கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோவையில் முதல்வர்.. திருப்பூரில் ராகுல் காந்தி.. கோலாகல கொண்டாட்டத்தில் கொங்கு மண்டலம்!

Google Oneindia Tamil News

கோவை: ஒருபக்கம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரம்.. மறுபக்கம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வருகை என கொங்கு மண்டலமே இன்று விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது.

Recommended Video

    #BREAKING கோவையில் ராகுல் காந்தி..!

    திருப்பூரில் தேர்தல் பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகை தந்துள்ளார். இதனால் அந்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அவர் கோவையில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மாலை 3.30 மணிக்கு அவினாசி வருகிறார்.

    இதைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு திருப்பூர் ரயில் நிலையம் முன்புறம் உள்ள குமரன் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி பிரச்சாரம் செய்கிறார். பின்னர் மாலை 5.45 மணிக்கு திருப்பூர்- பல்லடம் சாலையில் தொழிற்சங்கத்தினருடன் கலந்துரையாடல் நடத்துகிறார். இதையடுத்து திருப்பூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார்.

    எடப்பாடியார்

    எடப்பாடியார்

    மறுபக்கம் முதல்வர் எடப்பாடியார் கோவையில் பிரச்சாரத்தில் குதித்துள்ளார். இதனால் கோவை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சாலையோர பிரச்சாரத்திற்காக கோவை நகரம் தயாராகி வருகிறது.

    ராகுல் காந்தி

    ராகுல் காந்தி

    முதல்வர் ஒரு நகரிலும், ராகுல் காந்தி இன்னொரு நகரிலும் என கொங்கு மண்டலத்தை அதகளப்படுத்தி வருவதால் இரு கட்சி தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாகும். ஆனால் அதில் பெரிய ஓட்டையைப் போட திமுக தீவிரமாக உள்ளது.

    உத்வேகம்

    உத்வேகம்

    இந்த நிலையில்தான் திமுக கூட்டணியின் முக்கியக் கட்சியான காங்கிரஸின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி இங்கு முகாமிட்டிருப்பது திமுக கூட்டணிக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. அதிலும் திருப்பூர் குமரனைக் கொடுத்த திருப்பூரில் காங்கிரஸ் பிரச்சாரம் நடப்பது அந்தக் கட்சியினருக்கும்பெரும் உத்வேகத்தைக் கொடுத்துள்ளது.

    அனல் பறக்கிறது

    அனல் பறக்கிறது

    முதல்வரும், ராகுல் காந்தியும் இங்கு மேற்கொள்ளும் பிரச்சாரத்திற்கு பாஜக எப்படி பதிலடி தரப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். கோவையில் பேசிய ராகுல்காந்தி, பிரதமர் மோடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    CM Edappadi Palanisamy and Rahul Gandhi are doing campaign in Kongu belt.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X