது இல்லை.
நான் தலைமறைவாக உள்ளேன் என வதந்திகளும் பரவுகின்றன அதுவும் பொய். இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க வந்துள்ளேன் என்றார் பார் நாகராஜ்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications